|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Thursday, August 10, 2006

தொடை நடுங்கிய தோழர்.

அல்லாவின் திருப்பெயரால்..

வெளிச்சம் வாசகர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்,

குறை சொல்லியே பிழைப்பு.
தமிpழ் முஸ்லிம் இயக்கத்தின் மாபெரும் மக்கள் சக்தி இயக்கம் ததஜவை பற்றி குறை சொல்லியே பிழைப்பு நடத்தும் சகோ.முகவை தமிழன் அவர்கள் தற்போதும் ததஜவை விமர்சித்து கட்டுரை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். பழையவைகளை நோண்டி அதை வைத்து பித்னா செய்வதில் கைதேர்ந்தவர்
இவர் என்பது நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியது இல்லை.

தொடை நடுங்கிய தோழர்.
என்ன திடிரெண்டு ஹசன் அலிக்கு இவர் பெரிய அளவில் ஜால்ரா அடித்துள்ளார் என்று நீங்கள் நினைத்தால் அதற்கான காரணம் இதுதான். இரண்டு சகோதரர்கள் தொலைபேசியில் முகவைதமிழனின் அவதூறு செய்திகளை சுட்டிகாட்டி கண்டித்து பேசியதற்கே, கைகால் உதரி தன்னை அவர்களும் பிஜெவும் கொலை செய்யப்போவதாகவும், தனது சாவுக்கு அவர்கள்தான் காரணம் என்று பெட்டைத்தனமாக தொடை நடுங்கி பயத்தில் தனது இணையத்தில் இவர் உளரியது அனைவரும் அறிந்த செய்தியே.

பாதுகாப்பு வேண்டி ஜால்ரா புராணம்.
இப்படி தினம் ஒரு கற்பனை கதைகளையும், அவதூறுகளையும் வெளியிட்டுவரும் தனக்கும், தனது அமைப்புக்கும் எதாவது பிரச்சனை என்றால் பாதுகாப்பு வேண்டி செல்ல யாராவது ஒரு அரசியல்வாதி வேண்டாமா?. அதற்காகத்தான் இதுவரை திமுக கருணாநிதி ஜால்ரா புரணம், தற்போது தனது தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ஹசன் அலி அவர்களுக்கு இத்தனை பெரிய ஐஸ் என்பது சிறிதாக சிந்திக்க கூடியவர்களுக்கு தெளிவாக விளங்கும்.

உண்மையாக இருந்தால் பாராட்டுகிறோம்.
முகவை சட்டமன்ற உறுப்பினர் ஹசன் அவர்கள் காமராஜர் விழாக்களில் கலந்து கொள்ளும் பொழுது சிலைக்கு மாலை அணிவிக்காமலும், தன்னை ஆரத்தி எடுப்பதற்க்கும் மறுத்து விட்டாராம். பெரும்பாலும் கற்பனைகளையும், கட்டுகதைகளையும் வெளியிடும் நக்கீரனின் இந்த செய்தி உண்மையானால் முதலில் சந்தோசப்படுவது நமது சமுதாயம்தான். ஆனால் தேர்தலில் ஹசன் அவர்கள் கையெடுத்து கும்பிட்டு ஓட்டு கேட்டது அனைவரும் அறிந்ததே. தற்போது அவர் மாறி இருந்தால் சந்தோசமே.

நம்பமுடியாத காரணம்.
ஆனால் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் அன்வர்ராஜா அவர்கள் கையெடுத்து கும்பிட்டதும் ஆராத்தி எடுக்க சம்மதித்ததுதான் அவருக்கும் தமுமுகவுக்கும் பிரச்சனை ஏற்பட்டது என்று முகவைதமிழன் கதையடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒரு வேளை தவ்ஹித் சகோதரர்கள் தமுமுகவில் இருந்த காலத்தில் இது நடந்திருந்தால் அது ஏற்றுக்கொள்ளதக்கது. ஆனால் பிரிவுக்கு பிறகு கரகாட்டத்தை தலைமை ஏற்றி நடத்திய தமுமுகவால், மேடைதோறும் கையெடுத்து வேட்பாளர்களை கும்பிட அனுமதித்த தற்போதைய தமுமுகவால் அது போன்ற பிரச்சனை ஏற்பட்டது என்றால் நம்பமுடியவில்லை.

காரணம் இல்லாத ஆதரவு.
இடஒதுக்கீடு (முறைபடி) கொடுத்தால் ஆதரிப்போம் என்று பத்து லட்சம் மக்கள் ஒருமித்த குரலில் குடந்தையில் வாக்கு கொடுத்தற்கு ஏற்ப, ததஜ இடஒதுக்கீடு ஆணையம் அமைத்த அதிமுகவை சென்ற தேர்தலில் ஆதரித்தது அதில் கூட்டணி வேட்பாளர்களுக்கு எதிராக முஸ்லிமே நின்றாலும் அவர்களை எதிர்த்து வேலை செய்தது அப்படி உள்ளவர்களில் ஹசன்அலி அவர்களும் ஒருவர். சுரியான காரணத்துக்காக அதிமுகவை ஆதரித்தது ததஜ. ஆனால் எந்த காரணமும் இல்லாமல் வாங்கியதற்க்கு விசுவாசமாக தமுமுக பல முஸ்லிம் வேட்பாளர்களுக்கு எதிராக வேலை செய்தது. இதற்க்கு உதாரணமாக கடையநல்லூர் பீட்டர்அல்போன்ஸ், சேப்பாக்கம் கருணாநிதிக்கு எதிராக நின்ற முஸ்லிம் வேட்பாளர்களை குறிப்பிடலாம்.அப்படி முஸ்லிம் வேட்பாளர்களுக்கு எதிராக தமுமுக கங்ஙனம் கட்டிகொண்டு வேலை செய்ததே இதை பற்றி வாய் திறக்காத முகவை தமிழன் சரியாக காரணத்துக்காக அதிமுக கூட்டணியை ஆதரித்த ததஜவை குறை சொல்ல என்ன அருகதை இருக்கிறது?.

நக்கல் நடையை நிறுத்த வேண்டும்.
இஸ்லாமிய வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வான ஹீதைபியா உடன்படிக்கையை முகவைதமிழன் போன்றோர் ஒரு அமைப்பை நக்கலடிக்க பயண்படுத்துவதை நினைக்கும் பொழுது மனம் வேதனையடைகிறேன். இது போன்ற உண்மை முஸ்லிம் செய்ய துணியாத வேலைகளை முகவை தமிழன் நிறுத்த வேண்டும். யாரையாவது விமர்சிக்க நினைத்தால் நேரிடையாக விமர்சிக்க வேண்டுமே தவிற இஸ்லாமிய வரலாற்றை இழுத்து கலங்கப்படுத்துவது முறையல்ல. இத்தகைய போக்கை யார் கடைபிடித்தாலும் அனைவரும் தங்கள் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும்.

ஹசன்.
சவுதி அரோபியா.

0 Comments:

Post a Comment

<< Home