|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Thursday, August 16, 2007

இந்தியன் என்று சொல்வோம் இனவெறி நீங்கி வாழ்வோம்

நன்பர்களே,
தென்காசி சம்பவத்தை இருமதத்தவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலாக கருதாமல் இரு குழுக்களுக்குள் பழிவாங்கும் மோதலாகவே நான் கருதுகிறேன். இந்துக்களும் , முஸ்லிம்களும் முன்புபோல் மாமன், மச்சான்களாக ஒற்றுமையுடன் இருக்கவேண்டும். மற்றும் இருசாமுதாயத்தின் மனகசப்பை நீக்கக்கூடிய இஸ்லாம் ஒரு இனியமார்க்கம், மானுட வசந்தம் போன்ற நிகழ்சிகள் அதிக அளவில் நடக்க வேண்டும்.காவல்துறை முறையான பாதுகாப்பு செய்திருந்தால் தென்காசி சம்பவத்தை தவிர்த்திருக்க முடியும்.

நாம் இந்தியன் என்று சொல்வோம் இனவெறி நீங்கி வாழ்வோம்.
துரைமுருகன்.
தமாம்.

7 Comments:

At 3:48 PM, Anonymous Anonymous said...

துரைமுருகனே,
நாம் என்னதான் அனுசரித்து ஒற்றுமையை ஏற்படுத்தினாலும் இந்த முஸ்லிம்கள் திருந்த மாட்டார்கள்.ஏனென்றால் இவர்களின் மதமே இவர்களை தீவரவாத சிந்தனையின் பக்கம் செலுத்துகிறது. அன்புதமிழன்

 
At 1:16 PM, Anonymous Anonymous said...

//இவர்களின் மதமே இவர்களை தீவிரவாத சிந்தனையின் பக்கம் செலுத்துகிறது. அன்புதமிழன்//

அனானி அன்புத்தமிழா,

இப்படி ஆதரமே இல்லாமல் விட்டடிச்சா எப்படி? எதுனா ஆதாரத்தை போட்டு சொல்லுங்க தலைவா! இஸ்லாம் என்ற பெயரை சொன்னாலே உங்களுக்கெல்லாம் அதிருதுல்ல?

பண்புத்தமிழன்

 
At 4:17 PM, Blogger Senthil Alagu Perumal said...

துரை முருகன் மிகவும் நல்ல கருத்தளித்தார். பாராட்டுக்கள்.

அனானி நண்பரது வாக்கும் சிந்திக்க வேண்டியது.

பண்புத்தமிழா இதோ உங்களுக்கு சில ஆதார‌ங்கள். திருக்குர்ரானிலிருந்து எடுக்கப்பட்டவை. இல்லை என்று சொல்லுங்களேன் பார்ப்போம்.

This is what Quran teaches.

"Oh ye who believe! Murder those of the disbelievers and let them find harshness in you." Q.9:123

"Slay the idolaters wherever you find them" Q. 9: 5

"Fight those who do not believe in God and the last day... and fight People of the Book, who do not accept the religion of truth (Islam) until they pay tribute by hand, being inferior" Q. 9: 29

“Fight them on until there is no more tumult and religion becomes that of Allah” Q. 2: 193

 
At 3:40 PM, Anonymous Anonymous said...

