|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Tuesday, August 15, 2006

தமுமுகவோடு நீங்கள் சேரலாமா???.

அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அஸ்ஸலாமு அலைக்கும்,

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் என்ற முஸ்லிம் மக்கள் இயக்கத்தின் 2 வருட வளர்சி எனபது ஒரு இமாலய சாதனையாகும். எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே. எந்த முஸ்லிம் இயக்கமும் பல வருடங்களாகி சாதிக்க முடியாததை 2 வருடத்தில் ததஜ சாதித்துள்ளது.

10 லட்சம் மக்களை திரட்டி குடந்தையில் பிரமாண்ட இடஒதுக்கீடு பேரணியை நடத்தியது.

ஜக்காத், ஃபித்ரா, சுனாமி நிவாரண நிதி என்று எல்லா அமைப்பையும் விட பல மடங்கு அதிகமாக மக்கள் ததஜவுக்கு அள்ளி கொடுத்தது. அதை முறையாக ததஜ விணியோகம் செய்தது.

பாபரி மஸ்ஜித் போராட்டம், மோடியை எதிர்த்து போராட்டம், ஜெயலலிதாவை எதிர்த்து போராட்டம், இஸ்ரேலை எதிர்த்து போராட்டம், நபி(ஸல்) கார்டுனுக்கு எதிரான போராட்டம் என்று மற்ற அமைப்புகள் நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு மக்களை திரட்டி போராடியது.

கல்வி உதவிக்காக பல லட்ச ருபாயில் நோட்டு புத்தகம், பாடபுத்தகம், படிப்பு செலவு என்று விணியோகித்தது.

சிறைவாசிகளின் விடுதலைக்காக அன்றைய முதல்வரை நேரில் சந்தித்து வலியிருத்தியது.

முஸ்லிம்களின் கல்வி,பொருளாதாரா நிலைகளை ஆய்வு செய்து இடஒதுக்கீடுக்கு பரிந்துரை செய்யும் என்ற புதிய சரத்தை புதிதாக ஆணையத்தில் சேர்க்க வைத்தது.

இடஒதுக்கீடு ஆணையம் அமைத்ததற்காக பூஜ்ஜியத்தில் இருந்த அதிமுகவை ஆதரித்து பலமான எதிர்கட்சியாக அமரவைத்தது.

இரத்ததானம் வழங்குவதில் முஸ்லிம் அமைப்புகளில் முதல் இடம் பெற்றது.

தீ விபத்து, சமுதாய பாதிப்பு, பிரச்சனை எங்கெல்லாம் ஏற்படுகிறதோ அங்கெல்லாம் உடனே களமிறங்கி துரிதமாக செயல்பட்டது.

இப்படி பல சாதனைகளை ததஜ செய்துள்ளது. ததஜ எந்த அளவுக்கு வளர்ந்து இருக்கிறது என்றால் தவ்ஹித் சகோதரர்கள் தங்களோடு இருந்தால் தமுமுகவின் வளர்சிக்கு முட்டுக்கட்டையாகும் என்று கூறி சதித்திட்டம் போட்டு வெளியேற்றினார்களே அந்த தமுமுக நிர்வாகிகளே மீண்டும் ததஜவை சேர்தவர்களை தங்களோடு வந்து இணையும் படி கெஞ்சி வருகிறார்கள். முன்பு துபையில் தமுமுக நிர்வாகி தமீமுன் அன்சாரி இவ்வாறு ததஜவினரை அழைத்து தங்களோடு இணையும் படி கெஞ்கினார். ததஜவின் தலைவர் சகோ.பிஜெவின் தலைமையை தாங்கள் ஏற்க்க தயார் என்று தூது விட்டார். அது போல தற்போது கீழக்கரையில் அதே அன்சாரி சகோ.பிஜெவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தமுமுக தலைவர்களுக்கு,
எப்படி வெட்கமில்லாமல் தங்களால் பழி சுமத்தி வெளியேற்றியவரை மீண்டும் வந்து உங்களோடு இணைய சொல்கிறீர்களோ தெரியவில்லை. சகோ.பிஜெ மீது அவதூறு பரப்புவதற்காக மட்டுமே தனியாக ஒரு கள்ள இணையத்ததை ஆரம்பித்து இதுவரை ஆயிரக்கணக்கான அவதூறுகளையும், பொய்களையும் வெளியிட்டு இருக்கிறார்களே. அதற்க்கு என்ன பதில் தரப்போகிறார்கள். ஒற்றுமையாக இருந்த சகோதரர்களிடம் பகைமையை உண்டாக்கி சுன்னத் ஜமாத்துடன் கூடி பல சகோதரர்களை ஊர் நீக்கம், அடி உதை என்று ஆளாக்கினீர்களே அதற்க்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள். ஒரு தனி டிரஸ்டுக்கு சொந்தமான சொத்துக்களை உங்கள் அமைப்புடையது என்றும் அதை சகோ.பிஜெ அபகரித்து கொண்டார் என்றும் பழி போட்டிர்களே அதற்க்கு என்ன பதில் சொல்வீர்கள். கடையநல்லூரில் ஜாக் என்ற பள்ளி திருடர்களோடு கூடி நன்றாக இருந்த தவ்ஹித் பள்ளியையே இழுத்து பூட்டினீர்களே அதற்;க்கு பதில் சொல்லுங்கள். தவ்ஹிதை எதிர்பதற்க்கு சுன்னத் ஜமாத் கூட்டங்களை நடத்தி கொடுத்தீர்களே. எந்த முகத்தை வைத்து தவ்ஹித்வாதிகளை அழைக்கின்றீர்கள்.

