|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Monday, August 13, 2007

சகோதரர் செந்தில் அழகுவிற்கான பதில்களும், கேள்விகளும்..!!

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

அன்புக்குறித்தான சகோதரர்களுக்கு..

தஸ்லிமா நஸ்ரின் என்ற விபச்சார ஆதரவு எழுத்தருக்கு ஆதரவு தெரிவித்தும், இஸ்லாமிய மார்க்கத்தை விமர்சித்தும் கருத்து பரப்பிய சகோதரர் செந்தில் அழகு அவர்களுக்கு என்னால் முடிந்தளவு கீழே விளக்கம் அளித்துள்ளேன். சில இடங்களில் அவரை நோக்கி எழுப்பும் கேள்விகள், விமர்சனங்களை தனி நபர் தாக்குதலாக கருதாமல் அவரின் கூற்றிற்கு எதிரான வாதங்களாகவே கருத வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். எனக்கென்று தனியாக வலைப்பூ இல்லாததினால் இது தொடர்பான விமர்சனங்களை, ஆதரவுகளை, எதிர்ப்புகளை அல்லது எனது விளக்கத்தையும் விட சிறந்த விளக்கத்தை தர விரும்புபவர்கள் அதை வெளிச்சம் (http://velicham 2006.blogspot.com/) வலைப்பூவில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில் வெளிச்சம் வலைப்பூ இந்த விவாதத்தினை தொகுத்து ஒரு "மாலை" யாக்கி வருகிறது.

====================================================================

ஹலோ பிரதர். நான் ஒரு இஸ்லாமிய point of view வில் சொல்லவில்லை. நான் முன்னரே குறிப்பிட்டிருந்தேன். நீங்கள் இஸ்லாமிய நோக்கத்தோடு பார்க்கிறீர். நீங்கள் அனைவரும் இஸ்லாம் எனும் மாயையில் உள்ளீர்கள். எப்போது நீங்கள் அதிலிருந்து வெளியே வருகிறீர்களோ அன்று தான் உங்கள் சமுதாயம் முன்னேறும். - செந்தில் அழகு

அன்புள்ள செந்தில் அழகு சகோதரருக்கு..

உங்களுடைய விமர்சனங்களை நான் இஸ்லாமிய கண்ணோட்டத்தில் பார்ப்பதாக சொல்லியிருந்தீர்கள். மிக்க நன்றி சகோதரரே! எதையுமே இஸ்லாமிய கண்ணோட்டத்தில் அனுக வேண்டும் என்பதுதான் உலகத்தில் வாழும் முஸ்லிம்களில் பெரும்பான்மையினரின் ஆசையும் , பிரார்த்தனையும். அந்த வகையில் உங்களுடைய விமர்சனம் எனக்கு மகிழ்ச்சிதான். என்ன எங்களை நீங்கள் பாராட்டுவதற்கு பயன்படுத்திய இஸ்லாமிய மாயை என்ற சொல் பிரயோகம்தான் சற்று நெருடலாக இருக்கிறது.

நீங்கள் மாயையாக கருதும் எந்தவிதமான குற்றச்சாட்டையும் , நேர்மையாக எங்களுக்கு எடுத்துச் சொன்னால் எங்களால் முடிந்த அளவு உங்களுக்கு விளக்கம் அளிக்கிறோம். எங்களுடைய தவறுகளை நீங்கள் சுட்டிக்காட்டினால் கூச்சமின்றி ஒத்துக்கொண்டு அதை திருத்திக் கொள்ளவும் முயற்சி செய்கிறோம். எங்களின் இந்த நிலைப்பாட்டையே நீங்களும் கையாள வேண்டும் என்பது மட்டுமே நாங்கள் உங்களுக்கு விடுக்கும் நிபந்தனை.

நீங்கள் வேண்டிக்கொண்டது போல் இஸ்லாமிய கண்ணோட்டத்திலிருந்து வெளியே வந்து தான் நாங்கள் எங்கள் சமுதாயத்தை முன்னேற்ற வேண்டும் என்ற எந்த அவசியமும் எங்களுக்கு இல்லை. மதச்சார்பற்ற ஒரு நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் சக குடிமக்களை இப்படி பட்டவர்த்தனமாக இஸ்லாத்தை விட்டு வெளியே வா , அப்பொழுதான் உனக்கு முன்னேற்றம் கிடைக்கும் என்று அழைப்பு விடுப்பது எந்த வகையில் மதசார்பற்றதாக கருதுகிறீர்களோ என்று தெரியவில்லை. நம் நாட்டின் சட்ட திட்டங்களை மதித்து நடக்கக்கூடிய சிறந்த குடிமகனாக நாம் அனைவரும் இருக்க வேண்டும் என்பதை உங்களுக்கு நான் நினைவூட்டுகிறேன்.

