|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Sunday, July 30, 2006

ஏசி அறை கதாசிரியர்களும் கற்பனை கதைகளும்.

ஏகனின் திருப்பெரால்...
ஏசி அறை கதாசிரியர்களும் கற்பனை கதைகளும்.

அன்பு சகோதரர்களே.. அஸ்ஸலாமு அலைக்கும்.
சவுதியிலிருந்து ஏசி அறை கதாசிரியர்கள்.
தென்காசி சித்திக் என்ற தமுமுககாரர் எழுதிய அவதூறு மெயி;லை பித்னா செய்வதையே முழு நேர பணியாக கொண்ட விடியல் ரயிசுதீன் என்பவர் எனக்கு அனுப்பி இருந்தார். சகோ.பிஜெ இவர்கள் அமைப்பின் (விடியல், தமுமுக) பொய்முகத்தையும், வசூல் மோசடிகளையும் மக்களுக்கு அம்பல படுத்தி கொண்டு இருக்கிறார் என்பதாலும் அவர் தலைவராக கொண்ட ததஜ அமைப்பு இந்திய முஸ்லிம் அமைப்புகளில் முண்ணோடியாக உள்ளது என்பதால் சகோ.பிஜெயின் பெயரை களங்கப்படுத்தவும், ததஜவின் இமாலய வளர்சியை குறைக்கவும் இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

சகோ.பிஜெவையும் கோவை கைதையும் தங்கள் கற்பனையால் தொடர்பு படுத்தி ஏதோ சிபிஐ போல இவர்கள் தங்களை நினைத்து கொண்டு சவுதியில் ஏசி அரையில் இருந்து கொண்டு தங்கள் கதைகளை வெளியிட்டு வருகிறார்கள். கோவை கைது சமுதாயத்தில் பதட்டத்தை உண்டாக்கியிருக்கும் இவ்வேளையில் இவர்களின் இது போன்ற கீழ்தரமான செயல் வண்மையாக கண்டிக்கத்தக்கது. வுpடியலின் வேலை, ஆர்.எஸ்.எஸ் சதி, ஆளுங்கட்சி, எதிர கட்சி சதி என்று செய்தி மக்களிடம் பேசப்படும் பொழுது சம்மந்தமே இல்லாமல் சகோ.பிஜெயை வம்புக்கு இழுக்கும் இவர்களின் செயலை ஓவ்வொரு முஸ்லிமும் கண்டிப்பாக கண்டிக்க வேண்டும்.

யார் இந்த தென்காசி சித்திக்
முதலில் யார் இந்த தென்காசி சித்திக் என்பதை தெரிந்த கொள்ள வேண்டும். இந்தியாவில் எங்கேயாவது குண்டு வெடித்தாலோ, அல்லது தமிழகத்தில் எங்கேயாவது குண்டோ அல்லது தீபாவளி ஊசி பட்டாசு வெடித்தாலோ, அது சம்மந்தமாக யாராவது கைது செய்யப்பட்டாலோ அதற்க்கும் சகோ.பிஜெ அவர்களுக்கும் தொடர்பு என்று இவர் கற்பனை செய்து ஒரு கதையை உண்டாக்கி அதை வெளியிட்டு ஆனந்தமடையக் கூடியவர். இவர் ஒரு வகையான சைக்கோ என்று கூட சொல்லாம்.(ஆதாரத்திற்க்கு இவருடைய அனைத்து மெயிலையும் பார்வையிடவும்) தமுமுகவில் சகோ.பிஜெ இருந்தவரை அன்பு அண்ணணாக தெரிந்த பிஜெ இன்று இவரின் இயக்க வெறியால் அபுஜஹிலாக தெரிகிறார்.