உங்களது முதல் குற்றச்சாட்டு // Koran 9:29Fight those who do not profess the true faith (Islam) till they pay the jiziya (poll tax) with the hand of humility.
So here Prophet Mohammed is instructing a true Muslim to fight people of other religions until the unbelievers debase themselves and pay tax for their existence. So the greatness of Islam is revealed only when follwers of other religions are humiliated.// அத்தியாயம் 9 வசனம் 29 சொல்கிறது, "வேதம் அருளப்பட்டவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் விலக்கியவற்றை விலக்கி கொள்ளாமலும், உண்மை மார்க்கத்தை (இஸ்லாத்தை) ஒப்பு கொள்ளாமலும் இருக்கிறார்களோ, அவர்கள் தம் கையால் கீழ்படிதலுடன் ஜிஸ்யா (முஸ்லிமல்லாதோர் இஸ்லாமிய நாட்டில் வாழும் போது அந்த அரசாங்கத்திற்கு கட்டும் வரி) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்"
ஒவ்வொரு அரசாங்கமும் மக்களுக்கு செய்யும் நலத்திட்டங்களுக்காக, மக்களிடமிருந்து வரி வசூலித்து, அந்த பணத்திலிருந்தே செலவு செய்து வருகிறது. அந்த அடிப்படையில் இஸ்லாம் அதனுடைய கொள்கையின் படி அமையப்பட்ட இஸ்லாமிய அரசாங்கத்திற்க்கு, எப்படி வரி வசூலிக்கப்பட வேண்டும்? என்ற வழிகாட்டுதலை சொல்லித்தரும் போது, பொருளாதாரத்தில் வசதிபடைத்த முஸ்லிம்களிடமிருந்து ஜகாத் என்னும் வரியை வசூலித்து, அந்த செல்வத்திலிருந்து மக்களுடைய நல்வாழ்வு திட்டங்களுக்காக செலவு செய்ய வழி செய்துள்ளது. இந்த ஜகாத்தை, ஐந்து அடிப்படை வணக்க வழிபாடுகளில் (தொழுகை, நோன்பு, ஹஜ்) ஒன்றாக அமைத்துள்ளது. இப்போது இஸ்லாமிய அரசாங்கம் முஸ்லிம்களிடமிருந்து ஜகாத்தை, அவர்களின் வணக்க வழிபாடுகளில் அடிப்படையில் வசூலிக்கும் போது, அதன் ஆட்சியின் கீழிலிருக்கும் முஸ்லிமல்லாத மக்களிடமிருந்தும் ஜகாத்தாக வரிவசூலித்தால், அம்மக்கள் எந்த கொள்கையில் நம்பிக்கையில்லையோ, அந்த கொள்கையின் வணக்கத்தை அவர்கள் மீது நிர்பந்தமாக திணித்த மனித உரிமை மீறலாகி விடும். அதே சமயத்தில் ஒரே ஆட்சியின் கீழ் முஸ்லிம்களும், முஸ்லிமல்லாதோரும் வாழும் போது முஸ்லிம்களிடமிருந்து மட்டும் வரிவசூலித்து விட்டு, முஸ்லிமல்லாதோரிடம் வரிவசூலிக்காமலிருப்பதும் மக்களிடையே பராபட்சம் காட்டுவதாக ஆகிவிடும். எனவே நடுநிலையான கண்ணோட்டத்தில், முஸ்லிமல்லாத குடிமக்களிடம் இருந்து வரி வசூலிக்க, ஜகாத் என்பதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வரி திட்டத்தை அமுல் செய்ததது. அது தான் "ஜிஸ்யா" என்னுபதாக அழைக்கப்படுகிது.
இந்த திட்டத்தின் மூலம் முஸ்லிமல்லாதோர், இஸ்லாமிய வணக்கவழிபாட்டை செய்ய வேண்டிய நிர்பந்தத்திலிருந்து பாதுகாப்பு பெற்றார்கள். அதோடு, முஸ்லிம்கள் ஜகாத் என்ற பெயரில் அரசாங்கத்திற்க்கு வரி செலுத்தும் போது, முஸ்லிமல்லாதோர் என்ற பெயரில் அரசாங்கத்திறக்கு வரி செலுத்தி எல்லா தரப்பு மக்களும் அரசாங்கத்திறக்கு வரி செலுத்துகிறார்கள் என்னும் பாரபட்சமில்லாத சூழலும் சமுதாயத்தில் உருவாகியது. இந்த ஜிஸ்யா வரியை கட்டும் இம்மக்கள், முஸ்லிம் அரசுடைய முழுபாதுகாப்பையும், அவர்களை காக்கும் பொறுப்பையும் பெற்று கொண்டார்கள்.
இன்னும் சொல்லப்போனால், ஜகாத் முஸ்லிம்கள் மீது சுமத்திய சுமையை விட, ஜிஸ்யாவால் முஸ்லிமல்லாதோர் மீது குறைவான சுமையும், அதிகப்படியான நன்மையும் தான் இருந்தது. ஜிஸ்யாவால் முஸ்லிமல்லாதோர் முஸ்லிம்களை விட பெற்ற நன்மைகள், 1) ஜகாத் என்பது பொருளாதாரத்தில் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் வைத்துள்ள ஆண், பெண், வயோதிகன், இளைஞன், குழந்தை, அநாதை, புத்தி சுவாதீனம் இல்லாதவர் என்று எல்லா தரப்பு முஸ்லிம்களிடமிருந்து எவ்வித விதிவிலக்கும் இல்லாமல் வசூலிக்கப்பட்டது. ஆனால், ஜிஸ்யா, முஸ்லிமல்லாத திடகாத்திரமான ஆண்கள் இடமிருந்து மட்டுமே வசூலிக்கப்பட்டது. முஸ்லிமல்லாத பெண்கள், வயோதிகர்கள், குழந்தைகள், நோயாளிகள், புத்தி சுவாதீனமற்றோர் போன்ற பலகீனமானவர்கள் ஜிஸ்யா வரி அளிப்பதிலிருந்தும் விதிவிலக்கு அளிக்கப்பட்டனர். 