இஸ்ரேலின் அராஜக போக்கை ஐ.நா கண்டிக்குமா?
அல்லாஹ்வின் திருப்பெயரால்..
லெபனானின் எல்லைக்கோட்டை மீறி உளவு பார்க்க வந்த இஸ்ரேலிய படையை சேர்ந்த இருவரை "அல்லாஹ்வின் கட்சி" என்று பொருள்படும் பெயரை கொண்ட "ஹிஸ்புல்லாஹ்" இயக்கத்தினர் கடந்த மாதம் சிறை பிடித்தனர். அதை தொடர்ந்து லெபனான் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை இஸ்ரேல் தொடுத்தது. அரபுலகத்தின் வற்புறுத்தலுக்கு பின்பு ஐக்கிய நாடுகளின் சபை கூடி அந்த யுத்தத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தனர். ஆனாலும் லெபனானை சேர்ந்த மக்கள், இஸ்ரேல் இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மதிக்காது என்றும், இது நம்பும்படியான ஒன்று அல்ல என்றும் கருத்து தெரிவித்திருந்தனர். அந்த மக்களின் கூற்றை உண்மையாக்கும் வன்னம் யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்கு எதிராக இஸ்ரேல் மீண்டும் ஒரு தாக்குதலை நேற்று அரங்கேற்றியுள்ளது.
கிழக்கு லெபனானின் பெக்கா பள்ளத்தாக்கில் இரவு நேரத்தில் இஸ்ரேலிய படைகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளார்கள்.
ஐ.நா வின் போர் நிறுத்தம் திங்கட்கிழமையன்று அமலுக்கு வந்த பின்னர், நடைபெற்ற மிகப்பெரிய சம்பவமாக இது கருதப்படுகிறது.
ஹிஸ்புல்லாக்களின் வலுவான இடமான இந்தப் பகுதி பால்பெக் பகுதிக்கு வெளியே இருக்கின்றது.
மலைகளில் இருந்து கவச வாகனங்களில் வந்த இஸ்ரேலிய படையினர் ஹிஸ்புல்லாஹ் படைகளுடன் இரண்டரை மணி நேரத்திற்கு போரிட்டதாகவும், அதன் பின்னர், அவர்கள் போர் விமானங்களின் பாதுகாப்போடு, ஹெலிகாப்டர்கள் மூலமாக வெளியேறியதாகவும் கிராமவாசிகள் கூறியதாக பி.பி.சி இணையதளம் தெரிவிக்கிறது.
அந்த பகுதியில் இருக்கும் இரத்தக் கறைகள் மற்றும் மருத்துவ துணிகள், அங்கு அவசர அவசரமாக சிகிச்சை கொடுக்கப்பட்டதினை உறுதி செய்துள்ளன.
இன்று லெபனான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், ஐக்கிய நாடுகள் சபையின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை பட்டவர்த்தனமாக மீறும் செயல் என்று லெபனானின் பிரதமர் ஃபவுத் சினியோரா கூறியுள்ளார்.
ஒரு நாடு மற்றொரு நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்துவதை நீதியான முறையில் தடுத்து நிருத்த முடியாத ஐக்கிய நாடுகள் சபை இருந்து என்ன பயன் என்பதே உலக முஸ்லிம்களின் கேள்வியாக இருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபை எடுக்கின்ற முடிவுகளுக்கு கட்டுப்படாமல் அமெரிக்காவின் ஆராதனையோடு மனித நேயமற்ற முறையில் அராஜக செயல்கள் புரியும் இஸ்ரேல் நாட்டை ஐக்கிய நாடுகள் சபை தனது போர்ப்படையின் மூலம் தன்வசமாக்க வேண்டும் என்பதும் உலக மக்களின் எதிர்பார்ப்பாகும்.
முஹம்மது சுல்தான்
வேலூர்

Thanks to BBC.
0 Comments:
Post a Comment
<< Home