தமிழக அரசே அரண் திரைப்படத்தை தடைச்செய்...
ஏகஇறைவனின் திருப்பெயரால்..
சமீபத்தில் வெளிவந்துள்ள அரண் என்கிற படம் முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவும், மதவெறியர்களாகவும் சித்தரித்து இருக்கிறது என்பதை அறிந்து, அப்படி என்ன செய்தியைத்தான் அந்த படத்தில் சொல்கிறார்கள் என்பதை அறிய அதை கண்டேன். தமிழ் சினிமாவாகட்டும் மற்ற இந்திய சினிமாவாகட்டும் முஸ்லிம்களை போதைக்கு அடிமையான மஸ்தான்களாகவும், பெண் வெறிபிடித்த அரேபியா ஷேக்குகளாகவும், தாய் மொழியை பேசத்தெரியாத நிம்பிள்கி நம்பிள்கி காமெடியன்களாகவும், பச்சை தலைப்பாய் மற்றும் அலங்கோலமான உடையணிந்த சாம்ராணி புகை போடுபவர்களாகவும், குண்டு வைக்கும் தீவிரவாதியாகவும் காட்டுவதை வழக்கமாக கொண்டவர்கள். இவர்கள் இப்படி படம் எடுப்பது வழக்கம்தான் என்ற மனஓட்டத்தில் படம் கண்டேன். ஆனால் இதுவரை இப்படி ஒரு முஸ்லிம் விரோத கருத்துகள் அடங்கிய படம் இந்தியாவில் வந்ததில்லை என்று சொல்லுமளவுக்கு படம் முஸ்லிம் விரோத கருத்துக்களை தாங்கியிருந்தது. இப்படி இந்திய முஸ்லிம்களை எந்த அளவுக்கு கேவலப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு கேவலப்படுத்தி இருக்கிறது இந்தப்படம். சென்சார் போர்டு என்று இருந்து கொண்டு என்ன செய்கிறதோ தெரியவில்லை?. இந்த படம் வெட்ட வேண்டிய இடத்தில் எந்த வெட்டும் இல்லாமல் வெளியாகியதிலிருந்து அந்த சென்சார் போர்டிலும் காவிகள ஆக்கிரமித்து இருப்பதை அறிய முடிகிறது.
முஸ்லிம்களை தேசப்பற்றுக்கு எதிரானவர்களாகவும், காஷ்மீர் முஸ்லிம்களை ஆப்கானில் இருந்து வந்த வந்தேரிகளாகவும், பள்ளிவாசலில் ஆயுதங்களை பதுக்கி வைப்பவர்களாகவும், முஸ்லிம் அல்லாதவர்களை இன உறுப்பை பார்த்து கொல்லக்கூடியவர்களாகவும், பெண் பித்தர்களாகவும், சிந்தனைதிறன் இல்லாதவர்களாகவும், இந்தியர்கள் என்று தங்களை சொல்வதில் வெட்கப்படுபவர்களாகவும், அப்பாவிகளை கொல்வதை புனித போர் என்று நினைக்க கூடியவர்களாகவும், சிறுவர்களை குண்டு வைத்து கொல்லக்கூடியவர்களாகவும், மனித உரிமை கமிசனை சேர்ந்தவர்களை ரானுவ செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடுபவர்களாகவும், இப்படி எப்படி எல்லாம் முஸ்லிம்களை தவறாக சித்தரிக்க முடியுமோ அத்தனையும் வெளிப்படுத்தியுள்ளார் படத்தின் இயக்குனர்.
