சகோதரர் முனாப் நுபர்தீன் சவாலுக்கு மவுலவி பி.ஜெ பதில்
بسم الله الرحمن الرحيم
அன்புள்ள சகோதரர் முனாப் நூர்தீன் (நுபர்தீன்) அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்.
தங்களின் பகிரங்க விவாத அழைப்பு என்ற மெயில் என் பார்வைக்கு வந்தது.
அந்த அழைப்பிலேயே உங்கள் மதியீனம் பளிச்சிடுகிறது!
விவாதம் செய்வதாக இருந்தால் அது குறித்த விதிகளைக் கலந்து பேசி இரு தரப்பும் ஏற்றுக் கொள்ளும் வகையில் விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். இ;ந்தச் சாதாரண உண்மையைக் கூட அறியாதவராக நீங்கள் இருக்கின்றீர்கள்.
விவாதத்தின் விதிகள் என்று நீங்களே பட்டியல் போட்டுள்ளீர்கள்.
நீங்கள் அரபு நாட்டுப் பணத்துக்காகக் கூலி வேலை பார்ப்பதாலும், பல்வேறு பணிகளைச் சொல்லி அரபுகளிடம் 'சல்லி' (பணம்) அடிப்பதாலும்; விவாதம் சவூதி அரேபியாவில் நடைபெறும் என்றும், சவூதி அரேபிய அறிஞர்களை நடுவர்களாக வைக்க வேண்டும் என்றும் தன்னிச்சையாக முடிவு செய்து உத்தரவு போட்டுள்ளீர்கள்.
எனக்கு இது போன்ற அவசியம் ஏதும் இல்லை. அரபுகளின் சல்லிக்கு நான் அடிமை இல்லை.
விவாதம் நடத்துவது என்றால் கருத்தைச் சொல்வதற்கு முழு அளவிலான சுதந்திரம் இருக்க வேண்டும். அதாவது இரு தரப்புக்கும் முழுச் சுதந்திரம் இருக்க வேண்டும். இந்தியாவில் தான் இந்தச் சுதந்திரம் உள்ளது என்பதும், சவூதி அரேபியாவில் இந்தச் சுதந்திரம் இல்லை என்பதும் மூளையுள்ள ஒவ்வொருவருக்கும் தெரியும்.
அரேபிய அறிஞர்களை நடுவர்களாக வைக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறீர்கள். அரேபிய மார்க்க அறிஞர்களின் கருத்துக்களை சல்லிக்காக நீங்கள் வாந்தி எடுக்கின்றீர்கள். எனவே நடுவர்களான அவர்களும் உங்கள் கருத்திலேயே இருக்கும் போது அவர்கள் எப்படி நடுவர்களாக இருக்க முடியும் என்ற அடிப்படை அறிவு கூட உங்களுக்கு இல்லை.
உங்கள் வாதப்படி தமிழ் பேசும் மக்களைத் தான் நான் குழப்புகிறேன். தமிழ் பேசும் மக்களைத் தான் நீங்களும் குழப்பத்திலிருந்து விடுவிக்க(?) முன்வருகின்றீர்கள். எனவே தமிழ் மொழியில் தமிழகத்தில் விவாதம் நடத்துவது தான் முறை.
விவாதம் நடத்துவது என்றால் முதலில் நமக்கிடையே கருத்து வேறுபாடு உள்ள விஷயங்கள்
என்ன? அதில் எந்த எந்தத் தலைப்புகள் பற்றி நீங்கள் விவாதிக்க விரும்புகிறீர்கள் என்பது தான் விவாதத்தில் முதலில் முடிவு செய்ய வேண்டிய விஷயமாகும்.
அது பற்றி உங்கள் கடிததத்தில் ஒரு வார்த்தையும் இல்லை. உண்மையாக விவாதம் நடத்துபவர்களுக்குத் தான் அது பற்றிக் கவலை? ;மூளையுள்ள எவனும் உங்களுடைய கிருக்குத்தனமான நிபந்தனையை ஏற்க மாட்டான் என்பதைத் தெரிந்து கொண்டே நீங்கள் நாடகம் ஆடுவதால் தலைப்பைப் பற்றி உங்களுக்கு அக்கறை இல்லாமல் போனதில் ஆச்சரியம் இல்லை.
முனாப் நூர்தீன் அவர்களே!
உங்களிடம் உண்மையிருந்தால் விவாதம் செய்வது பற்றி சந்தித்துப் பேச முன் வாருங்கள்! இரு தரப்பும் பேசி விவாத ஒழுங்குகளை முடிவு செய்வோம்.
இலங்கையில் நமது தாய் மொழியில் விவாதம் செய்ய நீங்கள் ஒப்புக் கொண்டால் உங்களைப் போல் அரபு மொழி படிக்காத எங்கள் ஜமாஅத்தைச் சேர்ந்த ஒரு இஞைரை ஏற்பாடு செய்கிறேன். இன்ஷா அல்லாஹ் அவ்விவாதத்தில் அவர் உங்களை வெல்வார்;. அவர் முன்னிலையில் நீங்கள் விவாதத்தில் வென்று விட்டால் நானே தோற்று விட்டதாக ஒப்புக் கொள்கிறேன். தாமதமின்றி பதில் தந்தால் தலைப்புகள் மற்றும் விவாத ஒழுங்குகளைப் பேசி ஒப்பந்தம் செய்ய பிரதிநிதியை அனுப்புகிறேன்.
அரபு மொழி தெரியாதவரிடம் விவாதம் செய்வது சாத்தியமில்லை என்ற ரெடிமேட ;பதிலை நீங்கள் அளித்தால் 'விவாதம் செய்வதற்கு அரபு மொழி தெரிந்திருப்பது அவசியமா?' என்ற தலைப்பில் அந்த இளைஞருடன் விவாதியுங்கள்;;;;;;;;.
இந்தியாவில் விவாதம் நடத்தத் தயார் என்றால் எங்கள் ஜமாஅத்தைச் சேர்ந்த ஒரு இஞைரை உங்களுடன் விவாதம் செய்ய ஏற்பாடு செய்கிறேன். உங்களைப் போன்றவர்களுடன் விவாதம் செய்ய இவர்களே போதும்.
விவாத ஒப்பந்தம் செய்ய எப்போது இந்தியா வருகிறீர்கள் என்பதை ஒரு மாதத்துக்குள் தெரிவிக்கவும்.
நான் ஏற்கனவே இலங்கை வந்த போது விவாதத்திற்கு வராமல் பின்னங்கால் பிடரியில் பட நீங்கள் ஓட்டம் எடுத்ததை இலங்கை மக்கள் இன்னும் மறக்கவில்லை.
அன்புடன்,
பி.ஜைனுல் ஆபிதீன்.
0 Comments:
Post a Comment
<< Home