|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Saturday, August 19, 2006

உலகம் அழியும்வரை ஒரு கட்சி ஆதரவு.

ஏகனின் திருப்பெயரால்..

இஸ்லாமிய சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்,

தென்காசி சித்திக் என்ற இயக்கவெறி சைக்கோ வழக்கமாக சகோ.பிஜெ மீது செய்யும் பித்னா வேலைகளை தொகுத்து கட்டுரை வடிவில் வெளியிட்டு இதை பித்னா மன்னன் அல்கோபர் ரயிசுதீன் வழியாக தமுமுகவால் புதிதாக விலைக்கு வாங்கப்பட்ட இணையத்தில் வெளியிட்டு இருந்தார்.

அவர் வெளியிட்ட பித்னா மெயிலின் சாராம்சம் ஒன்றுதான் அதாவது சகோ.பிஜெ தேர்தலுக்கு முன்னும், தேர்தலுக்கு பின்னும் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தாராம். ஆனால் தற்போது திமுகவை ஆதரிப்பது போல பேசுகிறாராம். ஏன் இவ்வாறு சகோ.பிஜெ பேசுகிறார் என்பதை பார்ப்பதற்க்கு முன்பு தற்போது திமுக எந்த நிலையில் உள்ளது என்பதை அறியலாம்!.

திமுகவின் பார்வையில் ததஜவும், தமுமுகவும்.
சகோதரர்களே! கடந்த மூன்கு ஆண்டுகளுக்கு முன்பு பாராளுமன்ற தேர்தலின் போது தமுமுக திமுக ஆதரவு என்ற நிலையை எடுத்தது. அதிலிருந்து இன்று வரை திமுக என்ன முஸ்லிம் விரோத போக்கை கடைபிடித்தாலும், முஸ்லம்களுக்கு எதிராக எப்படி செயல்பட்டாலும் தமுமுக அதை கண்மூடி ஆதரித்து ஜால்ரா அடித்து அடிமையாக இருந்து வருகிறது என்பது பொதுவாக அனைவருக்கும் தெரிந்த செய்தி. தமுமுக தலைவர்கள் திமுகவிடம் அடிமைசாசனம் எழுதி கொடுத்து பெற்ற தொகைக்கு விசுவாசமாக அவர்கள் எதையும் கண்டு கொள்வதி;லை.

கடந்த தேர்தலில் தமிழ் முஸ்லிம்களின் மாபெரும் சக்தி ததஜவின் ஆதரவை பெற திமுக கடுமையாக முயற்சித்தும். ஆனால் இடஒதுக்கீடு பற்றி எந்த உருபாடியான அறிவிப்பு இல்லாததால் திமுகவை ஆதரிக்க மறுத்ததும். அதே சமயம் அதிமுக முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை ஒத்து கொண்டு இடஒதுக்கீட்டின் முதல் கட்டம் ஆணையம் அமைக்க முன்வந்து செயல் படுத்தியதால் அதிமுகவை ததஜ சமுதாய நன்மையை கருத்தில் கொண்டு ஆதரித்தது.

திமுக மகத்தான வெற்றி பெரும் என்று கணித்திருந்த பல முஸ்லிம்கள் அதிகம் உள்ள தொகுதிகளில் ததஜவின் சூறாவளி பிரச்சாரத்தால் திமுக மண்ணை கவ்வியது. ஓரு சில திமுக முஸ்லிம் வேட்பாளரின் தனிச்செல்வாக்கு மற்றும் மற்றுமதத்தினரின் ஒரு மித்த ஆதரவால் மேலப்பாளையும், ராமநாதபுரம் போன்ற சில தொகுதிகளை மட்டும் வென்றனர். ஆனால் பெரும்பான்;மையான ஆதிமுக ஆதரவு வேட்பாளர்கள் ததஜவின் ஆதரவினால் திருவல்லிகேணி, ராயபுரம், பாபநாசம், தேனி, கம்பம், கோவை மேற்க்கு, மருங்காபுரி, சிதம்பரம், புதுக்கோட்டை, பெரியகுளம், திருவிடைமருதூர், வலங்கைமான், திருச்செந்தூர், புவனகிரி போன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றனர். இதன் காரணமாகத்தான் திமுக கூட்டனி ஆட்சியின் தயவில் ஆட்சி அமைத்தது. இது தமிழகம் கண்டிராத புதுமையான அனுபவம்.