ததஜ தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கு,
நீங்கள் உங்கள் பகைமையை மறந்து தமுமுகவுடன் ஒன்றிணையலாம் என்று நினைத்தால் அது மாபெரும் தற்கொலைக்கு சமமாகும். இவர்கள் பிஜெ என்ற ஒருவரோடு மட்டும் பிரச்சனை செய்திருந்தால் சகோ.பிஜெ மண்ணித்து ஏற்றால் போதுமானது. ஆனால் ஒவ்வொரு ஊரிலும் தவ்ஹித் பிரச்சாரத்துக்கு எதிராக எத்தனை எதிர் வேளைகளை செய்தார்கள் என்பது எங்களை விட உங்களுக்கு தெளிவாக தெரியும். ததஜ என்ற உங்கள் அமைப்புக்கு இருக்கும் சிறப்பு தகுதியே நீங்கள் கணக்கு வழக்குகளில் சரியாக இருப்பீர்கள் என்ற தகுதியும் அது போல தவ்ஹித் கொள்கையை உயிராக கொண்டவர்கள் என்ற தகுதியும்தான். ஆனால் நீங்கள் தமுமுகவோடு இணைந்தால் இந்த இரண்டுமே கேள்விக்குறியாகி விடும் என்பதை நீங்கள் உணரவேண்டும்.

இரண்டு வருட பித்ராவை பல லட்சம் வசூலித்து அதற்க்கு இதுவரை பணம் எங்கிருந்து எவ்வளவு வந்தது என்ற கணக்கையும் ஒவ்வொரு ஊரிலும் எவ்வளவு பித்ரா வழங்கப்பட்டது என்ற கணக்கையும் வெளியிடாமல் அந்த பணத்தை தவறாக செலவு செய்கிற தமுமுகவோடு தாங்கள் சேரலாமா?. அது போல சுனாமியை தமுமுகவோடு பல லட்சம் அதிகமாகவே உங்கள் அமைப்பு வசூலித்து அதை முழுவதுமாக ஒரு பைசா பாக்கி இல்லாமல் நீங்கள் விணியோகித்தீர்கள். ஆனால் தமுமுகவோ இதுவரை அந்த பணத்தை விணியோகிக்காமல் மறைத்து வைத்து இடர்மையம் அது இது என்று மழுப்பி கொண்டு தவறாக பயன்படுத்தி கொண்டு இருக்கிறது. இப்படி பட்ட தமுமுகவோடு நீங்கள் சேரலாமா???. நீங்கள் இப்படிபட்ட தமுமுகவோடு இணையமாட்டீர்கள் என்று நம்புகிறோம்.

அன்புடன் அபுபக்கர்.
சென்னை.


0 Comments:

Post a Comment

<< Home