15 ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் ஷரியா சட்டம் இயற்றப்பட்டது. இன்றும் நீங்கள் அதை பின்பற்றினால் உங்களை என்னவென்று சொல்ல. உங்கள் அறியாமையை நினைத்து சிரிப்பதா இல்லை உங்களை நினைத்து அழுவதா என்று எனக்கு புரியவில்லை. அம்பேத்கார் 50 வருடங்களுக்கு முன்னர் எழுதிய சட்டத்தையே நாம் திருத்தி, மாற்றி எழுதுகிறோம் ஆனால் நீங்கள் 15 ஆயிரம் வருடங்கள் முன்னர் எழுதிய ஷரியா சட்டங்களை பின்பற்றுவது என்ன முட்டாள்தனம்!! - செந்தில் அழகு

இப்படி கேட்கிற உங்களை நினைத்து சிரிப்பதா ? இல்லை அழுவதா ? என்றுதான் எனக்குத் தெரியவில்லை. அம்பேத்கர் இயற்றிய சட்ட வடிவங்களை 50 ஆண்டுகளில் பலமுறை திருத்தி மாற்றி எழுதிவிட்டோம் என்று சொன்னால் அதற்கு என்ன காரணம் ? அம்பேத்கர் என்பவர் ஒரு மனிதர் , அவரால் அவர் வாழ்ந்த காலத்திலிருந்து ஒரு 10 அல்லது 20 ஆண்டுகள் முன்னோக்கி மட்டுமே யோசிக்க முடிந்திருக்கிறது. அதற்காக அவருடைய சிந்தனை ஆற்றலை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. அவர் அவரால் முடிந்த சட்ட வடிவத்தை ஏற்படுத்தி கொடுத்தார். அது பாராட்டுக்குறியது. ஆனால், எந்த ஒரு மனிதரின் கருத்தும், சட்ட வடிவமும் ஒரு குறிப்பிட்ட காலம் வரைதான் தாக்குப்பிடிக்கும். அதற்கு உதாரணம் தான் பலமுறை இந்திய சட்ட வடிவத்தை நாம் மாற்றியமைத்தது.

ஆனால் நீங்கள் குறிப்பிட்ட இஸ்லாமிய சட்டத்தை வடிவமைத்தது மனிதரல்ல , இறைவன். உங்களையும் என்னையும் இன்னும் இந்த உலகத்தை படைத்து அதில் வாழுகிற அனைத்து ஜீவராசிகளையும் படைத்த இறைவன். அந்த இறைவனுக்கு 1000 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த விசயங்களை அறிந்து கொள்ளும் ஞானம் இருக்கிறது. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு பின்னாலும் அல்லது இந்த உலகம் அழியும் நாள் வரை என்ன நடக்கும் என்பதை அறிந்து கொள்ளும் ஆற்றலும் இருக்கிறது. மனித சக்திக்கு அப்பாற்பட்ட இந்த ஆற்றல்கள் இருப்பவனைத்தான் பகுத்தறிவு கொண்டு சிந்தித்து பார்ப்பவர்கள் இறைவனாக ஏற்றுக்கொள்கிறார்கள். நாம் பகுத்தறிவு கொண்டு சிந்திக்காமல் அவசரகதியாக வெரும் மனித அறிவோடு ஒப்பிட்டுப் பார்ப்பதனால்தான் நமக்கு அதாவது உங்களுக்கு பழமையான சட்ட வடிவமாக இஸ்லாமிய சட்டம் தெரிகிறது.

