|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Thursday, August 23, 2007

நிரபராதிக்கு சிறை தண்டனை! குற்றவாளிக்கு பாதுகாப்பு!! நீதியின் விலை?

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

ஒரு குற்றத்தை செய்தவர் தலை மறைவாகிவிட்டால் அவரை பிடிக்க போலீசார் தனிப்படை அமைப்பார்கள், வலைவீசி தேடுவார்கள். ஆனால் அதற்கு மாறாக அவர் மேலும் குற்றம் செய்யும் விதம் போலீசார் அவருக்கு பந்தோபஸ்து வழங்குவதை கேள்விபட்டிருக்கிறீர்களா ! இன்றைய தமிழக அரசும் காவல்துறையும் அதைத்தான் செய்துகொண்டிருக்கின்றன.

கொலைமிரட்டல் உட்பட உள்ள பல வழக்குகள் நிலுவையிலிருக்கும் போது பி.ஜே.பி.யின் உமாபாரதி தமிழகத்திற்கு வந்து சென்றிருக்கிறார். அரெஸ்ட் வாரண்டை கையில் வைத்துக்கொண்டிருக்கும் காவல்துறை, அவரை கைது செய்யாமல் வேடிக்கை பார்த்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அவருக்கு பந்தோபஸ்தும் வழங்கியிருக்கிறது. இது தான் நம் நாட்டு நீதிதுறையின அவலநிலை. தமிழகத்திற்கு வந்து சென்றதோடு மட்டுமல்லாமல் சென்னையில் பத்திரிகையாளர்களுக்கு மத்தியில் பேசும்போது 'என்ன நடந்தாலும் ராமர்பாலத்தை பாதுகாப்போம், முடியுமானால் தன்னை கைது பண்ணுங்கள் பார்க்கலாம்' என்று தமிழக அரசிற்கு சவால் விட்டுள்ளார். அரசுக்கு சவால் விட்டு சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் அவரை கைது செய்ய முடியாத இந்த கையாலாகாத அரசு வாயில் விரலை வைத்து வேடிக்கை பார்த்திருக்கிறது.

கடந்த மாதம் ராமேஸ்வரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் மத நல்லிணக்கத்தை கெடுக்கும் விதத்தில் பேசியதற்காகவும் அரசு அதிகாரிகளை கொன்று விடுவதாக கொலை மிரட்டல் விடுத்ததற்காகவும் அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு அரெஸ்ட் வாரண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. போலீசார் அவரை ரோந்து செல்லும் போது பிடிக்க தேவையில்லை, வலை வீச வேண்டியதில்லை, தனிப்படை அமைக்க வேண்டியதுமில்லை.கண்ணுக்கு முன்பாக நிற்கிறார். தமிழகத்திற்கே வந்த அவரை காவல்துறை கைது செய்யாமல் விட்டிருக்கிறது. ஆனால் எந்த குற்றமும் செய்யாத மதானிக்கு 9 வருடம் சிறைத்தண்டனை வழங்கியிருக்கிறது. இதற்கு நீதித்துறையும் காவல்துறையும் என்ன பதில் சொல்லப்போகிறது.

-முஹம்மது மாஹீன்

5 Comments:

At 5:35 PM, Blogger Senthil Alagu Perumal said...

// நிரபராதிக்கு சிறை தண்டனை! குற்றவாளிக்கு பாதுகாப்பு!! //

இது எல்லாம் ஷரியா சட்டத்தின் கொள்கை. இந்திய சட்டம் இதற்கு இடம் கொடுக்காது. இங்கு சவுதி அரேபியா வந்து பாருங்கள். எத்தனை நிரபராதிகளின் தலை அநியாயமாக துண்டிக்கப் படுகிறது. அவர்களின் (ஷரியாவின்) கொள்கை எத்தனை நிரபராதிகள் தண்டிக்கப் பட்டாலும் சட்டம் நிலை நாட்டப் பட வேண்டும் என்பது.

