|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Sunday, August 12, 2007

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

தஸ்லிமா நஸ்ரின் என்பவள் முஸ்லிம் விரோத எழுத்தாளர் என்பது உலகமே அறிந்த ஒன்று. அதையே தெரியாத அல்லது தெரிந்தும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லாதவர்கள் இஸ்லாம் பெண்ணடிமைத்தனமான மார்க்கம் என்று சொல்வது கேலிக்குறியது. இஸ்லாம் பற்றி இவர்களுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை என்பதும் இதிலிருந்து தெரிகிறது.

முஸ்லிம்கள் தங்கள் உயிரை விடவும் மேலாக மதிக்கக்கூடிய இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களை தரக்குறைவாக எழுதிய தஸ்லிமா நஸ்ரின் என்பவளை முஸ்லிம் விரோத எழுத்தாளர் இல்லை என்று சொல்பவர்களை முஸ்லிம்களை நன்கு தெரிந்தவர்கள் அரைவேக்காடுகள் என்றுதான் சொல்வார்கள்.

இந்த உலகில் மனித சமுதாயம் பல்வேறுபட்ட சுதந்திரத்திற்காக போராடியிருக்கிறது. இந்த தஸ்லிமா நஸ்ரின் என்பவள் மட்டும் தான் கற்பப்பை சுதந்திரம் கேட்டு கதை எழுதி போராடியவள். ஒரு கருத்தை/கொள்கையை ஒருவர் ஆதரிக்கவோ அல்லது எதிர்க்கவோ செய்தால் குறைந்த பட்சம் அதை அவர்கள் தனது சொந்த வாழ்வில் நடைமுறை படுத்தத்தயாராக இருக்க வேண்டும்.

அனைத்து மதத்தையும் சேர்ந்த பெரும்பான்மையான மனித சமுதாயம் திருமண உறவை சரி காண்கிறது, அதை நடைமுறை படுத்தி மகிழ்ச்சியும் அடைந்து வருகிறது. தஸ்லிமா நஸ்ரின் என்பவள் இதை கூடாது என்கிறாள், பெண்கள் தான் விரும்பிய எத்தனை ஆண்களுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ளலாம் என்கிறாள். இதைத்தான் அவள் கற்பப்பை சுதந்திரம் என்கிறாள். இதை ஆதரித்து கருத்து சொல்பவர்கள் தங்களுடன் பிறந்த சகோதரிகளுக்கு இதை கற்பனை செய்து பார்ப்பார்களா? தங்களால் பெறப்பட்ட மகளுக்கு இதை கற்பனை செய்து பார்ப்பார்களா? நிச்சயமாக செய்ய மாட்டார்கள். அவர்களால் இதை செய்யவும் முடியாது.

பிறகு ஏன் இவர்கள் தஸ்லிமா நஸ்ரின் என்ற ஒரு விபச்சாரியை ஆதரிக்கிறார்கள்? ஒரே காரணம்தான் இருக்கிறது. ஏனெனில் முஸ்லிம்கள் அவளை எதிர்க்கிறார்கள், ஆகையால் நாம் அவளை ஆதரிக்க வேண்டும் என்ற ஒரு குருட்டு புத்திதான். இவர்கள் தெளிவாக சிந்திப்பார்களேயானால் நிச்சயமாக அவளை ஆதரிக்க மாட்டார்கள். அவளை ஆதரிப்பதற்கு நம் இந்திய கலாச்சாரத்திலும் கூட எந்த முகாந்திரமும் கிடையாது.

மிரட்டல்கள் பயனளிக்காது.

ஒருவர் சமூக சீர்கேட்டிற்கு அழைப்பு விடுக்கும் பொழுது அது எந்தளவுக்கு தவறானது, கேவலமானது என்பதை வரிக்கு வரி அறிவுப்பூர்வமாக விளக்குவது தான் அறிவு ஜீவிகளின் கடமையாக இருக்க வேண்டும். அதை விடுத்து மிரட்டல் விடுவது என்பது சமூக சீர்கேட்டிற்கு அழைப்பு விடுத்தவளுக்கு வலு சேர்க்கும் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். இதுபோன்ற மிரட்டல்கள் உணர்ச்சிப்பூர்வமாக சிந்திப்பவர்களாலேயே செய்யப்படுகிறது.

என்னவோ அவள் மிகப்பெரிய சீர்திருத்த கருத்தை சொல்லிவிட்டது போலும் அதற்கு எதிராக முஸ்லிம்கள் கோபப்படுவது போன்றும் இன்றைய மீடியாக்கள் செய்தி பரப்பி தனது விசுவாசத்தை யாருக்குத்தான் காட்டுகிறார்களோ தெரியவில்லை.

