|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Sunday, December 30, 2007

அரசு செய்த துரோகத்தை கண்டித்து நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டம்!



தனி இட ஓதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு தமிழக அரசு செய்த துரோகத்தை கண்டித்து இன்று ( 28-12-2007) சென்னையில் நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டம்!

ஆயிரக்கணக்காணோர் பங்கேற்பு

ஆர்ப்பாட்டக்காட்சிகள்...
ஆர்ப்பாட்டக் கோஷங்கள்...





ஆர்ப்பாட்டக் கோஷங்கள்...



அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்.
அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்.

போராட்டம் இது போராட்டம்
முஸ்லிம்களின் போராட்டம்
போராட்டம் இது போராட்டம்
TNTJ வின் போராட்டம்

என்ன ஆச்சு! என்ன ஆச்சு!
மூன்றரை சதவீதம் என்ன ஆச்சு!

தந்தீரே! தந்தீரே!
தனி இடஒதுக்கீடு தந்தீரே!
இல்லையே அது இல்லையே
நடைமுறையில் இல்லையே

ஏமாற்றாதே! ஏமாற்றாதே!
தி.மு.க வே ஏமாற்றாதே!

என்ன ஆச்சு என்ன ஆச்சு
சர்வீஸ் கமிஷனில் இடஒதுக்கீடு
என்ன ஆச்சு! என்ன ஆச்சு

நியாயம் தானா? நியாயம் தானா?
டாக்டருக்கான இட ஒதுக்கீட்டில்
அல்வா கொடுத்தது
நியாயம் தானா? நியாயம் தானா?

அக்கிரமம் அக்கிரமம்
அரசு ஆணையில் மூன்றரை
நடைமுறையில் ஒன்றரை.

சப் இன்ஸ்பெக்கடர் செலக்ஷனிலும்
கல்தா எங்களுக்கு கொடுத்தீரே!

எச்சரிக்கை! எச்சரிக்கை!
இறுதி கட்க எச்சரிக்கை!
உறக்கம் கலைந்தோம் உரிமை பெற்றோம்
பறிக்க நினைத்தால் உடைத்தே பெறுவோம்

வாரியம் வேண்டாம் கலைஞரே!
M.P சீட் வேண்டாம் கலைஞரே!
MLA சீட் வேண்டாம் கலைஞரே!
எங்களுக்கு தேவையெல்லாம்
முழுமையான இட ஒதுக்கீடே
முறையான இட ஒதுக்கீடே!

காணவில்லை! காணவில்லை!
வேலை வாய்ப்பு விளம்பரங்களில்
மூன்றரையை காணவில்லை.

பசித்தவனுக்கு சோறு கேட்டால்
பச்சை தண்ணி தந்து விட்டு
சோறு போட்டோம் என்று சொன்னால்
நியாயம் தானா கலைஞரே
இது நேர்மை தானா முதல்வரே!

விசிலடிக்கும் கூட்மல்ல
ஜால்ரா போடும் கூட்டமல்ல
துதிபாடும் கழகமல்ல
சமுதாயத்திற்கு தீங்கு என்றால்
சிங்க நிகர் படையடா
சீறிப்பாயும் படையடா

மாற்றிவிடு மாற்றி விடு
சர்வீஸ் கமிஷன் வெளியிட்ட
வஞ்சித்த ஒதுக்கீட்டை
மூன்றரையாக மாற்றிவிடு

அனுமதியோம் அனுமதியோம்
முஸ்லிம்களின் உரிமையை
தட்டிப்பறிக்க முயற்சித்தால்
அனுமதியோம் அனுமதியோம்

தமிழக அரசே தமிழக அரசே
இட ஒதுக்கீடை தக்க வைக்க
எதற்கும் நாங்கள் தயங்கமாட்டோம்.

அடுத்த கட்ட வேலை வாய்ப்பில்
தனி இடஒதுக்கீட்டை தராவிட்டால்
கிடு கிடுக்கும் போராட்டம்
நடு நடுக்கும் போராட்டம்
தமிழகமெங்கும் போராட்டம்

Thanks..tntj.net

5 Comments:

At 10:53 AM, Anonymous Anonymous said...