எந்த ஒரு சித்தாந்தத்தையும் அனுபவப்பூர்வமாக உணர வேண்டும் , உலகில் நடக்கின்ற அனைத்து பிரச்சனைக்கும் தீர்வு நாடி ஒவ்வொரு சித்தாந்தத்தையும் பிரச்சனைகளோடு உரசிப்பார்க்க வேண்டும். அந்த சித்தாந்தம் வழங்கும் தீர்வுகள் அந்த நேரத்திற்கு மட்டும் பொருந்தக்கூடியவையாக , தற்காலிகமானதாக இருக்கக் கூடாது. நமக்கு பின்னால் 1000 ஆண்டுகள் கடந்து வருபவர்களுக்கும் அது தீர்வாக இருக்க வேண்டும். அப்படி ஒரு தீர்வைதான் இஸ்லாமிய சட்ட திட்டங்கள் வழங்கி இருக்கிறது என்று உலகில் வாழுகின்ற முஸ்லிம்கள் நம்புகிறார்கள். இஸ்லாத்தையும் , முஸ்லிம்களையும் கருவறுக்க துடிக்கும் சங்க்பரிவார் அமைப்பைச் சேர்ந்த அத்வானி கூட உள்துறை அமைச்சராக இருந்த பொழுது கற்பழிப்பு குற்றத்திற்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று திருவாய் மலர்ந்தார். இதை 1400 ஆண்டுகளுக்கு முன்பே நீங்கள் குறிப்பிடும் பழமையான இஸ்லாமிய சட்டம் சொல்லி விட்டது. இஸ்லாத்தை வெறுக்கும் அத்வானி கூட இஸ்லாமிய சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்று சொன்னது , மனிதன் பல இடங்களிலும் முட்டி மோதி கடைசியில் இங்கு வந்து தான் நிற்பான் என்பதைத்தானே காட்டுகிறது.

முன்பு மனிதன் ஒரு வேளையும் இல்லாமல் இருந்தான். அப்போது 5 வேளைகள் தொழுதான். ஆனால் இப்போது உள்ள வேளைகளிலும் 5 வேளை தொழ வேண்டும் என்றீர்கள் என்றால் எந்த சுவரில் சென்று முட்டிக் கொள்வது?? - செந்தில் அழகு

பல்வேறு விதமான வேலை பளுக்களுக்கு இடையேவும், கடையை மூடிவிட்டு , அலுவலக வேளையை நிறுத்தி விட்டு 5 வேளை தொழுகைக்காக பள்ளிவாசலை நோக்கிச் செல்லும் பழக்கம் சவுதி அரேபியாவில் நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது. இதனால் சவுதி அரேபியா பொருளாதார ரீதியாக எந்த பின்னடைவையும் சந்திக்கவில்லையே? எந்த நாட்டிடமும் கையேந்தி கடன் வாங்கவில்லையே. இன்னும் சொல்லப்போனால் பல நாடுகளுக்கு வாரி கொடுத்து சுபிட்சமாகத்தானே இருக்கிறார்கள் அந்த அரபுக்கள்.

ஒரு நாளுக்கு 24 மணி நேரங்கள் , இதில் 5 வேளை தொழுகைக்காக முஸ்லிம்கள் அதிகபட்சமாக செலவிடுவது வெறும் 30 நிமிடங்கள் தான். இதை மரணத்திற்கு பின்னால் ஏற்படக்கூடிய வாழ்விற்கான சேகரிப்பாக முஸ்லிம்களாகிய நாங்கள் கருதுகிறோம். இறைவன் நாடினால் இதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். அப்படி புரிந்து கொள்ளாமல் நீங்கள் ஏதேனும் சுவற்றில் முட்டிக் கொள்வதற்கு இஸ்லாமோ, முஸ்லிம்களோ நிச்சயமாக பொருப்பேற்க முடியாது.

அரிசி முழுமையாக வெந்து குழைந்து இருந்தால் நன்றாக இருக்காது. அரை வேக்காடுதான் நன்றாக இருக்கும் :-) !!! - செந்தில் அழகு

Promise பேஸ்ட்லதான் பல்லு வெளக்குவாரு , True பிஸ்கட்தான் சாப்பிடுவாரு , சத்யம் தியேட்டர்லதான் படம் கூட பாப்பாரு , ஆனால் வாயை திறந்த புழுகு மூட்டையா அவிழ்த்து கொட்டுவாரு.. என்று அரசியல்வாதி ஒருவரை குறித்து என் நண்பர் ஒருவர் சமீபத்தில் கமெண்ட் அடித்தார். அரைவேக்காடு குறித்து நீங்கள் சொன்ன விளக்கத்தை பார்த்தவுடன் ஏனோ எனக்கு அதுதான் நினைவுக்கு வந்தது.