பொதுவாக சினிமாவில் உள்ளவர்கள் சங்பரிவாரிவார சிந்தனையில் உள்ளவர்களாக இருப்பார்கள். உதாரணத்திற்க்கு அர்ஜீன், விஜயகாந்த், மணிரத்னம் போன்றவர்களை சொல்லலாம். நான் கூட இவர்களில் யாராவது சம்மந்தப்பட்ட படமாகத்தான் அரண் இருக்கும் என்று நினைத்தேன். எப்பொழுதுமே முஸ்லிம்களுக்கு எதிராக இருக்கும் மார்வாடிகளை சேர்ந்த ஆர்.பி.சௌத்ரி என்பவர்தான் படத்தின் தயாரிப்பாளர் என்பதில் நமக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. ஆனால் படத்தில் வரும் இயக்குனரின் பெயரை பார்த்த உடன் வியப்பின் விளிம்பிற்க்கே சென்றேன். ஏனென்றால் படத்தை இயக்கியது ரானுவத்தில் பணிபுரிந்த ஒரு அதிகாரி மேஜர் ரவி என்பவர். ரானுவத்தில் இருந்த ஒரு அதிகாரிக்கே ஒரு சமுதாயத்தின் மீது இத்தனை வெறுப்பும் சங்பர்வார சிந்தனை என்றால் மற்ற ரானுவத்தினர் எப்படி இருப்பார்களோ?. அந்த கொடுர சிந்தனையை நினைக்கும் பொழுது எதாவது ஒரு கலவரத்தில் இவர்கள் எப்படி நம்மை பாதுகாப்பார்கள் என்ற பயமே நம்மை ஆட்கொள்கிறது.
இதற்காக காஷ்மீரில் நடக்கும் எல்லா மனித நேயமற்ற தீவிரவாத செயல்களை நான் ஆதரிக்க வில்லை. ஒரு குறிப்பிட்ட சிலபேர் செய்யும் அந்த கொடுர செயலுக்காக ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் குற்றவாளிகாளக சித்தரிப்பது எப்படி நியபயமாகும்?. எப்பொழுதுமே முஸ்லிம்களை தீவிரவாதிகளாக காட்டக்கூடிய சினிமாகாரர்கள் ஒரு சில நல்ல முஸ்லிம்களாக சில காதாபாத்திரத்தை உறுவாக்கி உலாவ விடுவார்கள், ஆனால் இந்தப்படத்தில் ஒரே ஒரு முஸ்லிமை காட்டி கொடுக்கும் ஒருவரை நல்லவராக சித்தரித்ததை தவிர்து அனைத்தும் இந்த படத்தில் தவிர்கப்பட்டுள்ளது.
எந்த சட்டதிட்டமும் இல்லாத போரில் கூட பெண்களை கொல்லக்கூடாது, குழந்தைகளை கொல்லக்கூடாது என்று சொல்கிற மார்க்கம் இஸ்லாம். இந்த மார்க்கம் எப்படி குண்டு வெடிப்பையும், அப்பாவிகள் கொல்லப்படுவதையும் ஆதரிக்கும். இன்று காஷ்மீரில் என்ன நடக்கிறதோ அதே நடப்புதான் இலங்கையில் நடக்கிறது. எப்படி காஷ்மீர் போராளிகள் ஆயுதப்போராட்டம் செய்கிறார்களோ அதை போலத்தான் இன்னும் ஒரு படி கூடுதலாக விடுதலைப்புலிகள் இலங்கையில் செய்கிறார்கள். அதை போராளிகளின் போராட்டமாக சித்தரிக்கும் இந்த சினிமாகாரர்கள் காஷ்மீர் போராட்டத்தை தீவிரவாதம் என்று கொக்கரிப்பதுதான் வேடிக்கையானது.
இத்தகைய முஸ்லிம் விரோத படங்களுக்கு எதிராக நமது சமுதாய அமைப்புகள் களமிறங்க வேண்டும். இப்படத்தை எதிர்பதாக கூறி விளம்பரப்படுத்தவும் கூடாது ஆனால் ஜனநாயக ரீதியான எதிர்பையும் பலமாக காட்ட வேண்டும். அப்படி விளம்பர படுத்தினால் சரியாக ஓடாமல் இருந்து கொண்டிருக்கிற அந்த படம் வெற்றியடையக்கூடும். எனவே இதில் சமுதாய அமைப்புகள் சற்று சிரத்தை எடுக்க வேண்டும். முஸ்லிம் விரோத கருத்தை கொண்டுள்ள இந்த படத்தை தமிழக அரசு தடை செய்ய வேண்டும்.
அன்புடன்.
அப்துல்லா.

0 Comments:
Post a Comment
<< Home