|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Sunday, July 02, 2006

தமுமுக தலைவர்களை சுனாமி திருடர்கள் என்பது சரியா!

ஏகனின் திருப்பெயரால்..

இன்று காலை இளையவன் என்ற முகவரியுடன் சகோ.பிஜெ அவர்களுக்கு கடிதம் என்ற பெயரில் மெயில் ஒன்று வெளியாகி இருந்தது. அந்த மெயிலை சகோ.பிஜெவுக்கு மட்டும் அனுப்பி இருந்தால் நாம் ஒன்றும் சொல்ல போவது இல்லை ஆனால் அதை பலருக்கு பரப்பி விட்டு எனக்கும் அனுப்பியதால் அதற்க்கு பதில் அளிக்க வேண்டியது அவசியமாகிறது.

இளையவன் வெளியிட்ட மெயிலில் தமுமுகவை சுனாமி திருடர்கள் என்று உணர்வில் குறிப்பிட கூடாது என்று சகோ.பிஜெயை மிரட்டி இருந்தார். அதை அடுத்து சகோ.பிஜெ உணர்வு, முஸ்லிம் டிரஸ்ட் போன்றவற்றை திருடி விட்டார் என்றும் எழுதி இருந்தார்.

எந்த அமைப்புக்கும் சொந்தமில்லாத முஸ்லிம் டிரஸ்டு, முஸ்லிம் மீடிய டிரஸ்ட் என்பதற்க்கு அன்றிலிருந்து இன்றுவரை சகோ.பிஜெ அவர்கள்தான் ஆயுட்கால தலைவராக உள்ளார். பிறகு அவர் எப்படி தமுமுகவிலிருந்து அதை திருடி இருக்க முடியும். மக்கள் உரிமை இதழை அது ஆரம்பமானதிலிருந்து இன்றுவரை பேராசிரியர் ஜவாஹிருல்லா வெளியிடுகிறார். அந்த வாரஇதழை இன்று அவர் திருடிவிட்டார் என்று சொன்னால் எப்படி அபத்தமோ அது போலத்தான் உள்ளது உணர்வு மீதான குற்றச்சாட்டு. நல்லவேளை மீடிய வேல்ட், ஏகத்துவம், பிஜெ மொழிபெயர்த்த குர்ஆன் ஆகியவற்றையும் பிஜெ திருடி சென்று விட்டார் என்று சொல்லாமல் விட்டார்களே அதுவரை சந்தோசம்தான்.

இன்று முஸ்லிம் தமிழ் பத்திரிக்கையிலேயே அதிகமாக விற்பனையாககூடிய பத்திரிக்கையாக உணர்வு இருக்கின்றது என்றால் அதற்க்கு முக்கிய காரணம் அன்றைய தமுமுகவின் உறுதியான அடிப்படை விற்பனை கட்டுமானம்தான் என்பதையும் மறுப்பதற்கில்லை. தற்போது உணர்வில் தமுமுகவினரை சுனாமி திருடர்கள் என்று எழுதுவதில் எந்த தவறும் இல்லை என்பதுதான் எனது நிலை. ஆனால் தமுமுகவினர் உண்மையிலேயே சுனாமி மோசடி செய்திரிந்தாலும் அவர்களை பற்றி பக்கத்துக்கு 10 இடத்தில் சுனாமி திருடர்கள் என்று எழுதுவதை உணர்வு நிறுத்தி கொள்ள வேண்டும், இப்படி உணர்வு அதிகமாக எழுதுவதை பார்க்கும் பொழுது தமுமுகவை அசிங்கபடுத்த வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருப்பதை போன்று தோன்றுவதை மறுப்பதற்கில்லை.

இப்படி உணர்வில் ஒரு சில இடங்களில் சுட்டி காட்டினால்தான் தமுமுக தலைமை வேறு எந்த மோசடியிலும் ஈடுபட மாட்டார்கள் மற்றும் இது மற்ற அமைப்புகளுக்கும் ஒரு பாடமாக அமையும். ஆனால் உண்மையில்லாத தமுமுக வழிகெட்ட கூட்டம், இஸ்லாத்தை விட்டு வெளியேறிய கூட்டம், முனாபிக் முன்னேற்ற கழகம் என்று ததஜ சகோதரர்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது மற்றும் அது வண்மையாக கண்டிக்க தக்கது.

தமுமுகவினரை சுனாமி திருடர்கள் என்று சொல்வதே தவறு என்றால் எனது பின்வரும் கேள்விக்கு தமுமுகவினர் பதில் தரவேண்டும்.