2) முஸ்லிமல்லாத ஒருவர் ஜிஸ்யா வரி செலுத்த வேண்டியவாராக இருந்து, முஸ்லிம் இராணுவத்தில் பங்கெடுத்தால் அதன் காரணமாக ஜிஸ்யா செலுத்துவதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டார். ஆனால் முஸ்லிம்கள், ஜகாத் கொடுக்க வேண்டிய வசதியுடையவராக இருந்து, இராணுவத்தில் பணியாற்றினாலும், ஜகாத் செலுத்துவதிலிருந்து எவ்வித விதிவிலக்கும் அளிக்கப்பட்டவில்லை. 3) முஸ்லிம்களுக்கு பொருளாதர வசதிகள் அதிகம் அதிகமாக ஜகாத் கொடுக்க வேண்டிய தொகையும் அதிகமாகும். ஆனால், முஸ்லிமல்லாதவர் செலுத்தும் வரி ஒரு குறிப்பிட்ட தொகையே அன்றி பொருளாதார வசதிகள் அதிகமுள்ளவர் அதிகப்படியான ஜிஸ்யா வரியை கட்டவேண்டிய நிலை இல்லை.
ஆக "ஜிஸ்யா" என்பது முஸ்லிம்கள், அரசாங்கத்திறக்கு 'ஜகாத்" என்று கட்டிய வரியை போன்ற வரியே அன்றி வேறில்லை. இப்படி வசூலித்ததன் மூலம் அவர்கள் பிற மத வணக்கத்தை புரியும் நிர்பந்ததிலிருந்து பாதுகாக்கப்பட்டார்கள். இதன் மூலம் அவர்களின் கண்ணியமும், சுதந்திரமும் பாதுகாக்கபட்டதே தவிர, தனிமைபடுத்தபடவோ, இழிநிலைக்கு தள்ளபடவோ இல்லை.இவ்வரியும் முஸ்லிமல்லாத எல்லா தரப்பு மக்கள் மீதும் திணிக்கப்படவில்லை என்பதையும் கவனத்தில் கொண்டோமானால், இது முஸ்லிமல்லாதவரை கேவலப்படுத்த ஏற்படுத்தபடவில்லை என்னும் உண்மை நன்கு புலனாகும்.
"கீழ்படிதலுடன் ஜிஸ்யா கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்" என்பதும் முஸ்லிமல்லாதவர்களின் மீதான அடக்குமுறையாகாது. எந்த அரசாங்கமும், வரி ஏய்ப்பு செய்யும் மக்களை பண்பாக பணிவாக நடத்துவதில்லை. ஏனென்றால், வரிஏய்ப்பு செய்பவன் அரசாங்கத்தை ஏமாற்றுகிறான். சமுதாயத்தில் நலிவடைந்த மக்களுடைய வாழ்க்கையில் அவன் விளையாடுகிறான். எனவே சமுதாயத்துக்கு துரோகமிழைக்கும் வரி ஏய்ப்பு செய்பவன் மீது கடுமையான நடவடிக்கைகளை எல்லா அரசுகளும் எடுக்கின்றன என்பது தான் எதார்த்தம். இதில் இஸ்லாமிய அரகும் விதிவிலக்கல்ல. அப்படி நடவடிக்கை எடுப்பதை தான் "போர் புரியுங்கள்" என்று அந்த வசனத்தில் குறிபிடபட்டுள்ளது. நாம் கூட நமது பேச்சு வழக்கில், ஏதேனும் ஒன்றை நிச்சயமாக சாதிக்க வ ண்டும் என குறிப்பிடும் போது, "இறுதி வரை போராடுவேன்" என்று சொல்வது வழக்கமே. அதே அடிப்படையில் மொழி நடையாகவும், நிச்சயமாக வசூலித்தே தீரவேண்டும் என்ற உறுதியை காட்டும் வகையில் தான், "போர் புரியுங்கள்" என்ற சொல்லாடல் பயன்படுத்தபட்டுள்ளது. இதே சொல் அடிப்படையில், இஸ்லாத்தின் முதல் கலீபா அபூபக்கர் (இறைவன் அவாகளை பொறுந்தி கொள்வானாக!), அவர்கள் முஸ்லிம்களை நோக்கி கூறியிருப்பதையும் நினைவு கூற விரும்புகிறேன். முஹம்மது நபி (இறை சாந்தி அவர்கள் மீது நிலவட்டுமாக!) அவர்கள் மரணத்திற்க்கு பின் இஸ்லாமிய ஆடசிக்கு அபூபக்கர் (இறைவன் அவாகளை பொறுந்தி கொள்வானாக!), பொறுப்போற்ற பிறகு, முஸ்லிம்களில் சிலர் ஜகாத் தர மறுத்த போது கலீபா அபூபக்கர் கூறினார்கள், "ஒட்டகையின் முக்கணாங் கயிற்றுக்கு ஜகாத்தை தர மறுத்தலும், அவர்களுடன் போர் தொடுப்பேன்". இதிலிருந்து, நாம் புரிந்து கொள்வது, அரசாங்கத்திற்க்கு எதிராக செயல்படுபவர்கள் மீது நிச்சயமாக எடுக்கப்படும் கடும் நடவடிக்கையின் சொல்லாடல் தான் "போர் புரிதல்" என்பது. இது ஒரு தரப்பு மக்களை நோக்கி கூறப்படும் குரோதமான வார்த்தை பிரயோகனம் அல்ல என்பதும் புலப்படும்.
அடுத்து, "கீழ்படிதலுடன்" என்று குறிப்பிடபட்டிருப்பது, அந்த குடிமகன் அரசாங்கத்தின் சட்டதிட்டங்களுக்கு கட்டுபட்டவனாக இருக்க வேண்டும் என்ற பொருள் அடிப்படையிலயே கையாலப்பட்டுல்லது. ஒருவன் அரசாங்கத்திற்க்கு கட்ட வேண்டிய வரியை கட்ட மறுக்கும் போது, அவன் அரசின் கட்டளையை மீறியவனாக ஆகிவிடுகிறான். எனவே இவன் அரசாங்கத்தின் கட்டளைக்கு கீழ்படியாதவனாக ஆகிவிட்டான். எனவே இவன் அரசின் கட்டளைகளுக்கு கீழ்படியும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் சொல்வது, எதார்த்தமான வார்த்தை கையாடலளே அன்றி குரோதமான, காழ்ப்புணர்வுள்ள வார்த்தை பிரேயோகம் அல்ல.
Thanks to islam-truthprevails.blogspot.com

