|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Tuesday, July 04, 2006

தமுமுக தலைவர்களின் லட்சனம் பாரீர்..

ஏகனின் திருப்பெயரால்..
இஸ்லாமிய சகோதரர்களே, அஸ்ஸலாமு அலைக்கும்,

கீழ்கானும் வாசகங்கள் கருனாநிதியை புகழ்ந்து திமுகவின் பத்திரிக்கை முரசொலியில் வந்த செய்திகள் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. இது எங்களை விலைக்கு வாங்க எந்த கரண்சியும் இந்த உலகில் இன்னும் அச்சடிக்கபடவில்லை என்றும் விழித்து கொண்டு இருக்கும் நேரமெல்லாம் உங்களுக்காக உழைத்து கொண்டு இருப்போம் என்று சுயதம்பட்டம் அடிக்கும் தமுமுகவின் வார இதழில் இருந்து எடுக்கப்பட்ட வாக்கியங்கள்.
அரசு சில நல்ல திட்டங்களை நிறைவேற்றும் பொழுது வரம்புமீறாமல் பாராட்டவேண்டும். அதுபோல அரசு தவறு செய்தால் தட்டி கேட்க வேண்டும். ஆனால் கடந்த 2 வருடத்திற்க்கு முன்பு திமுக கூட்டனியை ஆதரித்த தமுமுக பிறகு அதன் தலைவர்களின் பண, விளம்பர ஆசையால் திமுகவின் உள்பிறிவாக மாறி அதற்க்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்துள்ளனர். அதன் தொடர்சிதான் இது. நாம் தமுமுக தலைவர்களின் துரோகத்தை தோலுறிக்கும் பொழுது சில இயக்க வெறியில் முழ்கியுள்ள, சகோதரர்கள் கோபப்பட்டு நமக்கு மெயில் அனுப்புகிறார்கள். அந்த சகோதரர்கள் நமது கீழ்கானும் கேள்விக்கு பதில் தருவார்களா?

1)கருனாநிதி ஆட்சிக்கு வந்தவுடன் கோவை சிறைவாசிகள் ஜாமினில் வெளியே வந்து விடுவார்கள் என்று மேடைக்கு மேடை பேசி திரிந்த தமுமுகவினர் இன்று சிறைவாசிகளின் விவகாரத்தில் தன்னால் தலையிட முடியாது என்று நீதிமன்றத்தை காட்டி நழுவிய கருனாநிதியை அவர்கள் கண்டிக்காமல் இருப்பதை எப்படி சொல்வது? சுpறைவாசிகளின் விடுதலைக்காக கருனாநிதி அரசை எதிர்த்து போராட்டம் அறிவிக்க தமுமுக தயாராகாதது ஏன்?

2) ஜெயலலிதா அமைத்தது போலி ஆணையம், ஒரு வேஸ்ட் பேப்பர் என்று முழங்கிய தமுமுக தலைவர்கள் அதை இன்று நிறுபிக்காமல் இருப்பது ஏன்?. ஆணையம் அமைக்கப்பட்டது உண்மையானது என்று அன்று நன்றாக அறிந்த நிலையில் அதை மறைத்து ஆணையத்தை விமர்சித்து திமுகவை ஆதரித்தவர்களை திமுகவிற்க்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்தவர்கள் என்று சொல்வதில் என்ன தவறு இருக்கிறது? இன்று வரை ஆணையத்தை ஒத்துக்கொண்டு மறுப்பு தெரிவிக்காதது ஏன்?.

3)ஜெயலலிதா மதமாற்ற தடை சட்டத்தை வாபஸ் வாங்கவில்லை என்று முழுங்கிய தமுமுக இன்று கருனாநிதியே வாபஸ்வாங்கப்பட்டது உண்மைதான் என்று ஒத்துக்கொண்ட பிறகு அதை பற்றி தமுமுக மறுப்பு தெரிவிக்காதது ஏன்?

4)மத்தியில் இடஒதுக்கீடு தயாராகிவிட்டது இன்னும் சில மாதத்தில் இடஒதுக்கீடு அறிக்கை வெளிவந்து விடும் என்று தேர்தலில் முழங்கி வந்த தமுமுக தற்போது அதை பற்றி வாயே திறக்காமல் அதை மறைத்து அர்ஜீன் சிங், சோனியாவின் சில சிறுபான்மை சிறு திட்டங்களை பற்றி பெருமைபட்டு திரிவது ஏன்? சமுதாயத்தை அடகு வைத்து திமுகவிடம் பெற வேண்டிதை பெற்றுக்கொண்டு இன்று கருனாநிதிக்கு ஜால்ரா அடித்து தமுமுக வார இதழில் வெளியான செய்திகள்.

தமிழக முதல்வர் கருணாநிதி எப்போதெல்லாம் தமிழக எல்லையைத் தாண்டு கிறாரோ அப்போதெல்லாம் தமிழகம் தழைக்கும் திட்டங்கள் தலையெடுக்கின்றன.

கடந்த ஆட்சிக் காலத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, ஹைதரா பாத்திற்குச் சென்றால் உப்பகையிலே ஓய்வெடுப்பார். திராட்சை ரசத்தைப் பருகி பரவசம் காண்பார். ஆனால் கருணாநிதியோ, மாநிலம் தாண்டிச் சென்றாலும் தமிழகப் பயன்பாட்டுத் திட்டங்களின் ரசத்தை தமிழக மக்களுக்கே ஊட்டி மகிழ் கிறார்.

பெரும்பாலும் கருணாநிதியின் ஓய்வு என்பது தமிழ் இலக்கிய ஆய்வு என்றுதான் பொருள்படும். ஆனால் பெங்களூல் அவன் ஓய்வு என்பது தமிழக மக்களின் வேலை வாய்ப்புக்கான ஆய்வு என்று பொருள்பட்டிருக்கிறது.
கருணாநிதிக்கு ஒரு ராசி (?) உண்டு. அவர் விரும்பிய திட்டம் ஒன்றை வெளியிட்டு விடுவார். அத்திட்டம் தமிழகம் முழுவதும் பரவ வேண்டும், பேசப்பட வேண்டும் என்று அவர் ஆசைப்படுவார்.

வைக்கம் வீரர் என்ற பெருமையைப் பெற்ற பெயாருக்கு நெஞ்சில் தைத்த முள்ளாக இருந்த அம்சம் ஒன்று உண்டு. நெஞ்சில் தைத்த அந்த நெருஞ்சியை நீக்கும் பாங்கில், ''அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்'' என்ற சட்டத்தை இயற்றி சமூக மறுமலர்ச்சிக்கு, சமநீதிச் சிந்தனைக்கு ஊட்டமூட்டினார் கருணாநிதி.

சகோதரர்களே அப்பட்டமாக திமுகவின் தீவிர ரசிகர்களாகிவிட்ட இந்த தமுமுக தலைவர்கள்தான் இனியும் நமக்காக பாடுபாடுவார்களா?, திமுகவை நிர்பந்தித்து நமது சமுதாயத்திற்க்கு வேண்டியதை பெற்றுதருவார்கள் என்று நம்புகிறீர்களா?. பதில் சொல்லுங்கள்.

0 Comments:

Post a Comment

<< Home