|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Friday, December 21, 2007

முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?


ஆண் என்பவன் தன்னை முழு அளவில் ஆண் என்று வெளிப்படுத்த வேண்டும். பெண் என்பவள் தன்னை முழு அளவில் பெண் என வெளிப்படுத்த வேண்டும். இரண்டுமே அவரவரைப் பொருத்த வரை பெரும் பாக்கியமாகும்.

40 மார்க் வாங்கினால் பாஸ் ஆகி விடலாம் என்றாலும், நூறு மார்க் வாங்கவே அனைவரும் ஆசைப்படுகிறோம்.

மாதம் பத்தாயிரம் ரூபாய் போதும் என்றாலும் வண்ணக் கனவுகள் எல்லாம் நிறைவேறும் அளவுக்கும், அதை விட அதிகமாகவும் கிடைக்க வேண்டும் என முயற்சிக்கிறோம்; ஆசைப்படுகிறோம்.

ஆண்மை எனும் பாக்கியத்தைக் காட்டிக் கொள்வதில் மட்டும் தான் இந்தப் போதுமென்ற மனநிலை இருக்கிறது.

முகத்தில் முடி இருப்பதோ, இல்லாமல் இருப்பதோ இல்லறத்திற்கு முக்கியமானது இல்லை என்ற நிலையிலும் இறைவன் ஆணுக்கு மட்டும் முடி வளரச் செய்து பெண்களுக்கு வளரச் செய்யாமல் விட்டுள்ளான்.

ஆடைகளைப் பொருத்த வரை ஆண்கள் அணியும் ஆடையைப் பெண்களும் அணிந்திட முடியும். தாடி வைக்க முடியாது.

எனவே அனைத்திலும் முழுமையை விரும்பும் ஆண்களும் லி பெண்களும், ஆண்மையிலும் லி பெண்மையிலும் முழுமையை விரும்ப வேண்டும் என்று இஸ்லாம் எதிர்பார்க்கிறது.

தாடியை வைக்க பெரிய அளவில் பொருளாதாரச் செலவும் ஏற்படாது. எடுப்பதற்குத் தான் செலவு ஏற்படும்.

எளிதில் கடைப்பிடிக்க இயன்ற ஒரு கம்பீரத்தை தானாகவே ஆண்கள் இழந்து விட வேண்டாம் என்பது தான் இஸ்லாத்தின் விருப்பம்.
Thanks...Onlinepj.com

2 Comments:

At 2:32 PM, Anonymous Anonymous said...

//தாடியை வைக்க பெரிய அளவில் பொருளாதாரச் செலவும் ஏற்படாது. எடுப்பதற்குத் தான் செலவு ஏற்படும்.//

தாடி வைக்கறத யாரும் எதிர்க்கவோ விமர்சிக்கவோ போறதில்ல .. தாடி வைக்கலனா கல்லாலடிச்சு கொல்லுவோம் அப்படீங்கறதான் எல்லோரும் எதிர்க்கறhங்க.. அது பத்தி இஸ்லாத்துல ஏதாவது சொல்லி இருக்கானு சொல்லுங்க..

 
At 9:26 PM, Blogger Unknown said...

தாடி வைத்தால் கல்லால் அடித்து கொல்வோம் என்று எந்த நாட்டில் சட்டம் உள்ளது. எனக்கு தெரிந்து அப்படி எந்த நாட்டிலும் இருப்பதாக தெரியவில்லை. அப்படி இருந்தாலும் அதற்க்கும் இஸ்லாத்திற்க்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இஸ்லாத்தில் அப்படி கூறப்படவும் இல்லை. மீசையை கத்தரியுங்கள் தாடியை விட்டுவிடுங்கள் என்று நபிகள் நாயகம் சொன்ன படியால் முஸ்லிம்கள் அதை விரும்பி வைக்கின்றனர்.

ஜாஹிர் ஹீசேன். Riyadh.

 

Post a Comment

<< Home