சராசரியாக சாப்பிடும் பக்குவத்தில் இருக்கும் சாதத்தை சரியாக அல்லது முழுமையாக வெந்திருக்கிறது என்றுதான் நடைமுறையில் அனைவரும் சொல்லி வருகிறார்கள். சாப்பிடும் பக்குவத்திற்கு குறைவாக இருந்தால் அதை அரைவேக்காடு என்றும் , சாப்பிடும் பக்குவத்திற்கு அதிகமாக வெந்திருந்தால் அதை குழைந்து விட்டது என்றும் தான் நடைமுறையில் அதிகமானோர் சொல்லி வருகிறார்கள். நீங்கள் ஏதோ விவரமாக எழுதுவதாக நினைத்துக் கொண்டு விசயமே இல்லாமல் எழுதியுள்ளீர்கள். எது எப்படி இருந்தாலும் நான் உங்களை தனிப்பட்ட முறையில் அரைவேக்காடு என்று சொல்ல வரவில்லை. அப்படி நீங்கள் புரிந்திருந்தால் அதற்காக வருந்துகிறேன்.

நான் மறுபடியும் கூறிக்கொள்கிறேன். நான் முதலில் சமய மார்க்கமாய் எழுதவில்லை. இதை சமய மார்க்கமாய் திசை திருப்பியது பெருமதிப்புக்குறிய தாங்கள் தான். நான் இன்றும் சொல்வேன், இந்தியா அடைக்கலம் தேடி வந்தவரை ஒருப்போதும் ஏமாத்துவதில்லை, நீங்கள் என்னதான் கத்தினாலும் ஆர்ப்பாட்டம் செய்தாலும் தஸ்லீமா நஸ்ரினை இந்தியா வெளியேற்றம் செய்யாது!! - செந்தில் அழகு

அடைக்கலம் தேடி வருபவர்களை இந்தியா ஒருபோதும் ஏமாத்தாது என்றால் அனைவருக்கும் இது பொருந்துமா என்பதை நீங்கள் விளக்க வேண்டும். ஒருவருக்கு அடைக்கலம் கொடுப்பதற்கு நாம் எந்த அளவு கோலை பயன்படுத்துகிறோம் ? முஸ்லிம்களுடைய உணர்வுகளை கேலி செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்போம் என்ற அளவுகோலா ? அப்படிச் சொன்னால் மதச்சார்பற்ற நாடு என்று சொல்ல முடியாதே ? அதுபோல் இந்தியாவில் குற்றம் புரிந்துவிட்டு இந்தியாவிலிருந்தும் வெளியேறி பிற நாடுகளில் அடைக்கலம் புகுந்தவர்களை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியர்களாகிய நாம் கோருவதில் நியாயம் இருக்கிறதா என்பதையும் நீங்கள் விளக்க வேண்டும்.

மதசார்பற்ற ஒரு நாட்டில் ஒரு மதத்தினர் புனிதமாக கருதுவதை இழிவு படுத்தும் ஒரு விபச்சாரிக்கு வக்காலத்து வாங்கும் உங்களைப் போன்றவர்களுக்கு நிச்சயமாக இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு என்று சொல்வதற்கு எள் முனையளவும் தகுதி இல்லை. பிற மதத்தினரின் உரிமைகளுக்கு மதிப்பளித்து அவர்களின் வணக்க வழிபாடுகள் நமக்கு பிடிக்கிறதோ , பிடிக்கலையோ அது அவர்கள் வழி என்று கருதி அவர்களோடு சுமூகமாக வாழ வேண்டும் என்றும் , ஆட்சி பொருப்பில் இருந்தாலும் மற்ற சமயத்தினரை சமமாக நடத்த வேண்டும் என்றும் சொல்லும் இஸ்லாமிய சட்ட திட்டங்களுக்கும் , அதை சரி காணும் முஸ்லிம்களுக்கு மட்டுமே இந்த உரிமை உண்டு. (இதை தனிநபர் தாக்குதலாக கருத வேண்டாம்)

முஸ்லிம்களாகிய நாங்கள் என்னதான் எங்களின் எதிர்ப்பை தெரிவித்தாலும் பங்களாதேஷை சேர்ந்த தஸ்லிமா நஸ்ரின் என்ற விபச்சார புரோக்கரை இந்தியா வெளியேற்றாது என்ற பிரதமர் தொனியிலான பிதற்றல் கண்டு நாங்கள் உஷ்னமடைய மாட்டோம்.

30 வருடங்களுக்கு மேலாக எங்களுக்கு கல்வி , வேலைவாய்ப்பு , மற்றும் அரசு அதிகாரங்களில் இடஒதுக்கீடு கேட்டு போராடி வருகிறோம் , தந்து விட்டார்களா எங்கள் மதிப்பிற்குறிய மாண்புமிகுக்கள் ?

