|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Monday, August 20, 2007

அர்த்தமற்ற பண்டிகைக்கொண்டாட்டம்.

'மதங்கள் அர்த்தமற்றவை' எனக் கூறும் சிந்தனையாளர்கள் பண்டிகைகள் கொண்டாடும் முறைகளைப் பார்த்து விட்டு மதங்களை வெறுக்கின்றனர்.

''நாம் மகிழ்ச்சியுடன் இருப்பதற்காக மற்றவர்களைத் துன்பத்திற்குள்ளாக்குவது எப்படி அர்த்தமுள்ள செயலாக இருக்கும்?'' என்று அவர்கள் எண்ணுகின்றனர்.

பண்டிகைகளின் போது பலவிதமான பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன. அந்தச் சப்தமும், நெருப்பினால் ஏற்படும் வர்ண ஜாலங்களும் நமக்குச் சிறிது நேர மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றன.

ஆனால், அதனால் ஏற்படும் விளைவுகள் மோசமாக உள்ளன.

எத்தனையோ குடிசைகள் இதனால் எரிந்து சாம்பலாகின்றன.

உயிர்களும் கூட பலியாகின்றன.

அக்கம் பக்கத்தில் உள்ள அமைதியை விரும்பும் மக்களும், இதய நோயாளிகளும், தொட்டில் குழந்தைகளும் இதனால் அதிர்ச்சிக்கு உள்ளாகின்றனர்.

நச்சுப் புகையின் காரணமாக மற்றவர்களுக்கும், நமக்கும் கூட பாதிப்புகள் ஏற்படுகின்றன.

வசதி படைத்தவர்கள் விலை உயர்ந்த புதுமையான பட்டாசுகள் கொளுத்துவதைக் காணும் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வயிறு எரிகின்றது.

இப்படி இன்னும் பல தீமைகள் இதனால் ஏற்படுகின்றன.

நாம் தீப்பிடிக்காத வீட்டில் இருக்கலாம். குடிசையை இழந்த அந்த ஏழை ஒரு குடிசையை மீண்டும் உருவாக்க எத்தனை நாட்கள் உழைக்க வேண்டும்?

அவன் சிறுகச் சிறுகச் சேர்த்த அற்பமான பொருட்களை மீண்டும் சேர்க்க எத்தனை ஆண்டுகள் உழைக்க வேண்டும்?

இதையெல்லாம் எண்ணிப் பார்க்காது நடக்கும் இந்தக் கொண்டாட்டங்கள் அர்த்தமுள்ளவை தாமா? என்று சிந்தனையாளர்கள் எண்ணுகின்றனர்.

வீதிகளில் பூசனிக்காய்களை உடைத்து விபத்துக்களை ஏற்படுத்துவதும், குப்பைகளை வீதிகளில் எரிப்பதும், மாடுகளை வீதியில் விரட்டி அவற்றுக்கு ஆத்திரமூட்டுவதும், வாகனங்களில் செல்பவர்களை மறித்து வாழ்த்துச் சொல்லி அவர்களை நிலைகுலைய வைப்பதும், பஜனைப் பாடல்களை இரவு முழுவதும் உரத்த குரலில் பாடுவதும், பொது இடங்களில் ஆடல் பாடல் கும்மாளம் போடுவதும் நமக்குச் சந்தோஷமாகத் தெரிந்தாலும் இது மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாதா?

நாம் மகிழ்ச்சியாக இருப்பதற்காக மற்றவரைத் துன்புறுத்துவதில் என்ன அர்த்தமிருக்கிறது என்றும் அவர்கள் கேட்கின்றனர்.

இந்த விமர்சனத்தையும் இஸ்லாத்திற்கு எதிராக எழுப்ப முடியாது.

''தனது கையாலும் நாவாலும் பிறருக்குத் தொல்லை தராதவன் எவனோ அவனே முஸ்லிம்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

நூல்: புகாரி 10, 11, 6484

ஒரு முஸ்லிம் தனக்கோ, மற்றவருக்கோ துன்பம் இழைக்கக் கூடாது என்பதை முன்னரே விளக்கியுள்ளோம். எனவே முஸ்லிம்கள் கொண்டாடும் பண்டிகைகளில் இது போன்ற காரியங்களைச் செய்ய அனுமதி இல்லை.

முஸ்லிம்களுக்கு இரண்டு பெருநாட்களே உள்ளன.

க்ஷி இவ்விரு பெருநாட்களிலும் புத்தாடைகள் அணியலாம்.

க்ஷி சிறப்பான உணவுகள் சமைத்து உண்ணலாம்.