 
At 9:42 PM, Blogger Unknown said...

நண்பர் செந்திலுக்கு
//“Fight them on until there is no more tumult and religion becomes that of Allah” Q. 2: 193//
திருக்குர்ஆனின் வசனம் 2:193 –ஐ படித்த நீங்கள் 2:190,2:191,2:192 –ஐ கடந்துதானே வந்திருக்க வேண்டும். அந்த வசனங்கள் நீங்கள் படித்த குர்ஆனில் இல்லையா? அல்லது மேற்கத்திய நாடுகளும் மீடியாக்களும் இஸ்லாத்தை பற்றி திரித்து கூறுவது போல நீங்களும் கூற வருகிறீர்களா ! அந்த வசனங்கள் உங்களுக்கு புரியவில்லையென்றால் இறையருளால் நாங்கள் உங்களுக்கு புரியவைப்போம், ஆனால் இஸ்லாத்தின் மீது கல்லெறிவதுதான் உங்கள் நோக்கமென்றால் ,உங்களுக்காக இறைவனிடம் நாங்கள் பிரார்த்தனை செய்வோம். ஏனெனில் உள்ளங்களை புரட்டக்கூடியவன் இறைவன். மகா வெறுப்புடன் உருவிய வாளுடன் முஹம்மது நபியை வெட்ட வந்த உமர் என்பவர், நபிகளாரின் பிரார்த்தனையால் வாளை வீசிவிட்டு இஸ்லாத்தை ஏற்று பின்னாளில் உலகமே வியந்து போற்றும் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் இரண்டாவது கலீஃபாவாக திகழ்ந்தார்.