// 'என்ன நடந்தாலும் ராமர்பாலத்தை பாதுகாப்போம், முடியுமானால் தன்னை கைது பண்ணுங்கள் பார்க்கலாம்' //

இராமர் பாலம் என்பது ஒரு பவளப் பறைகளின் தொடர்ச்சி. அது எத்தனை உயிரினங்களை பாதுகாக்கிறது என்று தங்களுக்கு தெரியுமா? நாசா விண்வெளி இதை நிரூபித்துள்ளது. மனிதனது சுய நலத்திற்காக உயிரினங்களை கெடுப்பது பாவமாகாதா?

 
At 1:16 PM, Blogger அபிவிருத்தி said...

உமாபாரதி மீது வழக்கு பதிவு செய்து பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டும் அவர் கைது செய்யப்படவில்லை என்பது உலகறிந்த உண்மை. கேரள மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் அப்துன்நாசர் மதானி மீது பொய் வழக்கு போட்டு 9 ஆண்டுகள் சிறையில் அடைத்து பிறகு அவர் நிரபராதி என்று நீதிமன்றம் விடுவித்ததும் உலகறிந்த உண்மை.

இந்த இரண்டு விசயங்களை மையமாக கொண்டு கட்டுரை எழுதிய சகோதரர் மாஹின் அவர்கள் இந்த விசயத்தில் இந்திய சட்டத்தை விமர்சிக்கவில்லை. மாறாக ஆள்வோரின் பாரபட்சமான நடவடிக்கையையே சுட்டிக்காட்டியுள்ளார். அது புரியாமல் புலம்பித் தீர்ப்பது கண்னை மூடிக்கொண்டு உலகம் இருட்டு என்று சொல்வதற்கு சமம்.

அதுபோல், சவுதி அரேபியாவில் தண்டிக்கப்பட்ட நிரபராதிகளின் பட்டியலை அன்புகூர்ந்து சகோதரர் செந்தில் அழகு வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். சகோதரர் செந்தில் அழகு சவுதி அரேபியாவில் இருப்பதால் இது அவருக்கு சுலபமான வேலையாக இருக்கும். வேலை பளு, நேரமில்லை என்று சொல்லி நழுவ வேண்டாம்.

இராமர் பாலம் என்ற ஒன்று கிடையவே கிடையாது என்று மத்திய அமைச்சர் திரு. டி.ஆர்.பாலு திட்டவட்டமாக மறுத்திருக்கிறார். விஞ்ஞான ரீதியாக நிரூபிக்க முடியாது என்பதை உணர்ந்த சங்க்பரிவார்கள் பவளப் பாறையின் தொடர்ச்சி, உயிரினங்கள் அழிவு என்று பிதற்றி வருகிறார்கள். சூரத், மீரட், மும்பை மற்றும் குஜராத் போன்ற பகுதிகளிலே அப்பாவி மனித உயிர்களை கொன்று குவித்த சங்க்பரிவார்களுக்கு கடல்வாழ் உயிரினங்கள் அழிவு பற்றி பேச என்ன உரிமை இருக்கிறது?

கட்டுரைகளை சரியாக படிக்காமல் வெறும் இஸ்லாம் மற்றும் முஸ்லிம் எதிர்ப்பை மட்டும் பதிவு செய்ய முயற்சிக்கும் சகோதரர் செந்தில் அவர்களே உங்களுடைய இருள் சூழ்ந்த சிந்தனை உறக்கத்தை வெளிச்சம் கெடுத்தால் உங்களுடைய போர்வையை இழுத்து முகத்தை மூடிக்கொள்ளுங்கள். உங்கள் போர்வையை நீக்கி வெளிச்சம் பாய்ச்ச எங்களுக்கு உரிமை இல்லை, அனுமதியும் இல்லை.

நன்றி,
அபிவிருத்தி (எ) பரக்கத் அலி.ஏ.ஆர்

 
At 5:08 PM, Blogger Senthil Alagu Perumal said...