மது போன்ற போதை பொருட்களை இந்திய அரசு தடை செய்ய வேண்டும் என்று மூச்சு முட்ட பிரச்சாரம் செய்து அரசின் செவிகளுக்கு எடுத்துச் செல்கிறார்கள் முஸ்லிம் தலைவர்களும் , அறிஞர்களும். தடையா செய்து விட்டார்கள் எங்கள் மதிப்பிற்குறிய மாண்புமிகுக்கள் ?

வட்டி அடிப்படையிலான கொடுக்கல் , வாங்கல்களை நாம் செய்யக்கூடாது என்று பலமுறை முஸ்லிம்கள் அரசிற்கு எடுத்துச் சொல்லி விட்டார்கள். அதை நிறுத்தியா விட்டார்கள் எங்கள் மதிப்பிற்குறிய மாண்புமிகுக்கள் ?

குஜராத் போன்ற பகுதிகளிலே அப்பாவி முஸ்லிம்களை கொன்றும் , முஸ்லிம் பெண்களை கற்பழித்தும் கொலை செய்த மாபாவிகளுக்கு சட்டப்படி தண்டனை வாங்கிக் கொடுங்கள் என்று இந்திய முஸ்லிம்களாகிய நாங்களும் , நியாயமான சிந்தனை கொண்டவர்களும் சேர்ந்து தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். எங்களுக்கு நீதி வழங்கி விட்டார்களா இந்த மானங்கெட்ட மாண்புமிகுக்கள் ?

இதையெல்லாம் செய்யாத , வழங்காத மானங்கெட்ட ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதிகள் தஸ்லிமா நஸ்ரின் என்ற விபச்சார புரோக்கரை வெளியேற்றவா போகிறார்கள். அதுவும் உங்களைப் போன்ற விசிறிகள் வேறு அந்த விபச்சார புரோக்கருக்கு!

இருந்தாலும் நாங்கள் எங்கள் எதிர்ப்பை தெரிவிப்போம்.

ஒரு தீமை நடக்கக் கண்டால் அதை உன் கையால் தடுத்து நிறுத்தி விடு

அதற்கு நீ சக்தி பெறாவிட்டால் உன் நாவால் தடுத்து விடு

அதற்கும் நீ சக்தி பெறாவிட்டால் அதை விட்டும் வெறுத்து ஒதுங்கி விடு.

என்பது இஸ்லாமிய சட்ட வடிவங்களில் ஒன்று. இதில் முதல் நிலைக்கும் , மூன்றாம் நிலைக்கும் இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் தகுதி பெற மாட்டார்கள் என்பதே என் கருத்து. அதனால் தான் (ஆர்ப்பாட்டம் , தர்ணா , அறப்போராட்டம் போன்ற) இரண்டாம் நிலையை பெரும்பான்மையான முஸ்லிம்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இதுபோன்ற போரட்டங்களால் அதிர்ஷ்டவசமாக சில நேரங்களில் தங்களது கோரிக்கையை முஸ்லிம்கள் வென்றும் இருக்கிறார்கள்.

ஆகவே அவளை எதிர்ப்போம்,

எதிர்ப்போம்,

எதிர்த்துக்கொண்டே இருப்போம்.

அதை எந்த கொம்பனும் தடுக்க இயலாது.

ஏனெனில் என் தேசமாகிய இந்தியா ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக நாடு.
--------------------------------------------------------------
ஜெய் ஹிந்துஸ்தான்.
அபிவிருத்தி.

3 Comments:

At 6:30 AM, Anonymous Anonymous said...

//பல்வேறு விதமான வேலை பளுக்களுக்கு இடையேவும், கடையை மூடிவிட்டு , அலுவலக வேளையை நிறுத்தி விட்டு 5 வேளை தொழுகைக்காக பள்ளிவாசலை நோக்கிச் செல்லும் பழக்கம் சவுதி அரேபியாவில் நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது. இதனால் சவுதி அரேபியா பொருளாதார ரீதியாக எந்த பின்னடைவையும் சந்திக்கவில்லையே?//

சவுதி அரேபியா போன்ற வளைகுடா நாடுகளின் வளர்ச்சிக்கு ஒரே காரணம் என்னவென்று உலகில் உள்ள அனைவருக்கும் தெரியும். எண்ணெய் வளம்... ஆனால் அரபுகளின் உழைப்புதான் அதற்கு காரணம் என்பது போல் நீங்கள் கூறுவது சரியான காமடி..