க்ஷி உடலுக்கு வலிமை தரும் விளையாட்டுக்களில் இவ்விரு நாட்களிலும் ஈடுபடலாம்.

க்ஷி இரண்டு பெருநாட்களிலும் நடுத்தர வர்க்கத்தினரும், வசதி படைத்தவர்களும் தான தர்மங்கள் செய்தல்

க்ஷி அதிகாலையில் சிறப்புத் தொழுகையில் ஈடுபடுதல், இறைவனிடம் நல்லருளை வேண்டுதல்

க்ஷி உடலுக்கு வலிமை சேர்க்கும் வீர விளையாட்டுக்களில் ஈடுபடுதல்

போன்றவை தான் இஸ்லாமியப் பண்டிகைகளின் போது கடைப்பிடிக்க வேண்டியவை.

எந்த முஸ்லிமுக்கும், முஸ்லிமல்லாத மக்களுக்கும் இப்பண்டிகைகளால் எந்தவிதமான தொல்லைகளும் இல்லை. இறைவனைப் பற்றி நினைவு கூர்வதும், மனிதர்களுக்கு நலம் நாடுவதும் தான் இஸ்லாமியப் பண்டிகைகளில் உள்ளன.

எனவே பண்டிகைகள் என்ற பெயரால் மற்றவர்களுக்கு இடையூறு செய்யப்படுகின்றன என்ற விமர்சனமும் இஸ்லாத்துக்கு பொருந்தாது.

மதங்கள் அர்த்தமற்றவை; மனித குலத்துக்குத் தேவையில்லாதவை என்பதை நிலைநாட்டுவற்காக கூறப்படும் காரணங்களில் ஒன்று கூட இஸ்லாம் மார்க்கத்துக்கு பொருந்தாது.

எனவே இஸ்லாம் அர்த்தமுள்ள மார்க்கம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

5 Comments:

At 2:06 AM, Blogger மனிதன் said...

கேக்கரவன் கேனையனா இருந்தா கேழ்வரகுல நெய் வடியுதுன்னு சொல்வாங்களாம், அப்படி இருக்கு உங்க கருத்து. இந்து பண்டிகைகள்
மனிதனிடம் சந்தோஷத்தை கொண்டுவர உருவாக்கப்பட்டன.

நீங்க எங்க மதத்த பத்தி கருத்து சொல்றதுக்கு முந்தி உங்க மதத்த கொஞ்சம் பாருங்க.

காலையிலிருந்து சாயங்காலம் வரைக்கும் அஞ்சு வேளை, லவுட் ஸ்பீக்கர அலற உடரத மொதல்ல நிப்பாட்டுங்க. ஒரே சவுண்ட் பொல்யூஷனா இரூக்கு.

இந்த கத்தி போட்டுக்குனு எல்லாரும் ரத்த விளாறா போவாங்களே ஒரு பண்டிகை, அதை பாத்தாலே எல்லாரும் பயப்படுராங்க, அத மொதல்ல நிப்பாட்டுங்க.

அப்பறம் இந்த பக்ரீத் அன்னிக்கு கணக்கு வழக்கு இல்லாமா ஆடு, மாடு,
ஒட்டகம் எல்லாத்தையும் வெட்டி ஊரையே கவுச்சி நாத்தம் அடிக்க வெச்சு
சுற்றுப் புற சூழ்நிலையில, காற்றுல மாசு ஏற்படுதுவதை நிப்பாட்டுங்க.

பட்டாசு வெடிச்சு சூழ்நிலை பாதிக்கப் படுதாம்.உலகம் முழுவதும் குண்டு வைத்து மனிதர்களை கொல்வத மொதல்ல நிறுத்துங்க.

சாத்தான் வேதம் ஓதக் கூடாது.
அன்புடன்,
ராமச் சந்திரன்.

 
At 6:20 PM, Blogger Unknown said...

காலையிலிருந்து சாயங்காலம் வரைக்கும் அஞ்சு வேளை, (loud) லவுட் ஸ்பீக்கர அலற உடரத மொதல்ல நிப்பாட்டுங்க. ஒரே சவுண்ட் பொல்யூஷனா இரூக்கு.

பட்டாசு சப்தத்தையும், ஐவேளை தொழுகைக்கான அழைப்பு சப்தத்தையும் ஒப்பிடுவதில் ஏதேனும் அர்த்தம் உள்ளதா என்பதை திறந்த மனதுடன் நீங்களே யோசியுங்கள். பட்டாசு சப்தம் என்பது படாரென வெடிக்கக் கூடியது. தொழுகைக்கான அழைப்பு சப்தம் என்பது இதற்கு முற்றிலும் வேறானது.