 
At 10:10 AM, Blogger Unknown said...

திருக்குர்ஆனின் வசனம் 2:193 –ஐ படித்த நீங்கள் 2:190,2:191,2:192 –ஐ கடந்துதானே வந்திருக்க வேண்டும். அந்த வசனங்கள் நீங்கள் படித்த குர்ஆனில் இல்லையா ? அல்லது மேற்கத்திய நாடுகளும் மீடியாக்களும் இஸ்லாத்தை பற்றி திரித்து கூறுவது போல நீங்களும் கூற வருகிறீர்களா ! அந்த வசனங்கள் உங்களுக்கு புரியவில்லையென்றால் இறையருளால் நாங்கள் உங்களுக்கு புரியவைப்போம்> ஆனால் இஸ்லாத்தின் மீது கல்லெறிவதுதான் உங்கள் நோக்கமென்றால் >உங்களுக்காக இறைவனிடம் நாங்கள் பிரார்த்தனை செய்வோம். ஏனெனில் உள்ளங்களை புரட்டக்கூடியவன் இறைவன். மகா வெறுப்புடன் உருவிய வாளுடன் முஹம்மது நபியை வெட்ட வந்த உமர் என்பவர்> நபிகளாரின் பிரார்த்தனையால் வாளை வீசிவிட்டு இஸ்லாத்தை ஏற்று பின்னாளில் உலகமே வியந்து போற்றும் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் இரண்டாவது கலீபாவாக திகழ்ந்தார்.

 
At 10:10 AM, Blogger Unknown said...

திருக்குர்ஆனின் வசனம் 2:193 –ஐ படித்த நீங்கள் 2:190,2:191,2:192 –ஐ கடந்துதானே வந்திருக்க வேண்டும். அந்த வசனங்கள் நீங்கள் படித்த குர்ஆனில் இல்லையா ? அல்லது மேற்கத்திய நாடுகளும் மீடியாக்களும் இஸ்லாத்தை பற்றி திரித்து கூறுவது போல நீங்களும் கூற வருகிறீர்களா ! அந்த வசனங்கள் உங்களுக்கு புரியவில்லையென்றால் இறையருளால் நாங்கள் உங்களுக்கு புரியவைப்போம்> ஆனால் இஸ்லாத்தின் மீது கல்லெறிவதுதான் உங்கள் நோக்கமென்றால் >உங்களுக்காக இறைவனிடம் நாங்கள் பிரார்த்தனை செய்வோம். ஏனெனில் உள்ளங்களை புரட்டக்கூடியவன் இறைவன். மகா வெறுப்புடன் உருவிய வாளுடன் முஹம்மது நபியை வெட்ட வந்த உமர் என்பவர்> நபிகளாரின் பிரார்த்தனையால் வாளை வீசிவிட்டு இஸ்லாத்தை ஏற்று பின்னாளில் உலகமே வியந்து போற்றும் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் இரண்டாவது கலீபாவாக திகழ்ந்தார்.

 

Post a Comment

<< Home