தமிழர்களின் இரத்தம் உலகில் பரவுகிறது.
தமிழகத்தை மையமாகக் கொண்டு அனைத்து மதத்தினரிடமும் சமூக நல்லிணக்கத்தை பேணிவரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) , ஆன்மீக பணியோடு சமுதாயப்பணியும் செய்து வருகின்றது. அதிகமானோர் இரத்ததானம் செய்ததில் தமிழகத்திலேயே முதலாம் இடத்திற்கான விருதினை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
தன்னுடைய சமூகநலப்பணிகளை இதனுடைய ரியாத் மண்டலம் ஏற்பாடு செய்த இரத்ததான முகாமில் கடந்த ஜுலை 12-ம் தேதி ரியாதிலுள்ள கிங் ஃபைஸல் சிறப்பு மற்றும் ஆராய்ச்சி மைய மருத்துவமனையில் 49 பேர் இரத்ததானம் செய்தனர். அதனை தொடர்ந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) நேற்று (ஆகஸ்ட் 24 ) "கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி"யில் இரத்த தான முகாமிற்கு ஏற்பாடு செய்திருந்தது. அதில் பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் பங்கு பெற்றனர். ஜாதி, மதம், இனம், மொழி வேறுபாடின்றி இந்தியாவின் பிற மாநிலத்தவரும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாட்டினரும் இந்த முகாமில் கலந்து கொண்டு குருதி கொடையளித்தனர்.
இங்கே சொந்த சகோதரனின் உயிர் காப்பதற்காக கூட இரத்தம் வழங்க முன்வராமல் காசுக்கு ஆள் பிடிக்கும் நிலையில் உயிர் காப்பதற்காக தியாகம் செய்ய நாங்கள் தயார் என்று முன்வந்த தமிழர்களை அனைவரும் பாராட்டினர். குல்லும் மதராஸி? அல்ஹம்துலில்லாஹ்! (ஏற்பாடு செய்ததும் தமிழர்களா! வந்தவர்களும் தமிழர்களா ! புகழனைத்தும் இறைவனுக்கே!) என்று கூறி இங்குள்ள அரபிகளுக்கும் ஆஸ்பத்திரி நிர்வாகத்தினருக்கும் ஏற்பட்ட நெகிழ்சியால் அவர்களுடைய கண்கள் கலங்கின.
அன்றைய தினம் அந்த மருத்துவமனை முழுவதும் தமிழ்குரலாகவே ஒலித்துக்கொண்டிருந்தது. நேரமின்மையால் மொத்தம் 89 பேர் இரத்ததானம் செய்தனர். சவுதி அரேபியா வரலாற்றிலேயே ஒரே நாளில் இத்தனைபேர் இரத்ததானம் செய்தது இதுவே முதன்முறையாகும் என்று இரத்தவங்கியின் துணை இயக்குநர் திரு.ஃபத்தூஹ் அல் ஆலெம் கூறினார். அந்த பெருமை இன்று தமிழர்களுக்கு கிடைத்துள்ளது. மொத்தத்தில் தமிழர்களின் இரத்தம் தேசம், மொழி வேறுபாடின்றி உலகிலுள்ள அனைவரின் உயிர்காத்து, அனைவரின் உடலிலும் தமிழர்களின் இரத்தம் ஓடிக்கொண்டிருக்கும் என்ற தியாகத்தில் நாம் மகிழ்ச்சியுறுவோம்.
ரியாதிலிருந்து முஹம்மது மாஹீன்

3 Comments:
ஆம் அதில் எனது நண்பர்களும் பங்கேற்றனர். முன்பே தெரியாத காரணத்தால் என்னால் பங்கேற்க முடியவில்லை. மேலும்
விபரங்களுக்கும் படங்களுக்கும் இங்கே சுட்டெலியை அழுத்தவும். தமிழர்களின் மனித நேயம் கடல்களுக்கும் எல்லைகளுக்கும் அப்பார்பட்டது. வாழ்க தமிழர்கள் ! வளர்க மனித நேயம் !!
குருதிக்கொடை மிகச்சிறந்த குமுகாயப் பணி. மேலும் பணிகள் சிறக்க இறைவன் அருளுவான்.
கருத்தளித்த சொந்தங்களுக்கு நன்றிகளும், பாராட்டுக்களும்.
Post a Comment
<< Home