இந்த கத்தி போட்டுக்குனு எல்லாரும் ரத்த விளாறா போவாங்களே ஒரு பண்டிகை, அதை பாத்தாலே எல்லாரும் பயப்படுராங்க, அத மொதல்ல நிப்பாட்டுங்க.

ஆமா.. ஆமா.. அதை பார்த்தா எங்களுக்கும் பயமாத்தான் இருக்கு.. ஆனால் அதுக்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த இரத்த விளாறாவிற்கு எதிரான கருத்து கொண்டது இஸ்லாம்.

இஸ்லாம் என்பதை திருக்குர்ஆனிலிருந்தும், இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிமுறையிலிருந்து மட்டும் தான் முஸ்லிம்கள் புரிந்து செயல்பட வேண்டும். நீங்கள் குறிப்பிடும் இரத்த விளாறாவை நடத்துபவர்களை அழைத்து இதற்கான ஆதாரத்தை திருக்குர்ஆன் மற்றும் நபி மொழியிலிருந்து காட்டச் சொல்லி கேளுங்கள்.

திருக்குர்ஆனையும், முஹம்மது நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரங்களை நன்கு உணர்ந்தவர்கள் இதற்கு எதிராக குரல் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

அப்பறம் இந்த பக்ரீத் அன்னிக்கு கணக்கு வழக்கு இல்லாமா ஆடு, மாடு, ஒட்டகம் எல்லாத்தையும் வெட்டி ஊரையே கவுச்சி நாத்தம் அடிக்க வெச்சு சுற்றுப் புற சூழ்நிலையில, காற்றுல மாசு ஏற்படுதுவதை நிப்பாட்டுங்க.

கணக்கு வழக்கு இல்லாமல் ஆடு, மாடு ஒட்டகங்கள் அறுக்கப்படுவது பக்ரீத் அன்று மட்டும் தான் என்ற உங்களுடைய கண்டுபிடிப்பு புதியதாக இருக்கிறது. அதுபோல் கவுச்சி வாடையால சுற்றுப்புற சூழல் மாசு படுகிறது என்று சொன்ன முதல் நபரும் நீங்களாகத்தான் இருப்பீர்கள்.

பக்ரீத் அல்லாத மற்ற அனைத்து நாட்களிலும் இது நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த மற்ற நாட்களில் அறுக்கப்படும் அனைத்தும் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல. அனைத்து சமுதாயத்தினரும் அதை செய்கிறார்கள், விரும்பி சாப்பிடவும் செய்கிறார்கள். நடைமுறைக்கு சாத்தியமற்ற எந்த ஒரு கருத்தையும் இஸ்லாம் தூக்கிப் பிடிக்காது.

பட்டாசு வெடிச்சு சூழ்நிலை பாதிக்கப் படுதாம். உலகம் முழுவதும் குண்டு வைத்து மனிதர்களை கொல்வத மொதல்ல நிறுத்துங்க.

அப்பாவிகள் கொல்லப்படுவதை இஸ்லாம் கண்டிக்கும் அளவிற்கு யாரும் கண்டிக்கவில்லை. மேலதிக விபரங்களை தற்கொலை தாக்குதல் இஸ்லாத்தில் கூடுமா? என்ற தலைப்பிலான கட்டுரையை இங்கே சென்று பார்க்கவும். http://velicham2006.blogspot.com/2007/08/blog-post_4635.html

 
At 11:11 AM, Blogger Senthil Alagu Perumal said...

ஹலோ நண்பரே. இப்போது நீங்களும் ரமலான் திருவிழாக்கு பட்டாசு போட தொடங்கியாச்சு. நீங்க பேசுரீங்களா? நண்பர் இராமச்சந்திரன் கூறியது போல நாய்ஸ் பொலியூசன் பற்றி நீங்க பேசக் கூடாது. ஒரு நாளுக்கு 5 வேளை ஊரையே கூப்பிடுற மாதிரி சப்தம் எழுப்புவது நீங்களா நாங்களா?? பட்டாசு தொழிலை நம்பி எத்தனை பேரது வாழ்க்கை நடக்கிறது தெரியுமா உங்களுக்கு??

செந்தில் அழகு.

 
At 5:35 PM, Blogger Unknown said...

ஹலோ நண்பரே. இப்போது நீங்களும் ரமலான் திருவிழாக்கு பட்டாசு போட தொடங்கியாச்சு. நீங்க பேசுரீங்களா?