வாங்க பிரதர் நான் உங்களைத் தான் எதிர்ப் பார்த்தேன். நான் என்ன உங்களைப் போல வேலை வெட்டி இல்லாத ஆள்னு நினைச்சீங்களா? நான் எனது Tight Scheduleலில் இரவு சிறிது நேரம் இதற்காக ஒதுக்குவேன். உங்களைப் பேல ஃபுல் டைம் இதற்காக நேரம் வீணடிக்க மாட்டேன். என்னைப் பொருத்தவரை சாதி சமயம் எல்லாம் ஒரு வேஸ்ட் ஆஃப் டைம். உங்களைப் போல அல்ல. எந்த ஒரு சாதியும் சமயமும் உங்களுக்கு உழைக்காமல் சோறு போடுமா??

// வேலை பளு, நேரமில்லை என்று சொல்லி நழுவ வேண்டாம். //
நான் எதற்கு நழுவ வேண்டும், என்ன உங்களிடம் பயமா??

// பவளப் பாறையின் தொடர்ச்சி, உயிரினங்கள் அழிவு என்று பிதற்றி வருகிறார்கள //

இது பிதற்றல் என்றால் நீங்கள் சொல்வது என்ன. அங்கு சென்றுள்ளீர்களா கூறும். இராமேஸ்வரம் சுற்றியுள்ள கடல் தமிழ் நாடு வனத்துறையிடம் உள்ளது. இது முதலில் உங்களுக்கு தெரியுமா? சும்மா தேவை இல்லாமல், ஒன்னும் தெரியாமல் வாதாடக் கூடாது. ஏன் வனத்துறையிடம் உள்ளது, அங்குள்ள ஒப்பற்ற பவளப் பாறைகளையும், அங்கு அடைக்கலமிட்டுள்ள உயிரினங்களையும் பாதுகாக்க !! இது தெரியாமல் உளரக் கூடாது. எனது நண்பரது மைத்துனர் வனத்துறையில் பணிபுரிகிறார். அவரை வைத்து நாங்கள் அங்கு சுற்றுலா சென்று பவளப் பாறைகளை என் கண்களால் கண்டதனால் தான் கூறுகிறேன்.

// சவுதி அரேபியாவில் தண்டிக்கப்பட்ட நிரபராதிகளின் பட்டியலை அன்புகூர்ந்து சகோதரர் செந்தில் அழகு வெளியிட வேண்டும் //

சென்ற வருடம் கூட தமாமில் ஒரு மலையாளியில் தலையை வெட்டினார்கள். அவரது மேல் கஞ்சா கடத்தல் வழக்கு. ஆனால் உண்மை என்ன வெனில் அவரிடம் மற்றொருவர் தனது பெட்டியைக் கொடுத்துவிட்டு சென்றார். பாவம் மாட்டிக்கொண்டவர் அவர். இங்கு Human Right Commission இல்லாததால் ஒன்றும் செய்ய முடியாது. இங்கு வந்து பாரும் எல்லாம் புரியும். இன்னும் பல இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

 
At 10:54 PM, Blogger அபிவிருத்தி said...

செந்தில் அழகு நண்பா!

அபிவிருத்தி என்ற பெயர் எப்பொழுது வரும் என்று அரிவாளை (அறிவு வாள்) தீட்டிக்கொண்டிருந்திருக்கிறீர்கள்.

பரக்கத் என்ற அரபி பெயருக்கு அபிவிருத்தி என்று பொருள். நீங்கள் நினைப்பது போல் பரக்கத்தும் அபிவிருத்தியும் வெவ்வேறு அல்ல.

உழைக்காமல் இருந்தால் சாதி, சமயம் சோறு போடும் என்று நான் எங்கேயும் சொல்லவில்லையே நண்பா?

