தஸ்லிமா நஸ்ரினின் விசாவை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
இஸ்லாத்தை பற்றியும், உலகமுஸ்லிம்களின் ஒப்பற்ற தலைவர் நபி (ஸல்) அவர்களை பற்றியும் அசிங்கமாக விமர்சித்து வருகின்ற சர்ச்சைக்குரிய முஸ்லிம் விரோத வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினின் விசாவை மேலும் சில மாதங்களுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.
வங்கதேசத்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் தஸ்லிமா தான் எழுதிய லஜ்ஜா என்ற நாவலால் வங்கதேச முஸ்லீம்களின் மற்றும் உலக முஸ்லிம்களின் கடும் கண்டனத்துக்கு ஆளானார். அவருக்கு எதிராக முஸ்லீம்கள் அனைவரும் போர்க்கொடி உயர்த்தியதால் வங்கதேசத்திலிருந்து அவர் வெளியேறினார்.
இந்தியாவில் அடைக்கலம் புகுந்துள்ள அவருக்கு தற்போது இங்கும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. சமீபத்தில் ஹைதராபாத்தில்இ மஸ்ஜிலிஸ் இ இத்தாஹுல் முஸ்லிமீன் என்ற அமைப்பைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் தஸ்லிமாவைத் தாக்கினர்.
இந்த நிலையில் முஸ்லிம்களின் உணர்வை மதித்து தஸ்லிமாவை இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டிய காங்கிரஸ் அரசு அவரது விசாவை மேலும் சில மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. நேற்று முதல் பிப்ரவரி 17ம் தேதி வரைக்கும் அவரது விசா நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நிரந்தர குடியுரிமை கோரி தஸ்லிமா மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளார். இருப்பினும் அவரது விசாவை மட்டும் நீட்டித்து மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
அரசின் இந்த முடிவு வண்மையாக கண்டிக்கத்தக்கது. தஸ்லிமாவை உடனே நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும். காங்கிரஸ் அரசு இது போன்று முஸ்லிம்களின் உணர்வோடு விளையாடுமானால் அதன் பலனை வருகின்ற தேர்தலில் அனுபவிக்கும்.
1 Comments:
ஐயா நான் ஏற்கனவே கூறியிருந்தேன். இந்தியா தஸ்லிமாவை வெளியேற்றாது என்று. இப்போது பார்த்தீர்களா !!
// ஏற்கனவே நிரந்தர குடியுரிமை கோரி தஸ்லிமா மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளார். //
கவலை படாதீர் கூடிய சீக்கரம் தஸ்லிமாவிற்கு நிரந்தர குடியுரிமை வழங்கப்படும்.
// காங்கிரஸ் அரசு இது போன்று முஸ்லிம்களின் உணர்வோடு விளையாடுமானால் அதன் பலனை வருகின்ற தேர்தலில் அனுபவிக்கும். //
என்ன நண்பரே மிரட்டுகிறீரா?
Post a Comment
<< Home