|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Wednesday, December 26, 2007

தமிழக அரசின் பச்சை துரோகம்!

Bismillah..
கருணாநிதி தலைமையிலான திமுக அரசு முஸ்லிம்களுக்காக மூன்றரை சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க சட்டமியற்றியது. இது போதுமானது அல்ல என்ற போதும், இந்த அளவாவது கிடைத்ததே என்று ஆறுதலடைந்தோம். இதற்காக ஒட்டுமொத்த முஸலிம் சமுதாயமும் அனைத்து முஸ்லிம் இயக்கங்களும் கருணாநிதிக்கு நன்றியைத் தெரிவித்தோம். ஆனால் தமிழக அரசோ இடஒதுக்கீடு விஷயத்தில் பச்சைத் துரோகம் செய்யும் வகையில் அறிவிப்பு வெள்pயிட்டுள்ளது.


டைப்பிஸ்ட், ஸ்டெனோ கிராஃபர் பணிகளுக்காக 3875 பேர் தேர்வு செய்யப்படவுள்ள தாகவும், இதில் கிறிஸ்தவர்களுக்கு 130 இடங்கள், முஸ்லிம்களுக்கு 59 இடங்கள் ஒதுக்கப் பட்டுள்ளன என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 3875ல் மூன்றரை சதவிகிதம் என்றால் 135 இடங்கள் முஸலிம்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும். ஆனால் ஒன்றரை சதவிகிதம்தான் (59 இடங்கள்) நமக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீடு இல்லாதபோது இதைவிட அதிக இடங்கள் கிடைத்து வந்தன.

கிறிஸ்தவர்களுக்கு மட்டும் மூன்றரை சதவிகிதம் வழங்கிவிட்டு, முஸலிம்களுக்கு மட்டும் ஒன்றரை சதவிகிதம் வழங்கி முதுகில் குத்திய துரோகச் செயலுக்கு நமது கண்டனத்தைப் பதிவு செய்யத் தவறினால், போராடிப் பெற்ற இடஒதுக்கீட்டின் பயனை நாம் இழக்க வேண்டிய நிலை ஏற்படும். அடுக்கடுக்கான போராட்டம் நடத்தியவர்களுக்கு ஒன்றரை சதவிகிதம், எந்தப் போராட்டமும் நடத்தாதவர்களுக்கு மூன்றரை சதவிகிதம் என்று அறிவித்திருப்பதன் மூலம் இந்தச் சமுதாயம் ஏமாள்pச் சமுதாயம் என்று கருணாநிதி நினைக்கிறார்.

நாங்கள் ஏமாளிகள் அல்ல என்பதைத் தெள்ளத் தெளிவாகப் பிரகடனம் செய்யவும். இந்த துரோக அறிவிப்பை உடனே ரத்து செய்து, முஸலிம்களுக்கு மூன்றரை சதவிகிதம் கிடைக்கும் வகையில் மறு அறிவிப்பு வெளியிட வலியுறுத்தியும் சென்னையில் நடை பெற இருக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஆர்ப்பரித்து திரண்டு வாருங்கள்!




இடம்:
பார்க் டவுன்

மெமோரியல் ஹால் அருகில்



நாள்

28-12-2007, வெள்ளி


நேரம்
மாலை 4.00 மணி அளவில்

Thanks..tntj.net

1 Comments:

At 9:57 AM, Anonymous Anonymous said...

தற்போது தமிழக அரசு இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு இழைத்த துரோகத்துக்கு. அதன் சிறுபான்மை பிரிவு தமுமுக எதாவது சப்பைகட்டு கட்டுவார்கள். மெல்லிய மயிலிரகால் வருடுவது போல அறிக்கை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் தமுமுக திமுகவின் துரோகத்திற்க்கு எதிராக வாயைதிறக்க வில்லை. வாரியம் பெற்றால் வீரியம் போய்விடும் என்ற ததஜவின் கோசம் சரிதான் என்று தோன்றுகிறது. இயக்க வெறியில் தமுமுகவை ஆதரிக்கும் மக்கள் இவர்களை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். அமெரிக்காவின் போர்க்கப்பல் சென்னை வந்ததற்க்காக போராட்டம் நடத்தும் தமுமுக தற்போது திமுகவிற்க்கு எதிராக எதையுமே செய்யாதது ஏன்?. வெத்து வேட்டு வாரியத்திற்கே வாய்திறக்காத இவர்கள் இன்னும் சட்டமன்ற, பாராளுமன்ற பதவிகளை பெற்றால் எதை பற்றி வாய்திறப்பார்கள்????.

s.Mohamed basheer.

 

Post a Comment

<< Home