கருணாநிதியின் கணக்கு.
எப்பொழுதுமே தோல்வியை புள்ளி விவரத்தோடு ஆய்வு செய்யும் திமுக தலைவர் கருணாநிதி ததஜவின் மக்கள் பலத்தை உணர்ந்தார். திமுக பெரும்பான்மையான முஸ்லிம் தொகுதிகளில் தோற்றதற்க்கு ததஜதான் காரணம் என்று அறிந்தார். அடக்கு முறையை ஏவி ததஜவை அழிக்க முடியாது என்பதை அறிந்தார். அவ்வாறு அடக்க நினைத்தால் லட்சக்கணக்கான தொண்டர்களை கொண்ட ததஜ வீறுகொண்டு எழும் மற்றும் வரும் உள்ளாச்சி தேர்தலில் அது திமுகவுக்கே பாதகமாக அமையும் என்பதை கணக்கிட்டு தேர்தல் உறவு தேர்தலோடு போச்சு என்ற ததஜவின் கொள்கையால் அடுத்த வருகிற உள்ளாட்சி தேர்தலிலாவது ததஜவின் ஆதரவை பெற விரும்புவதாக தெரிகிறது.

ததஜவின் பலத்தை உணர்ந்த திமுக அதே சமயம் தமுமுக என்ற மக்கள் செல்வாக்கு இழந்த வெத்து வேட்டை தங்கள் உடன் வைத்திருந்திருநத்தற்காக வருதப்படுவதாகவும் தெரிகிறது. தேர்தல் கூட்டத்தில் கூலி பட்டாலத்த்தால் கொடி பறந்தததை வைத்து தமுமுக பலமானது என்ற நினைத்தது எவ்வளவு பெரிய தவறு என்று திமுக உணர்ந்ததாக தெரிகிறது. அதனால் தமுமுகவை கழட்டிவிட பல செயல்களை திமுக அறங்கேற்றி வருகிறது.

அதன் வெளிபாடுதான் வாரியப்பதவி கொடுக்க மறுத்தது, கடையநல்லூர் பள்ளியை தமுமுக பினாமிகள் ஜாக்கிடம் ஒப்படைக்க மறுப்பு, ஆணையம் அமைக்காமல் சட்டதிருத்தம் செய்து இடஒதுக்கீட்டை அமுல்படுத்த தமுமுகவின் கோரிக்கை நிராகரிப்பு, கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் அழைப்பு கொடுக்காமல் தமுமுகவை புறந்தள்ளுவது, காஞ்சிபுர தமுமுகவை உள்ளே தள்ளியது, விழுப்புரம் தமுமுகவை ரவுடி லிஸ்டில் சேர்த்தது, மேலப்பாளைய பள்ளியை கைப்பற்ற தமுமுக போட்ட திட்டத்தை முறியடித்தது. சன்டிவியில் நிகழ்சி தர மறுத்தது.

இப்படி தமுமுக தலைவர்களை எந்த அளவுக்கு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவும் செய்கிறது திமுக. ஆனால் பாவம் தமுமுகவோ எத்தனை அவமானப்பட்டாலும் திமுகவை விட்டு வெளியே போவதாக தெரியவில்லை. சிறைக்கு உள்ளே போவதும் அவமானப்படுவதும் தமுமுக தலைவர்களாக இருந்தால் என்றோ திமுகவை விட்டு வெளியேறி இருப்;பார்கள் ஆனால் உள்ளே இருப்பது தமுமுகவின் ரசிக கண்மணிகளான விசிலடிச்சான் குஞ்சுகள்தானே பிறகு எப்படி தமுமுக தலைவர்கள் கவலை படுவார்கள்?.

ததஜ அன்று திமுகவை எதிர்த்ததேன்?.
சென்ற திமுக ஆட்சியில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்று பொய்வழக்கு போட்டு உள்ளே தள்ளியது. ஆயிசா என்ற கற்பனை பெண் பாத்திரத்தை உறுவாக்கி முஸ்லிம் பெண்களை சோதனை என்று கேவலப்படுத்தியது, கோவை கலவரத்தில் கொல்லப்பட்ட 19 முஸ்லிம்களின் குடும்பங்களை பார்க்க கூட செல்லாதது, அவர்களை சங்பரிவாருடன் சேர்ந்து கொண்டு கொன்று குவித்த காவலர்களுக்கு வக்காலத்து வாங்கியது, விசாரனை கமிசனை திசை மாறவைத்தது, ஒவ்வொரு டிசம்பர் ஆறிலும் தமிழகத்தில் மிகப்பெரிய பீதியை உண்டாக்கி ஒவ்வொரு வருடமும் பல்லாhயிரக்கணக்கான முஸ்லிம்களை கைது செய்தது, தமுமுகவை தீவிரவாத இயக்கம் என்று அறிவித்தது போன்ற காரணங்களினாலும் மத்தியில் தங்களுடைய ஆட்சியை வைத்து கொண்டு இடஒதுக்கீட்டை அமுல் படுத்தாமல் பிரதமருக்கு கடிதம் என்று முஸ்லிம்களை ஏமாற்றியது, மற்றும் இடஒதுக்கீட்டிற்காக எந்த உத்தரவாதத்ததையும் தராதது போன்ற காரணங்களாலும் திமுக மீண்டும் வந்தால் சென்ற திமுக ஆட்சியை போல சமுதாயம் பீதியடைந்து தீவரவாதிகளாக சித்தரிப்படுவார்களோ என்ற அச்சத்தால் திமுகவை கடுமையாக எதிர்தது ததஜ.