சிறைவாசிகளுக்கு பிஜெயின் உதவிகள்.
சுகோ.தென்காசி சித்திக்கிற்க்கு இருக்கும் கற்பனைக்கு எதாவது கிரைம் நாவல் எழுத போனால் நன்றாக புகழ் பெறலாம். ஆனால் நாட்டில் நடக்கிறதுக்கெல்லாம் சகோ.பிஜெதான் காரணம் என்று தொடர்ந்து சொன்னால் சைக்கோ கேஸ் என்றுதான் என்ன தோன்றுகிறது. இவருடைய உளரளுக்கு இதோ ஒரு எடுத்து காட்டு சில வாரங்களுக்கு முன்பு பித்னா ரயிசுதீன் இணையத்தில் சகோ.பிஜெ சிறைவாசிகளுக்காக இதுவரை எதுவும் செய்யவில்லை என்று இவர் எழுதி சில ஆதாரங்களை வெளியிட்டு இருந்தார். நான் கூட சகோ.பிஜெ சிறைவாசிகளுக்கு உதவிகள் செய்யவில்லை என்ற எண்ணத்தில்தான் இருந்தேன். ஆனால் தென்காசி சித்திக் வெளியிட்ட ஆதாரத்தை வைத்துதான் சகோ.பிஜெ சிறைவாசிகளுக்கு பல உதவிகள் செய்து இருக்கிறார் என்பதை தெளிவாக பல கடித ஆதரத்துடன் அறிந்து கொண்டேன். அதாவது இவர் பிஜெ அவர்கள் மீது எப்படியாவது பழி போட வேண்டும் என்ற எண்ணத்தில் செய்கிற வேளைகள் அவருக்கு எதிராகவே திரும்பி நம்மை தெளிவடைய வைத்தது.

பிஜெவும் பாக்கரும்
தற்போது சகோ.பிஜெவுக்கு தனக்கு அடுத்த இடத்தில் உள்ள சகோ.பாக்கரின் வளர்சி பிடிக்க வில்லையாம் அதனால் அவரை போலிஸில் மாட்டி விட சகோ.பிஜெ திட்டமிட்டு கோவைக்கு அனுப்பி வைத்தாராம். ஆனால் சகோ.பாக்கர் எப்படியோ தப்பித்து வந்து விட்டாராம். இதுதான் இவருடைய மெயிலின் முக்கிய செய்தி. நான் இது சம்மந்தமாக சில கேள்விகளை இவருக்கு முன் வைக்கிறோம் அதற்க்கு இவர் பதில் தருவாரா பார்கலாம். 1)சகோ.பாக்கர் சம்மந்தப்பட்ட செய்தி அவரே சொல்லாத நிலையில் இவருக்கு எப்படி தெரிந்தது?.2)தன்னை மாட்டிவிட பிஜெ முயற்சித்தார் என்றால் அவர் எப்படி தற்போதும் ததஜவின் பொருப்பில் இருக்கிறார் மற்றும் சகோ.பிஜெவுடன் மிகுந்த நட்புடன் தற்போதும் இருப்பது ஏன்?.உலகத்தில் யாராவது தன்னை ஒழித்து கட்ட நினைக்கிறவருடன் நட்புடன் கூடி குலாவுவார்களா, அப்படி யாராவது இருப்பார்களா?.ஆக சகோதரர் பாக்கர் தற்போதும் எப்பொழுதும் சகோ.பிஜெவுடன் மிகுந்த நட்பில் இருக்கும் பொழுது இவர் எப்படி பட்ட கற்பனைகளை வெளியிடுகிறார் என்று பார்பதை வைத்தே மற்ற அவருடைய செய்திகளை எடைபோட்டு கொள்ளலாம்.

ஹிட் லிஸ்டில் பிஜெவின் பெயர்
சுகோ.பிஜெவை பொருத்த வரை அவர் எந்த தணி நபருக்கும், எந்த அமைப்புக்கும், எந்த அரசியல் கட்சிக்கும் பயப்பட கூடியவர் இல்லை. முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்தாலே தடா, ஜெயில் என்று பாய்ந்த காலத்திலேயே தமுமுக என்ற இயக்கத்தை உறுவாக்கி சமுதாய மக்களுக்கு குரல் கொடுக்து வளர்த்தவர். நிலைமை சீறடைந்த இன்றைய நிலையில் அரசாங்கத்திற்க்கு சவால் விடும் சமுதாய தலைவர்கள் அன்று எங்கு ஒளிந்து கொண்டிருந்தார்கள்; என்பது மக்களுக்கு தெளிவாக தெரியும். சகோ.தென்காசி சிpத்திக் அவர்கள் எல்லா கால கட்ட ஹிட் லிஸ்டிலேயும் பிஜெவின் பெயர் மட்டும் வருவது எப்படி என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