அதே சமயம், என்னதான் அவர்கள் உணர்ச்சிப்பூர்வமாக சிந்தித்தாலும், அதை செயல்படுத்தினாலும் அதிலிருந்தும் சில தகவல்களை புரிந்து கொள்ளலாம். எங்களுடைய இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீது களங்கம் சுமத்த நினைக்கும் யாராக இருந்தாலும் அவர்களை நாங்கள் எதிர்ப்போம் என்று உலக முஸ்லிம்கள் பிரகடனப்படுத்துவதன் மூலம் 1400 ஆண்டுகளுக்கும் மேலாக உலக முஸ்லிம்களின் உள்ளத்தில் ஒப்பற்ற தலைவராக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் திகழ்கிறார்கள் என்பதுதான். இந்தப் பெருமை உலகில் எந்த தலைவனுக்கும் கிடையவே கிடையாது என்பது முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தனிச்சிறப்பு.

தஸ்லிமாவைப்பற்றி முஸ்லிம்களுக்கு என்ன தெரியும்? தஸ்லிமாவை இந்தியாவை விட்டு வெளியேற்ற சொல்ல நீங்கள் யார்? என்றெல்லாம் சிலர் கேட்டுள்ளனர். அப்படி கேட்டவர்கள் தெரிந்து கொள்ளுங்கள், தஸ்லிமாவைப்பற்றிய அனைத்தையும் தெரிந்து வைத்துக்கொள்ள எங்களுக்கு எந்த அவசியமும் இல்லை. அவள் ஒரு விபச்சாரி என்பதையும், உலகில் வாழ்கிற அனைத்து பெண்களையும் விபச்சாரம் செய்ய தூண்டுபவள் என்பதையும் நாங்கள் தெரிந்து வைத்துள்ளோம். மேலும். உலக முஸ்லிம்களின் தலைவரான முஹம்மது நபி (ஸல்) அவர்களை தரக்குறைவாக விமர்சனம் செய்தவள் என்பதையும் நாங்கள் தெரிந்து வைத்துள்ளோம். அது ஒன்று போதும் நாங்கள் அந்த விபச்சாரியை எதிர்ப்பதற்கு.

இந்தியாவை விட்டு வெளியேறச் சொல்ல நீங்கள் யார் என்று கேட்டவர்கள் நன்றாக கண்ணை திறந்து நாங்கள் எழுதியிருப்பதை படித்துக்கொள்ளுங்கள். அவளை இந்தியாவை விட்டும் வெளியேற்றச் சொல்லும் நாங்கள் இந்தியர்கள். அடிமை இந்தியாவை சுதந்திர பாதைக்கு இட்டுச்செல்வதற்கு முதல் வித்தை விதைத்த இந்தியாவைச் சேர்ந்த முஸ்லிம்கள் நாங்கள். இன்னும் தெளிவாக புரிய வேண்டுமானால், தேச விடுதலைக்கு போராடியவர்களை வெள்ளையர்களிடம் காட்டிக் கொடுத்த கூட்டத்தை சேர்ந்தவர்கள் இல்லை நாங்கள்.

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்பது உண்மையெனில் ஒரு சமுதாயத்தின் உணர்வுகளோடு விளையாடிய தஸ்லிமா நஸ்ரின் என்ற ஒரு விபச்சாரிக்கு அடைக்கலம் கொடுத்தது எதற்காக? அப்படி என்றால் அமெரிக்காவிற்கு சிம்ம சொப்பனமாக திகழும் உஸாமா பின் லாடனுக்கு இந்திய அரசு அடைக்கலம் தருமா? இந்தியாவின் இரண்டாவது பெரும்பான்மை சமுதாயமாக இருக்கும் முஸ்லிம்களின் உணர்வுகளை புண்படுத்திய ஒரு விபச்சார ஆதரவு எழுத்தருக்கு அடைக்கலம் கொடுப்பது எந்த வகையில் மதச்சார்பற்றதாக இருக்க முடியும்? நாடு மதச் சார்பற்ற நாடுதான், ஆனால் தலைவர்கள் மதச்சார்பு உடையவர்கள், நாடு ஜனநாயக நாடுதான், ஆனால் தலைவர்கள் போலி ஜனநாயகவாதிகள் என்று நாங்கள் புரிந்து கொள்ளட்டுமா?

இப்படி பலவாறும் விமர்சிக்கும் இவர்களுடைய பொது அறிவு எப்படி இருக்கிறது தெரியுமா? துபை ஒரு இஸ்லாமிய நாடு என்று சொல்லுமளவிற்கு தான் அவர்களுடைய பொது அறிவு இருக்கிறது. துபை ஒரு இஸ்லாமிய நாடாக இருந்திருந்தால், அங்கே மதுவிற்கு அனுமதி இருந்திருக்காது. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால் மத்திய கிழக்கு நாடுகளின் சமுதாய சீர்கேட்டிற்கு ஊற்றுக்கண்ணாக துபை (ஐக்கிய அரபு அமீரகம்) விளங்கி வருகிறது என்பதுதான் உண்மை.