தர்ஹாவில் ஆண்களோடு பெண்கள் கலந்து இருப்பதால் தவறு நடக்க வாய்ப்புள்ளது என்று சொல்லி, நியாயப்படுத்தி கூடாது என்றோம். ஆனால் தவ்ஹிது ஜமாஅத் நடத்தும் டிசம்பர்-6 மற்றும் பிரச்சினைக்கேற்ப நடத்தும் போராட்டங்களில் ஆண்களோடு பெண்கள் கலந்து இருப்பது மலிந்து காணப்படுவது மட்டுமில்லாமல் உரசிக்கொள்ளும் சல்லாப காட்சிகளும் இடம்பெறுகிறது. இதைப்பார்க்கும்போது தவ்ஹிது ஜமாஅத் ஆண்கள் பெண்களை இடிப்பதெற்கென்றே வருவதுபோல தென்படுகிறது.

தமிழன்பன்
திருவை

 
At 11:37 AM, Anonymous Anonymous said...

ததஜ பொதுச்செயலாளர், நந்தினி என்ற மாற்றுமத பெண் புகழ் திரு பாக்கர் போன்றவர்களையும், நந்தினி பாக்கர் மேட்டரை நஜ்முன்னிஸா என்ற முஸ்லிம் பெண் மூலம் சல்லாபத்தோடு தெரிந்துகொண்டு வெளிச்சத்திற்கு கொண்டுவந்த பீ.ஜே போன்றவர்களையும் ஆர்பாட்டத்தில் மலிவாக காணமுடிந்தது.

தமிழன்பன்
திருவை

 
At 4:10 PM, Anonymous Anonymous said...

இஸ்லாமிய ஆண்கள் மற்றும் பெண்கள் மத்தியிலே ஏற்பட்ட விழிப்புணர்ச்சியின் விளைவாகவே இன்று ததஜ, மற்றும் தமுமுக போன்ற இயக்கங்கள் நடத்தும் போராட்டங்களில் பெண்கள் அதிக அளவில் கலந்து கொள்கிறார்கள்.

தமிழன்பன் போன்ற வக்கிர சிந்தனை கொண்டவர்கள் வேண்டுமானால் பெண்களை இடிப்பதற்கே போரட்டத்திற்கு போவார்கள். அதுபோல் தமிழன்பன் போன்ற வக்கிர சிந்தனை கொண்டவர்களின் வீட்டு பெண்கள் வேண்டுமானால் அடுத்தவர்கள் தங்களை உரச வேண்டும் என்ற எண்ணத்தில் வந்து கலந்து கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.

அதனால்தான் தமிழன்பன் தன்னையும் தனது வீட்டு பெண்களையும் பார்ப்பதுபோல் அடுத்தவர்களையும் பார்க்கிறார். ஆனால் ததஜ-வோ தமுமுக-வோ நடத்தும் போராட்டங்களில் பங்கு கொள்ளும் ஆண்கள் மற்றும் பெண்கள் உயரிய லட்சியத்துடனும், சீரிய இஸ்லாமிய ஒழுக்கத்துடனுமே பங்கு கொள்கிறார்கள்.

தமிழன்பன்
(நாங்களும்தேன்..)

 
At 12:38 PM, Anonymous Anonymous said...

தமிழன்பன்
(நாங்களும்தேன்..) என்பவர் எனக்கு பதில் தந்தமைக்கு நான் மூன்று தடவை பதில் பதிவு செய்தும் நீ அதை உன் பிளாக்கில் பதியவில்லை. ஏன்டா நீயெல்லாம் முஸ்லிமாடா? இலவச பிளாக் என்பதற்காக எதையும் செய்வாயா?
உனக்குத்துணிவு இருந்தால் பதிவு செய்.

தமிழன்பன்
திருவை

 
At 3:17 PM, Anonymous Anonymous said...

வீட்டில் முடங்கி கடந்த பெண்களை வெளியே வந்து போராடுகிற அளவுக்கு மாற்றிய ததஜவின் கூட்டத்தில் பெண்கள் தனித்துதான் இருக்கிறார்கள். ததஜவை மட்டும் வம்புக்கு இழுக்கும் சகோதரர் தமுமுகவை கண்டுக்கொள்ளாமல் விட்டது சரியா?. இப்படி எதையதவது பித்னா செய்தால் ததஜவின் ஆர்பாட்டத்திற்க்கு பெண்கள் ஆதரவு குறையும் என்ற தங்களின் மடமையை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது.

NABIL.

 

Post a Comment

<< Home