//ஆனால் நீங்கள் குறிப்பிட்ட இஸ்லாமிய சட்டத்தை வடிவமைத்தது மனிதரல்ல , இறைவன்//

மூச்சுக்கு மூன்று முறை மதசாற்பற்ற நாடு என்கிறீர்கள்.. சட்டம் அனைவருக்கும் பொது என்கிறீர்கள்... நான் கேட்கிறேன், இங்கு முஸ்லீம் சட்டத்திற்கு என்ன வேலை? அதைப்பற்றி இங்கு விவாதிப்பதே சட்டவிரோதம் அல்லவா? நீங்கள் சொன்னதையே திரும்பவும் உங்களுக்கே நினைவுபடுத்துகிறேன்--- "நம் நாட்டின் சட்ட திட்டங்களை மதித்து நடக்கக்கூடிய சிறந்த குடிமகனாக நாம் அனைவரும் இருக்க வேண்டும் என்பதை உங்களுக்கு நான் நினைவூட்டுகிறேன்."




கடைசியாக.....



//நீங்கள் இஸ்லாமிய நோக்கத்தோடு பார்க்கிறீர். நீங்கள் அனைவரும் இஸ்லாம் எனும் மாயையில் உள்ளீர்கள்//

திரு.செந்தில்... பொதுவாக இஸ்லாமியர்களிடம் இஸ்லாம் நீங்கலாக வேறு எந்த கருத்தையும் கூறி அவர்களை சுய ஆய்வு செய்து சிந்திக்க வைப்பது என்பது இயலாத காரியம். ஏனெனில் அவர்கள் சிறு வயதிலேயே மனம் நிர்மலமாக இருக்கும் காலை நேரத்திலேயே பள்ளி வாசல்களுக்கு அனுப்பப்பட்டு இஸ்லாமிய பாடங்கள் கடுமையாக போதிக்கப்பட்டு கிட்டத்தட்ட முளைசலவை செய்யப்பட்டுவிடுகிறார்கள். எனவே அவர்களுடைய பார்வை எப்போதும் ஒரு வழிபாதையாகவே அமைந்துவிடுகிறது.

 
At 10:06 AM, Blogger அபிவிருத்தி said...

//மூச்சுக்கு மூன்று முறை மதசாற்பற்ற நாடு என்கிறீர்கள்.. சட்டம் அனைவருக்கும் பொது என்கிறீர்கள்... நான் கேட்கிறேன், இங்கு முஸ்லீம் சட்டத்திற்கு என்ன வேலை? அதைப்பற்றி இங்கு விவாதிப்பதே சட்டவிரோதம் அல்லவா?//

இஸ்லாமிய சட்டத்தை எல்லோருக்கும் அப்ளை செய்யுங்கள் என்று யாரையும் நாங்கள் நிர்பந்தப்படுத்தவில்லை. எங்களுடைய மார்க்க சட்ட திட்டங்கள் யாரையுமே நிர்பந்தப்படுத்தாது. கட்டுரையை நன்றாக படியுங்கள், மதசார்பற்ற ஒரு நாட்டில் வாழுகின்ற முஸ்லிம்களின் செயல்பாடுக்களை விமர்சிப்பருக்குத்தான் விளக்கம் சொல்லப்பட்டுள்ளது.

மதசார்பற்ற ஒரு நாட்டில் ஹிந்துக்களின் மதவழிபாடுகளை ஒரு முஸ்லிமோ, கிறிஸ்தவரோ விமர்சிக்கக் கூடாது. ஒரு கிறிஸ்தவரின் மதவழிபாடுகளை ஒரு ஹிந்துவோ, முஸ்லிமோ விமர்சிக்கக் கூடாது. அதேபோல், ஒரு முஸ்லிமின் மதவழிபாடுகளை ஒரு ஹிந்துவோ, கிறிஸ்தவரோ விமர்சிக்கக் கூடாது.

இந்திய சட்ட திட்டங்களையும், சட்ட விரோதங்களையும் நாங்கள் நன்றாகவே தெரிந்து வைத்துள்ளோம்.

//திரு.செந்தில்... பொதுவாக இஸ்லாமியர்களிடம் இஸ்லாம் நீங்கலாக வேறு எந்த கருத்தையும் கூறி அவர்களை சுய ஆய்வு செய்து சிந்திக்க வைப்பது என்பது இயலாத காரியம். ஏனெனில் அவர்கள் சிறு வயதிலேயே மனம் நிர்மலமாக இருக்கும் காலை நேரத்திலேயே பள்ளி வாசல்களுக்கு அனுப்பப்பட்டு இஸ்லாமிய பாடங்கள் கடுமையாக போதிக்கப்பட்டு கிட்டத்தட்ட முளைசலவை செய்யப்பட்டுவிடுகிறார்கள். எனவே அவர்களுடைய பார்வை எப்போதும் ஒரு வழிபாதையாகவே அமைந்துவிடுகிறது.//

இதெல்லாம் விசயமில்லாதவர்கள் தங்கள் இயலாமையை காட்டுவதாகத்தான் கருத வேண்டியுள்ளது.