இறுதியாக இவர்களை நாம் கேட்டுக்கொள்வதெல்லாம் நீங்கள் இஸ்லாத்தை விமர்சிக்க உங்களுடைய சொந்த பாதங்களை பயன்படுத்தி நடந்து வர முயற்சி செய்யுங்கள். ஒரு விபச்சாரியின் முதுகில் ஏறி அமர்ந்து கொண்டுதான் வர வேண்டுமா என்பதை கொஞ்சம் யோசியுங்கள்.

நன்றி
அபிவிருத்தி

12-Aug-2007

2 Comments:

At 5:53 AM, Anonymous Anonymous said...

//பிறகு ஏன் இவர்கள் தஸ்லிமா நஸ்ரின் என்ற ஒரு விபச்சாரியை ஆதரிக்கிறார்கள்?//

இவர் ஒரு விபசாரி என்பது எனக்கு செய்தி. இதை தாங்கள் எப்படி எப்போது அறிந்துகொண்டீர்கள்? அல்லது இஸ்லாத்ததை எதிர்க்கும் பெண்கள் அனைவரும் விபசாரிகள் என்று கூற வருகிறீர்களா? அல்லது இஸ்லாம் என்பது எதிர்க்கப்படக்கூடாத ஒரு விஷயம் என்று கூற வருகிறீர்களா?

 
At 8:50 AM, Anonymous Anonymous said...

தஸ்லிமா நஸ்ரின் நிலைப்பாடுகள், பெண் விடுதலை சார்ந்தவை. பெண் விடுதலை என்பதே மனித விடுதலைதானே! இஸ்லாத்தின் சட்ட கோட்பாடுகளைத் தமக்கேற்ற வகையில் இஸ்லாமிய ஆண்கள் வளைத்து, தம்முடைய தேற்றங்களை நிறைவேற்றிக் கொண்டபோது, பலிகடாவாக்கப்பட்ட பெண்களின் சார்பில் எழுந்த குரல் தஸ்லிமாவுடையது. ஒரு மருத்துவராகக் கிராமங்களில் பணிபுரிய சென்ற நஸ்ரின், அங்கே பால்ய வயதில் திருமணத்திற்குள்ளாக்கப்பட்ட கொடுமைகளை நேரில் கண்டு மனம் நொந்து, கடுமையான விமர்சனங்களை வைத்தார். 'ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை ஆண்கள் மணந்து கொண்டதுபோல் நானும் எனக்கு வசதி இருந்தால், பல ஆண்களை மணந்து கொண்டிருப்பேன்' என்பதுதான் அவர் வைத்த விமர்சனம்.

இதை ஆராயாத பழமைவாதிகள், தஸ்லிமாவை 'ஒழுக்கம் கெட்டவள்' என்றனர். பாபர் மசூதி இடிப்பின் எதிர்வினையாக, பங்களாதேஷில் சிறுபான்மை இந்து சமூகம் தாக்கப்பட்ட நிகழ்வுகளைத் தகுந்த ஆதாரங்களோடு தமது 'லட்சா' நாவலில் அம்பலப்படுத்தியிருந்தார். அதனால் அவர் இஸ்லாத்திற்கு எதிரானவர் ஆகிவிட்டார். அவருடைய கேள்விகளுக்கு நேர்மையான பதிலைத் தர முடியாதவர்கள், அவரை 'பத்வா'க்களாலும் (தீர்ப்பு) தாக்குதல்களாலும் பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். நாகரிக உலகம் வெட்கித் தலைக் குனியும் அருவருக்கத்தக்க செயல்களில், ஆந்திர சட்டமன்ற உறுப்பினர்களே ஈடுபட்டு இருப்பது தலைக்குனிவை ஏற்படுத்தும் செயலாகும்.

இது கருத்துச் சுதந்திரத்தின் காலம். எந்த ஒரு நிலை நிறுத்தப்பட்ட கோட்பாட்டுக்கும் ஆதரவாகவோ எதிராகவோ ஒரு கருத்து வருவதைத் தடுக்க முடியாது. கருத்தை கருத்தால் எதிர்கொள்ள வேண்டுமே தவிர, தாக்குதல்களால் எதிர்கொள்வது பாசிஸத்தின் வெளிப்பாடு ஆகும்.

- கவிஞர் இன்குலாப்

 

Post a Comment

<< Home