1)பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவதற்க்கு என்று வசூலித்து விட்டு பாதியை வழங்கி மீதி சுமார் 35 லட்சத்தை மறைத்து வைத்தவர்களை சுனாமி திருடர்கள் என்று சொல்வது தவறா?

2)சுனாமி கணக்குகளை பகிரங்கமாக வெளியிட நடுவரிடம் சென்றால் எங்கே தாங்கள் திருடியது வெளியே தெரிந்து விடுமோ என அஞ்சி நம்ம ஊர் அஜ்ஜஸ்மென்ட் ஆடிட்டர் மொட்டை கணக்கை வெளியிட்டு முழு கணக்கு வெளியிட்டதாக நாடகமாடியவர்களை சுனாமி திருடர்கள் என்று சொன்னதில் என்ன தவறு இருக்கின்றது?

3) தமிழக மக்களுக்கு வழங்குவதற்க்கு சுனாமி நிதி பற்றாத நிலையில் ஆந்திரா, அந்தமான் என்று கொடுத்தாக கள்ள கணக்கு காட்டிய தமுமுகவை சுனாமி திருடர்கள் என்று சொல்வதில் தவறு உண்டா?

4) மீன் பிடிப்பு வலைக்கு அட்வான்ஸ் என்று சில லட்சத்தை கணக்கு காட்டி இன்று வரை அது என்ன ஆனது என்று தெரியாமல் மறைத்தவர்களை சுனாமி திருடர்கள் என்று சொல்வதில் என்ன தவறு?

5) அரை கோடி கணக்கில் ஒரு சிறு கணக்கு தவறையும் செய்யாமல் 100 சதவீதம் சரியாக கணக்கு வெளியிட்டதாக போலி கணக்கை தயாரித்த தமுமுகவை சுனாமி திருடர்கள் என்று சொல்வதில் என்ன தவறு இருக்கின்றது?

6) சுனாமியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்று சொல்லி வசூலித்து விட்டு அந்த தொகையை அம்மக்களுக்கு வழங்காமல் நாகூரில் சமுதாய நலக் கூடம் அமைக்கும் தமுமுகவினரை சுனாமி திருடர்கள் என்று சொல்வதில் என்ன தவறு இருக்கன்றது?

6)முழு சுனாமி கணக்கையும் விரைவில் அனைத்து விவரத்துடன் வெளியிடுவோம் என்று தமுமுக பத்திரிக்கையில் அறிவித்து இதுவரை விவரகணக்கு வெளியிடாத தமுமுகவை சுனாமி திருடர்கள் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது?

7)சுனாமி வந்து ஒன்னரை ஆண்டுகள் கழிந்த பின்பும் கணக்கை முடிக்காமல் இழுத்தடிப்பவர்களை சுனாமி திருடர்கள் என்று சொன்னால் என்ன தவறு ?.

உண்மையிலேயே தமுமுக தலைமை சுனாமி நிதியை திருடியிருந்தால் கூட இந்த தேர்தலில் திமுகவிடம் இருந்து அவர்கள் வாங்கிய பல லட்சம் தொகையில் இது சிறிய அளவே. தேர்தல் நிதியை கொண்டு சுனாமி கணக்கை சரிபடுத்தியிருக்க முடியும். ஆனால் தமிழ் முஸ்லிம் சமுதாயமே தமுமுகவை இத்தனை அசிங்க படுத்தியும் ஏன் கணக்கை முடிக்காமல் காலம் கடத்துகிறார்கள் என்று தெரியவில்லை ?.

இதில் முக்கிய செய்தி என்னவென்றால் உணர்வு தமுமுகவினரை சுனாமி திருடர்கள் என்று மட்டும்தான் குறிப்பிட்டது ஆனால் 2004,2005 வருட ஃபித்ரா விணியோக கணக்கை தமுமுக இதுவரை வெளியிடாமலும், ஃபித்ரா பணம் எங்கிருந்து வந்தது என்பதை கூட வெளியிடாமலும் இருப்பதாலும் சுனாமி திருடர்களோடு, பித்ரா திருடர்கள் என்பதையும் சேர்த்து சுட்டிகாட்டினால் சமுதாயத்திற்க்கும் நல்லது மற்றும் சமுதாய அமைப்புகளுக்கும் நல்லது.

வஸ்ஸலாம்,
சைதை அஹமது அலி.
ahamedali2006@gmail.com

0 Comments:

Post a Comment

<< Home