|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Sunday, August 06, 2006

தமிழ் முஸ்லிம்களை அரை வேக்காடாக்கும் ஒரு மேடை.

பிஸ்மில்லாஹ்
ஆனால் அனேகமானவர்கள் விவேகமானவர்கள் என்பதை மறந்து எதை எப்படியும் எழுதிவிடலாம் என்ற போக்கு குள்ள நரிகளில் ஒரு கள்ள நரி என்ற உவமைக்கு ஒப்பாக இருக்கின்றது. உதாரணமாக தமுமுக மற்றும் ததஜ இயக்கங்களோடு இவர்களுக்கு இருக்கும் கண்ணோட்டம் வித்தியாசமானது. உண்மையில் இரு இயக்கங்களும் அடிப்படையிலிருந்தே வித்தியாசப் படுவதாக இருந்தாலும் இருவரும் பத்திரிகைகள் நடத்துகிறார்கள் என்ற ஒற்றுமை மட்டுமே உள்ளது. ஒரு நடு நிலை நபராக இரு பத்திரிக்கைகளையும் உற்று நோக்குபவர்கள் ஒன்றோடு இன்னொன்றை இணைத்து ராமகோபால - த்தனங்களை நிகழ்த்தி சேவை செய்யமாட்டார்கள்.இரண்டிலும் வரக்கூடிய செய்திகளையும் இறைவனை மனதில் நிறுத்தி விமர்சிக்க வேண்டும்.
ஆனால் சம்பந்தமே இல்லாத இரு செய்திகளை இணைத்து தன் இலக்கிய சேவையை செய்துகொண்டு நடநிலையாளன் வேடம் பூணுவது, மூக்கணாங்கயிறுக்கு தெரியாமல் மூச்சு விடுவது போலாகும். எங்கே உண்மை செய்திகள் உலவுகின்றது?யார் எப்படியெல்லாம் சொதப்புகின்றார்கள்?
இன்னபிற பெண் வேட்பாளர்கள் போல்தான் சல்மாவும் தோற்றாள் என்றில்லாமல இணையதள சேவைதான் தோற்கடித்தது என்று (அப்பாவித்தனமாக) கொக்கரிப்பது யார்? (சல்மா தொகுதி வாக்காளர்களுக்கும் இவ்விணைய தளங்களுக்கும் சம்பந்தமே இல்லை என்பதறிய மூதறிஞனாகத் இருக்கவேண்டியதில்லை - மூடனுக்கும் தெரிந்து விடும்) (கனவில் கூட முஸ்லிம்கள் மீது கருணை செய்ய மறுககும் கருணாநிதியை) கருணாநிதியின் நல்ல பெயரை களங்கப்படுத்துவதர்காக என்று எழுதி மொத்த முஸ்லிம்களுக்கும் முட்டாள் முத்திரை தந்து, தம் (40 பேர் கூட தேறாத) புதிய கட்சியின் ஸ்திரத் தன்மைக்கு கருணாநிதியிடமிருந்து எதிர்ப்பு வராதிருக்க வருடிக்கொடுப்பது யார்? எழுதிக்கொண்டே இருக்ககலாம் ஆனால் இப்போது இங்கு நான் சொல்லவந்தது இதுதான்..இருவரின் பத்திரிக்கைகளிலும் இரண்டு வௌ;வேறு செய்திகள் வருகின்றன: ஒன்று பில்கேட்ஸ் முஸ்லிமாகிவிட்டாரா? (உணர்வில் கேள்வி பதில்) இன்னொன்று : நபிகளாரை தரக்குறைவாக வரைந்த டென்மார்கியன் செத்துவிட்டான். (மக்கள் உரிமை)
பில்கேட்ஸ் முஸ்லிமாகிவிட்டாரா? என்ற கேள்விக்கு ஒரு அரபு நாட்டு பத்திரிக்கையில் இவ்வாறான செய்தி வெளியிட்டிருந்தாலும் பில்கேட்ஸ் முஸ்லிமாகிவிட்டார் என்பதற்கு நம்பும் படியான எந்த தகவலும் இல்லை என்று எழுதியிருந்தார்கள். (அல்லாஹ்வின் உதவியால் அதுவே உண்மையாக இருந்தது) இந்த பதிலின் மூலமாக எந்த ஒரு நபரையும் திசை திருப்பவோ வழிகெடுக்கவோ முயலவுமில்லை, அது முடிவதுமில்லை. (அரபு நாட்டு பத்திரிக்கை என்பது ஏப்ரல் ஃபூல் என்றிருக்கின்றார்கள்) எது ஏப்ரல் ஃபூல் எது ஏப்ரல் அல்லாத ஃபூல் என்று நேரம் வீணடிக்காதது தப்புதான். ஆனால் அறிந்தும் அறியாமலும் எந்த பின் விளைவுகளையும் ஏற்படுத்தாத இந்த கேள்வி பதில் செய்தியை கார்கில் அளவுக்கு புரட்டிப் பார்த்தார்கள் எடுபடவில்லையா? மரணம் வரும் முன் தருணம் வரும் என்ற காத்திருந்தார்கள்.

இந்நேரம் மக்கள் உரிமை எனும் பத்திரிகையில் நபிகளாரை தரக்குறைவாக வரைந்த டென்மார்க் கார்டூனிஸ்ட் ஒரு கொடுரமான சாலை விபத்தில் இறந்துவிட்டதாக (இவர்கள் போன்ற) ஈமெயில் பேர்- வழிகள் அவிழ்த்து விட்ட புரளியை நம்பி செய்தியாக வெளியிட்டார்கள். எண்களையும் மீன்வயிற்றில் தென்படும் அரபி எழுத்துகளையும் இஸ்லாத்திற்கான ஆதாரமாக உளறித்திரியும் சிலருக்கு இன்னொரு அவல் பொட்டலமாக இதுவும் அமைந்தது. (அதன் பின்விளைவுகளை அறிவீனங்களை நாம் அலசவில்லை!)
இந்த செய்தியை, உணர்வின் பாதையில் மக்கள் உரிமை என்ற (கவர்ச்சியான) தலைப்பை கொடுத்து தமது ராமகோபாலத்தனத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள். உணர்வே இல்லாமல் உணர்வை வம்புக்கு
இழுக்கின்றார்கள். கூடவே மக்கள் உரிமை என்ற பத்திரிகையின் வருந்துதல் செய்தியை வெளியிட்டதை முரசடித்து பத்திரிக்கை உலகில் இதுவரை யாரும் சதிக்காததை போன்று ஒரு செய்தி வேறு. (சுனாமி சுருட்டலை திரும்பத் திரும்ப மரணம் வரை நினைவூட்டி அப்பாவிகளுக்கு அனாதைகளுக்கு வந்து சேரவேண்டிய அவர்களின் அந்த உரிமைக்காக குரல் கொடுக்காமல் இவர்களின் இந்த உரிமைக்கு குரல் கொடுப்பது கையில்லாதவனுக்கு பத்து விரல் என்று புத்தி பேதலித்தவன் கூற்றுக்கு
சமம்)
ஆக இவர்கள் தவறுகளை கைவிடட்டும்... தவறுகளில் கையிடவேண்டாம்....
சாதாரண தமிழன்

0 Comments:

Post a Comment

<< Home