|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Thursday, August 10, 2006

சமுதாய பத்திரிக்கைகள் முன் வருமா?

அல்லாவின் திருப்பெயரால்..

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று சொல்லுவார்கள். உண்மையில் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டமோ இல்லையோ. அந்த கூத்தாடிகளின் செய்திகளை வெளியிடும் வார பத்திரிக்கைகளுக்கு படு கொண்டாட்டமே. உலகில் என்ன பயங்கர சம்பவங்கள் நடந்தாலும், எந்த நாடு எந்த நாட்டை அழித்தாலும், எந்த பேரழிவு நடந்தாலும் அதை பற்றிய செய்திகளை மறைத்து நடிகர், நடிகைகளை உலகமகா தலைவர்கள் போலவும் அவர்கள் பற்றிய செய்திகளை வாழ்க்கை வரலாறு போல வெளியிட்டு கேவலபிழைப்பு நடத்துபவர்கள்தான் இந்த வாரபத்திரிக்கைகள். இதில் குங்குமம், ஆனந்தவிகடன், குமுதம் போன்றவை முன்னிலையில் வகிக்கின்றன். இவர்களின் இது போன்ற செயல்களினால் அந்த பத்திரிக்கையின் வாசகர்கள் உண்மைகளை மறந்து மூளை மழுங்கி கற்பனை வாழ்க்கையில் தங்கள் காலத்தை ஓட்டுகின்றனர்.

அந்த நடிகருக்கும் அந்த நடிகைக்கும் தொடர்பு என்பது போன்ற கிசுகிசு செய்திகள் இல்லாத வார ஏடுகளே தமிழகத்தில் இல்லை என்று கூட சொல்லலாம். இத்தகைய பத்திரிக்கையை நடத்துபவர்களில் சிலர் தங்களை பகுத்தரிவாளர்கள் என்று சொல்வதுதான் வேடிக்கை. இத்தகைய செயல்கள் எல்லாம் மற்ற சமுதாயத்தவர்கள் செய்தியில்தான் இதுவே முஸ்லிம் சம்மந்தப்பட்டதாக இருந்தால் அதை இரட்டடிப்பு செய்து சமுதாயத்தில் பீதியை உண்டாக்கவும் இவர்கள் தயங்குவது இல்லை.

இந்த அவல நிலை இந்தியாவில்தான் அதிகமாக அதிலும் குறிப்பாக தமிழகத்தில்தான் அதிகமாக உள்ளது. இந்த நிலை மாற வேண்டும் ஒவ்வொரு பாமரனும் உலகில் என்ன நடக்கிறது என்பதை அறிய வேண்டும். நாட்டு நடப்பு, சமுதாய நிகழ்வுகள் பற்றிய தனது அறிவை பெறுக்கி கொள்ள வேண்டும். சினிமா, நடிகர்கள் செய்தி இல்லால் பத்திரிக்கை நடத்த முடியாது என்பது ஒரு மாயையாகும். சுpனிமா செய்திகளே, நிகழ்சிகளே இல்லாமல் விண்டிவி போன்றவை பல மாதம் நடந்து மக்களின் பேராதரவை பெற்றது நினைவில் இருக்கலாம். ஒரு சேனலே நடத்த முடியும் எனும்பொழுது பத்திரிக்கைகள் நடத்த முடியாதா?.

சினிமாவை தவிர்த்து பத்திரிக்கை நடத்த மற்றவார பத்திரிக்கைகள் முன்வருமா என்பது சந்தேகமே, ஆனால் நமது சமுதாய வார ஏடுகள் உணர்வு, மக்கள் உரிமை போன்றவை நமது சமுதாய செய்திகளை மட்டுமே வெளியிடாமல் அனைவரும், அனைத்து சமுதாய மக்களும் படிக்கும் வகையில் வெளிவர வேண்டும். எல்லா சாதனைகளுககும் சொந்தக்காரர்களான நமது சமுதாயம் இதிலும் முன்மாதிரியை ஏற்படுத்தி சாதனை படைக்க வேண்டும். இது போன்று பத்திரிக்கைகள் முன்வந்தால் மக்கள் ஆதரவு நிச்சயம் கிடைக்கும்.

அப்துல் மஜித்,
சென்னை.

0 Comments:

Post a Comment

<< Home