நேரம் கிடைக்கும் போது பதில் எழுதுகிறேன் என்று சொல்லி ஒரு பதில் மின்னஞ்சல் எனக்கு அனுப்பியிருந்தீர்கள். அதன் பிறகு பலமுறை மறுமொழி நீங்கள் இட்டிருப்பதை கண்டேன். அதனால் உங்களுக்கு நேரம் இருப்பதாக கருதினேன். இருந்தும் பதில் வரவில்லையே ஒரு வேளை நழுவுகிறாரோ என்று இறுதியாக நினைத்து விட்டேன். நீங்களாக இருந்தாலும் இப்படித்தானே நினைப்பீர்கள்?

நழுவுதல் என்ற வார்த்தை பிரயோகம் பயம் என்ற பொருளை உணர்த்த நான் பயன்படுத்தவில்லை.

பவளப்பாறை, மலையாளி தலை வெட்டு தொடர்பாக இன்ஷா அல்லாஹ் விரிவாக எழுத முயற்சிக்கிறேன்.

இன்னொரு முக்கியமான விசயம் நானும் சவுதி அரேபியாவில் தான் இருக்கேன்.

நன்றி,
அபிவிருத்தி (எ) பரக்கத் அலி ஏ.ஆர்

 
At 4:28 PM, Blogger Unknown said...

அன்பு சகோதரர் செந்தில் அழகிற்கு நன்றி. தங்கள் பெயரில் தான் அழகு இருக்கிறதே தவிர எழுத்தில் இல்லை. \\ இது எல்லாம் ஷரியா சட்டத்தின் கொள்கை. இந்திய சட்டம் இதற்கு இடம் கொடுக்காது.\\

இந்தியாவில் நடந்ததை தான் நான் குறிப்பிட்டேன்.மதானி 9 வருடமாக சிறை தண்டனை அனுபவிக்கவில்லை என்கிறீர்களா ? உமாபாரதிக்கு கைது வாரண்ட் பிறப்பிக்க வில்லை என்கிறீர்களா ?

நடக்காத ஒரு விஷயத்தை நான் நடந்ததாக கூறினேனா ?இந்திய சட்டம் சிலர் மீது பாய்வதற்கு பயப்படுகிறது ஆனால் சிலர் மீது அவசியமின்றி அநியாயமாய் பாய்ந்து பிடுங்குகிறது என்ற என்னுடைய அச்சத்திற்கு உங்களுடைய பதிலென்ன ?

\\ இராமர் பாலம் என்பது ஒரு பவளப் பறைகளின் தொடர்ச்சி. அது எத்தனை உயிரினங்களை பாதுகாக்கிறது என்று தங்களுக்கு தெரியுமா? நாசா விண்வெளி இதை நிரூபித்துள்ளது. மனிதனது சுய நலத்திற்காக உயிரினங்களை கெடுப்பது பாவமாகாதா?\\

இப்படி நீங்கள் சொல்கிறீர்கள் ஆனால் உமாபாரதியோ ராமர் பாலம் ராமரால் கட்டப்பட்டது எனவே அதை எங்கள் உயிரை (அரசியலுக்காக அப்பாவிகளின் உயிரை) கொடுத்தாவது பாதுகாப்போம் என்று கூறுகிறார்.நீங்கள் கூறுவதற்கும் அவர் கூறுவதற்கும் சம்பந்தம் இல்லையே!

இனி உங்களுடைய கேள்விக்கு வருகிறேன். \\ மனிதனது சுய நலத்திற்காக உயிரினங்களை கெடுப்பது பாவமாகாதா?\\ பவளப்பாறையினால் பாதுகாக்கப்பட்ட அந்த உயிரினங்கள் (மீன்கள்) யாருக்கு பயன்படுகின்றது.நீங்கள் மீன் சாப்பிடுவதில்லையா? \\ மனிதனது சுய நலத்திற்காக உயிரினங்களை கெடுப்பது பாவமாகாதா?\\



முஹம்மது மாஹீன்

 

Post a Comment

<< Home