நன்றி
அபிவிருத்தி.

 
At 6:13 AM, Anonymous Anonymous said...

இஸ்லாமியர்களால், 'அல்லா' 'முகம்மது' என்கிற வார்த்தைக்கு அடுத்து அரபி மொழியில் இன்று பிரபலமாக அறியப்படும் வார்த்தையாக 'பத்வா' முன் நிற்கிறது. பத்வா என்றால் தீர்ப்பு என்று அர்த்தப்படுத்தலாம். தீர்ப்பு என்பது நீதி சம்பந்தப்பட்டது. இஸ்லாத்தின் நீதி என்பது 'சரீயத்' சார்ந்தது. அந்த சரீயத் தையே பல முஸ்லீம் நாடுகள் கேள்விக்குறியாக ஆக்கிவிட்டது காலம். அவர்களது வழக்காடு மன்றம் 'சரீயத்' தாண்டிய பல விதமான தீர்ப்புகளை உள்ளடக்கியதாக மலர்ந்துக் கொண்டிருக்கிறது.
*

காலத்தினூடே நிகழும் மாறுதல்களில் புறவய அனைத்தும் கூட மாறுதல் கொள்ளும். இயற்கையின் நியதியது. அதை மறுப்பவர் களும், மீறுபவர்களும் அதன் சக்கரச் சுழற்சியில் சிக்குவார்கள். இது எப்பவும் காணக்கூடும் யதார்த் தம்தான். இன்னும், கற்கால வெளியில் வாழுவதாக நினைத்துக் கொள்ளும் மனநிலை முல்லாக்கள், ஆலீம்கள், மௌலிகள் தெற்கு ஆசியாவில் இன்றை க்கு ஆங்காங்கே தலை எடுக்கிறார்கள். இஸ்லாத்தின் முரணாக இவர்களது பார்வையில் படுபவர்கள் எப்பவுமே எழுத்தாளர்கள் மட்டும்தான். உடனே பத்வா என்று விடுகிறார்கள். எப்பவோ வளைகுடா அரபு நாடுகளால் தூக்கி வீசிய அந்த மழுங்கிய ஆயுத த்தை இவர்கள் கைகளில் எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். அந்தத் துருவையெல்லாம் தூக்கி வீசியப் பிறகுதான், அங்கே அந்த அரபிகள் முன்னேறிக் கொண்டிருக்கின்றார்கள் என்றோ, அந்த முன் னோற்றத்தில் பங்கெடுத்து சம்பாத்திக்கவே இந்த ஆயுதம் தாங்கிகளும் அலைகிறார்கள் என்பது வேடிக்கையான காட்சி! அவர்களுக்கு இந்த நடப்பின் யதார்த்தம் புரிவதும் இல் லை. புரிந்தால் அல்லவா தங்கள் ஏந்தியிருக்கும் துருப்பிடித்த அந்த ஆயுதத்தை கீழே போடப் போகிறார்கள்.
*

பொதுவில் இஸ்லாத்திற்கு விரோதமாக, படு ஜரூராக இயங்கும் இஸ்லாமி யர்கள் இங்கு நித்தம் ஆயிரம் உண்டு. இந்த அத்தனைப்பேர்களும் மத போர் வள்களின் கண்களுக்கு புலப்படுவதில்லை. சொல்லப் போனால், ஒருவகை யில் அவர்கள் இவர்களுக்கு செல் லப் பிள்ளைகளாகி விடுகின்றார்கள். எழுத்தாளன் மட்டும்தான் பாவி. அவனது ஞானம் அழிக்கப்பட வேண்டும் என்பதுதான் அவர்களது குறி. அவன் நூல் பிடித்த மாதிரி எழுத வேண்டும் இவர்களுக்கு! விமர்சனம் என்று எழுத்தாளனின் பேனா இவர்கள் பக்கமோ, இவர்கள் பொத்திப் காப்பதாக நினைக்கும் மதத்தின் பக்கமோ திரும்பிவிடக் கூடாது, உடனே பத்வாதான். அதுவும் பத்தாதென்று அடி உதை என்றும் கிளம்பி விடுகிறார்கள். விழுது விட்டு வளர்ந்து நிலைத்திருக்கிற ஓர் மதம், ஒரு எழுத்தா ளனின் இரண்டுப் பக்க விமர்சனத்தால் பழுதுப் பட்டு இத்து விடும் என்கிற நினைப்புதான் எத்தனை இலேசானது. எதிரிகளைவிட இவர் கள்தான் தங்கள் மதத்தை குறைத்து மதிப்பிடக் கூடியவர்கள். நிஜத்தில் எத்தனைப் பெரிய பாதகம்!
*