ததஜ இன்று திமுகவை எதிர்க்காதது ஏன்?.
ஆனால் இந்த தேர்தலில் திமுகவுக்கு முஸ்லிம்களினால் ஏற்பட்ட கடுமையான வரலாறில் காணாத சரிவினால் எங்கே தாங்கள் மீண்டும் முஸ்லிம்களுக்கு தொந்தரவு கொடுத்து அவர்களை தீவிரவாதிகளாக சித்தரித்தால் மீண்டும் மாபெரும் பாதாலத்துக்கு திமுக போய்விடுமோ, மற்றும் தனக்கு பின் ஸ்டாலினுக்கு பெரும் சவாலாக இருக்குமோ என்ற பயத்தினால் முஸ்லிம்கள் விசயத்தில் நீதியாக நடக்க வேண்டும் என்று இது வரை திமுக அப்படியே நடந்து கொள்கிறது. ததஜதான் சென்ற தேர்தலில் தங்கள் சரிவுக்கு முக்கிய காரணம் என்பதால் அவர்களை பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்காமல் அவர்கள் விசயத்தில் நியாயமாக நடக்கிறது. இதுவரை பெரிய அளவில் தமிழக முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை என்றோ பொய்வழக்கு என்றோ ஒன்றும் இல்லை. இது போன்ற காரணங்களால் இன்றைய நிலையில் திமுகவை விமர்சிக்காமல் நடுநிலையை பேணுகிறது ததஜ.

சமுதாயத்திற்க்கு மிகப்பெரிய நன்மையை ஏற்படுத்தும்.
சென்ற தேர்தலில் எதிர்த்து விட்டோம் என்பதற்காக பெரும்பான்மையான விசயத்தில் தற்போது ஒழுங்காக உள்ள திமுகவை கண்மூடித்தனமாக எதிர்க்க வேண்டும் என்று ததஜ நினைக்காமல் ஆதரவும், எதிர்ப்பும் என்பது அந்த கால சூழ்நிலையை அனுசரித்து இருக்க வேண்டும் என்று நினைப்பது மிகவும் பாராட்டுக்குறியது. அரசியல் முடிவுகள் என்பது நடுநிலையோடு இருக்க வேண்டும் மற்றும் சமுதாய நன்மையை கருத்தில் கொண்டு இருக்க வேண்டும் என்பது ததஜவின் கொள்கை. இதை ஒவ்வொரு சமுதாய அமைப்பும் பின் பற்றினால் இந்த சமுதாயத்திற்க்கு மிகப்பெரிய நன்மையை ஏற்படுத்தும்.

உலகம் அழியும்வரை ஒரு கட்சி ஆதரவு.
ஆனால் தமுமுகவோ தாங்கள் அடிமைசாசனம் எழுதி கொடுத்து ஆதரிக்கிற திமுகவை ததஜ எப்படி ஆதரிக்கலாம்? என்றும் இவர்கள் அன்று திமுகவை எதிர்தார்கள?;, இன்று ஆதரிக்க துவங்கி விட்டார்கள?; என்று பொது அறிவே இல்லாமல் சமுதாய நன்மையை கணக்கு பார்காமல் புலம்பி வருகிறார்கள்.(தமுமுக பார்ப்பது எல்லாம் ஃபித்ரா, சுனாமி போன்ற திருட்டு கணக்கைத்தான் என்று நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியது இல்லை). எது எப்படி போனாலும் ஒரு தடைவை ஒரு கட்சியை ஆதரித்து விட்டால் உலகம் அழியும் வரை அதே கட்சியை ஆதரிக்க வேண்டும் என்ற முட்டால்தனமான முடிவில் உள்ள இந்த தமுமுக தலைவர்கள் எப்பேர்பட்ட அறிவாளிகள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். இந்த தமுமுக தலைவர்கள் அடிக்கிற கூத்துபத்தாது என்று மூலை கழுவி விடப்பட்ட கோமாளிகள் ரைசுதீன், சைக்கோ தென்காசி சித்திக் போன்றவர்கள் செய்கிற பித்னா வேலைகளுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. இவர்கள் எவ்வளவுதான் பித்னா செய்து புலம்பினாலும் அதை நம்புவதற்க்கு மக்கள் தயாரில்லை, மக்கள் மிகத்தெளிவாக இருக்கிறார்கள் என்பதை இந்த கோமாளிகளுக்கு என்றுதான் புரியுமோ?

வஸ்ஸலாம்,
அஹமது அலி.



0 Comments:

Post a Comment

<< Home