மற்ற சமுதாய தலைவர்கள் போல யார் சொத்தை யார் எடுத்து கொண்டால்; நமக்கென்ன என்று இருந்திருந்தால், யார் மார்கத்திற்க்கு முரணான செயலை செய்தால் நமக்கென்ன என்று கண்டு கொள்ளாமல் இருந்தால், யார் எந்த பணத்தை திருடினால் என்ன என்று சும்மா வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தால், யாராவது எவனாவது எந்த தீவிரவாத இயக்கத்துடனாவது தொடர்பு வைத்து கொண்டால் நமக்கென்ன என்று சும்மா இருந்திருந்தால், தவறு செய்தவர்கள் நமது சகோதரர்கயாயிற்றே என்பதற்காக முடி மறைத்து இருந்தால், எந்த வெளிநாட்டிலிருந்து எவ்வளவு வந்தால் என்ன நமக்கு கிடைக்க வேண்டியது கிடைக்கிறதா என்று சொகுசாக வாழ்ந்திருந்தால், ஜிஹாது என்ற பெயரில் மக்களை முளை சலவை செய்தால் நமக்கென்ன என்று பயந்து ஒதுங்கியிருந்தால் இப்படி சகோ.பிஜெ மட்டும் யாருடைய தவறுகளையும் கண்டுக்கொள்ளாமல் அவர்கள் செய்கிற மார்கத்திற்க்கு முரணான மற்றும் அரசியல் சகுனி வேளைகளை, திவிராவாத நடவடிக்கைகளை கண்டுக்கொள்ளாமல் இருந்திருந்தால் அவருடைய பெயர் எந்த ஹிட் லிட்டிலேயும் இருந்திருக்காது. மற்றும் இன்று இந்திய முஸ்லிம்கள் 100 சதவீதத்தினரின் தன்னிகரற்ற தலைவராக அவர் இருந்து கொண்டு இருப்பார்.

ஆனால் சமுதாயத்தின் நண்மையை கருதி அல்லாஹ்விற்க்கு பயந்து உண்மையை மக்கள் மத்தியில் எடுத்து வைக்கும் பொழுது அவருடைய பெயர் ஹிட் லிஸ்டில் வராமல் என்ன செய்யும்?;. அதனால் பிழைப்பு நடத்தி வந்தவர்பகள் தங்கள் பிழைப்பில் பிஜெவால் மண் விழுந்தால் அவரை எதிரியாக கருதி அவரை முடிக்க நினைக்கிறார்கள்(அல்லாஹ் அவரை பாதுகாப்பானாகா). இதுதான் அவர் ஹிட் லிஸ்டில் வருவதற்கான காரணம். ஆனால் மற்ற தலைவர்களே எவன் செத்தா என்ன, எவன் பிழைத்தா என்ன, எவன் திருடியால் என்ன, எவன் எப்படி போனால் என்ன, எவன் எந்த இயக்கத்தோடு தொடர்பு வைத்தால் என்ன, எவன் எந்த வகையில் மக்களை முளை சலவை செய்து அவர்களை தீவிரவாதிகளாக ஆக்கினால் என்ன என்று கண்டு கொள்ளாமல் இருப்பதால் தான் மற்றவர்களின் பெயர் ஹிட் லிஸ்டில் வருவது இல்லை. இங்கு ஒரு முக்கிய செய்தி தமுமுகவில் பிஜெ இருந்த காலம் வரை ஜவாஹிருல்லா பெரும் ஐஹதர் பெயரும் ஹிட் லி;ஸ்டில் இருந்தது. இன்று அவர்களின் பெயர்கள் இல்லை அதிலிருந்து இவர்களின் அஜ்ஜஸ்ட்மேன்ட் பாலிஸியை அறியலாம்.

இந்த செய்திகள் அனைத்தும் சித்திக் அவர்களுக்கும் ரயிசுதீனுக்கும் நம்மை விட தெளிவாகவே தெரியும். இருந்தும் அவர்களின் இயக்க வெறி உண்மையை மறைத்து அவதூறுகளை பரப்ப சொல்கிறது. பிஜெ, பிஜெ என்று இப்படி இவர்கள் வெறிபிடித்து அலைவதை பார்க்கும் பொழுது இவர்கள் மேல் நமக்கு கோபம் ஏற்படவில்லை மாறாக பரிதாபம்தான் ஏற்படுகிறது. இந்த இருவரின் மற்றும் இது போன்ற இயக்க மயையில் உள்ள சகோதரர்களின் நேர்வழிக்காக இறைவனிடம் பிரார்தனை செய்யுங்கள். இன்ஷா அல்லாஹ் விரைவில் பிஜெ எதிர்பு வெறி என்ற குறுகிய வட்டத்தில் இருந்து இவர்கள் வெளியே வருவார்கள் என்று நம்புவோம்.

அன்புடன்
அஹமது அலி.

0 Comments:

Post a Comment

<< Home