H.G.ரசூலோ, தஸ்லீமா நஸ்ரினோ முரன்பாடாக எழுதுகின்றார்கள் என்றால், அதற்குறிய மற்று விளக்கத்தை மக்கள் சபைமுன் வைப்பதுதான் வளர்ந்து வரும் நாகரீக சமூகத்தின் செயலாக இருக்க முடியும். அவர்களுக்கு எதிராக 'பத்வா' என்னும் செயல்பா டுகள் நிச்சயம் வளர்ந்த மனிதர்களின் அடையா ளமாக இருக்க முடியாது. முரண் கொண்டவர்களால் மதினாவுக்கு விரட்டப் பட்ட நாயகத்திற்கு, அங்கு ஆண்ட கிருஸ்துவ மன்னன் அடைக்கலம் தருகி றான். சரிசமாக இருக்க வைத்து மத ரீதியான ஐய்யப்பாடு களை கேள்வியாக முன் வைக்கிறான். நபிகள் தனது பக்கத்து தெளிவை முன்வைக்கிறார்கள். 1400 வருடகால முன்மாதிரி இது.எத்தனை உயர்ந்த நாகரீகத்தின் சாட்சி அது. வரலாற்றோடு தேங்கிவிட்டக் கூடியதா இந்த அழகிய முன்மாதிரிகள்?
*

பத்வா புகழ் முல்லாக்களே... உங்களுக்கு ஞானத்தை தருகிற இறைவன்தான் அவர்களுக்கும் / அப்படி இயங்க அவர்களுக்கும்/ ஞானத்தை தருகிறான். அப்படி அவர்கள் எழுத, பின் நிற்கும் கிரியையில் இறைவனின் பங்கே அந்த மும் ஆதியும் அற்ற பங் காக இருக்கிறது என்பதை ஏன் நம்ப மாட்டேன் என்கிறீர்கள்? ஒருவரைப் பார்த்த மாதிரியேவா எல்லோரையும் இறைவன் படை த்திருக்கிறான்? இந்த முரண்பாடுதான் ஏன்? இது புரியும் நேரம் இறைவ னுக்கும் பத்வா என்பீர்கள்!
*

H.G.ரசூலும், தஸ்லீமா நஸ்ரினும் இடது சாரி சிந்தனை கொண்டவர்கள். இன்றைக்கு இந்தியாவில் இந்துத்துவாவுக்கு எதிரான இஸ் லாமியர்களின் தோய்ந்துபோன குரலை முன் எடுத்துச் செல்பவர்கள் இடதுசாரிகள். அவர் களில் தொண்ணூற்றி ஒன்பது சதவிகித த்தினர் இந்துகள்! இந்து மதத்திற்கு வைரியாக நின்ற பெரியாரும் ஓர் இந்து! தொட்டதற்கெல்லாம் பத்வாவை தூக்கிக் கொண்டு அலையும் இஸ்லாமிய கற்கால வாசிகள் குறைந்தப் பட்சமானா இந்த நடப்புகளை, கிரீடம் தாங்கிய தங்களது தலையைத் திருப்பி நான்குப் பக்கமும் பார்க்க வேண்டும்! அது குறித்தும் யோசிக்க வேண்டும்.
*

H.G.ரசூல் மற்றும் தஸ்லீமா நஸ்ரின் எழுத்துகளுக்கு எதிராகப் பாயும் பத்வா வையும், அவர்கள் மீதான வன்முறைகளையும் அநாகரீகத்தின் அடையாள மாக பார்க்கிறேன். அரக்கத்தின் கொடூரமாக கணிக்கிறேன். நாகரீகத்திற்கு எதிரான அநாகரீகங்கள்எந்த காலத்திலும் ஏற்புடையது அல்ல. எழுத்தினூடான சிந்தனைகளினால் சூடு கொண்டாலும், அந்த வழியில் மாற்று தேடுவதே அவர்களின் மாண்பாம்!

நன்றி: தாஜ்

 

Post a Comment

<< Home