கட்டுரையில் பண்டிகைகளின் போது பலவிதமான பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன. அந்தச் சப்தமும், நெருப்பினால் ஏற்படும் வர்ண ஜாலங்களும் நமக்குச் சிறிது நேர மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றன. ஆனால், அதனால் ஏற்படும் விளைவுகள் மோசமாக உள்ளன. என்றுதான் சொல்லப்பட்டுள்ளது. எந்த ஒரு சமுதாயத்தின் திருநாளையும் குறிப்பிட்டு சொல்லப்படவில்லை. ரமலானிற்கு பட்டாசுகள் வெடித்தால் அதையும் சேர்த்து இந்த கட்டுரை சாடுவதாகவே உணருங்கள். ரமலானிற்கு பட்டாசு வெடியுங்கள் என்று இஸ்லாம் சொல்லவில்லை என்பதையும் மேலதிக விபரத்திற்காக இங்கே சொல்லிக் கொள்கிறோம்.

நண்பர் இராமச்சந்திரன் கூறியது போல நாய்ஸ் பொலியூசன் பற்றி நீங்க பேசக் கூடாது. ஒரு நாளுக்கு 5 வேளை ஊரையே கூப்பிடுற மாதிரி சப்தம் எழுப்புவது நீங்களா நாங்களா??

பட்டாசு போன்ற வெடி மற்றும் வேட்டுக்கள் வெடிப்பதால் ஏற்படும் விபத்துக்களை பத்திரிக்கை வழியாக அனைவரும் அறிகிறோம். பட்டாசு வெடித்து சிறுமி மரணம், பட்டாசு வெடித்த அதிர்ச்சியில் வயதானவர் மரணம், பட்டாசு வெடித்ததில் குடிசைகள் தீக்கிரையாகின என்றெல்லாம் பார்க்கிறோம். ஊரையே கூப்பிடுவது போன்று 5 வேளை தொழுகைக்கான அழைப்பு கொடுத்ததில் எங்கு, எப்பொழுது, யாருக்கு கேடு விளைந்தது? ஒரு தொழுகைக்கான அழைப்பு என்பது அதிகபட்சமாக 5 நிமிடங்களை உள்ளடக்கியது. தொடர் வேட்டு, தொடர் கச்சேரி நடத்துவதற்கும் 5 வேளை தொழுகைக்கான அழைப்பிற்கும் மிகுந்த வேறுபாடு உள்ளது. 5 வேளை தொழுகைக்கான அழைப்பு என்பது சில இடங்களில் முஸ்லிமல்லாதவர்களுக்கு கூட நேரம் காட்டியாக இருந்து வருவதையும் இங்கு நினைவு கூர்வது பொருத்தமானது.

பட்டாசு தொழிலை நம்பி எத்தனை பேரது வாழ்க்கை நடக்கிறது தெரியுமா உங்களுக்கு??

கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பவர்களுக்கு அதன் வருமானத்தில் வாழ்க்கை நகர்கிறது.

டாஸ்மார்கில் வேலை செய்பவர்களுக்கு அதன் வருமானத்தில் வாழ்க்கை நடக்கிறது.

கஞ்சா, அபின் போன்ற போதை பொருளை விற்பவர்களுக்கு அதனுடைய வருமானத்தில் அவர்கள் வாழ்க்கை ஓடுகிறது.

இப்படி சில குடும்பங்கள் பயனடைந்தாலும் நம்மில் பலர் அதை ஆதரிப்பதில்லை, மாறாக அதனால் ஏற்படும் விளைவுகளை உணர்ந்ததால் அதை எதிர்க்கிறோம். அதுபோலவே இதையும் புரிந்து கொள்ள வேண்டுமே தவிர சில குடும்பங்கள் ஓடுகிறது, நடக்கிறது என்று சொல்லி தவறுகளை நியாயப்படுத்தக் கூடாது. அது நாட்டை முன்னேற்றப்பாதைக்கு அழைத்துச் செல்லாது.

 
At 6:05 PM, Blogger Senthil Alagu Perumal said...

இதிலிருந்து ஒன்று எனக்கு நன்கு புரிந்து விட்டது. நண்பர் பர்கத் விவாதம் செய்ய வேண்டுன் என்பதால் முட்டாள் தனமான விவாதம் செய்கிறார். கஞ்சா, கள்ளச் சாராயம், பட்டாசு எல்லாம் ஒன்னா? உங்கள் கனிவான கவனத்திற்கு, இங்கு சௌதி அரேபியாவிலும் (ஷரியாவைப் பின்பற்றும் இஸ்லாமிய நாடு) ஈத் திருவிழாக்கு பட்டாசு போடுவார்கள் என்றால் நம்புவீர்களா?

 

Post a Comment

<< Home