|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Saturday, December 15, 2007

முஸ்லிம்கள் அரசியலில் நுழையாமல் உரிமைகளை வென்றெடுக்க முடியுமா ???

பாதிக்கப்படும் போதும், உரிமைகளைக் கேட்கும் போதும் களம் இறங்கிப் போராடுதல், ஒவ்வொரு தேர்தலின் போதும் எத்தகைய முடிவுகளை சமுதாயம் எடுத்தால் நல்லது என்று கருத்துச் சொல்லுதல் போன்ற அரசியல் நடவடிக்கையைப் பற்றி குறிப்பிட்டால் அதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. இருபது ஆண்டுகளாக நாம் இத்தகைய அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம். எனவே தேர்தலில் போட்டியிடும் அரசியலைத் தான் நீங்கள் குறிப்பிட்டிருக்க வேண்டும். இதில் நாம் உடன்படவில்லை என்பது உண்மை தான்.
விரிவாக ஆராய்ந்தால் நாம் எடுத்த முடிவுக்குத் தான் நீங்களும் வருவீர்கள். அரசியல் அதிகாரத்தில் நாம் பங்கு கேட்கிறோம். அவ்வாறு பங்கு கேட்கும் போது நாம் தேர்தலில் போட்டியிட்டுத்தானே ஆக வேண்டும்? என்பது தான் இதை நியாயப்படுத்துவோர் எடுத்து வைக்கும் முதல் வாதம். மக்களுக்கு வேண்டுமானாலும் இந்த வாதம் சரியாக இருப்பது போல் தோன்றலாம். இந்த வாதத்தை எடுத்து வைப்பவர்களுக்கு நாம் மக்களை ஏமாற்றுவதற்குத் தான் இதை எடுத்து வைக்கிறோம் என்பது மிகவும் நன்றாகத் தெரியும். அரசியல் அதிகாரத்தில் நாம் 2004லிம் ஆண்டு பங்கு கேட்க ஆரம்பிக்கவில்லை. 1995 முதல் இவ்வாறு கேட்டு வருகிறோம். 1995 முதல் பங்கு கேட்டு வந்த நாம் ஒரு காலத்திலும் தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறி வந்தோம். அரசியல் அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று கூறிக் கொண்டே தேர்தலில் போட்டியிடவும் மாட்டோம் என்பதையும் எவ்வாறு ஒரே நேரத்தில் நம்மால் கூற முடிந்தது? தேர்தலில் போட்டியிடுவது தான் இதன் பொருள் என்றால் தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்று ஒன்பது ஆண்டுகளாக முரண்பட்டு பொய் பேசினோமா? முரண்பட்ட இரண்டு கருத்துக்களை ஒரு நேரத்தில் கூறி மக்களை ஏமாற்றினோமா?

நிச்சயமாக இல்லை. அரசியல் அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பதன் பொருள் என்ன என்பதை நாம் மிகத் தெளிவாக விளக்கினோம். 1995லில் கூற ஆரம்பித்த இந்த விளக்கத்தை 2004 தஞ்சைப் பேரணியின் துவக்க உரை வரைக்கும் விரிவாக எடுத்துக் கூறி வந்தோம். நாம் ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டு தேர்தலில் போட்டியிடுவது என்பது இதன் பொருள் அல்ல. அரசியல் கட்சிகள் விரும்பும் போது வழங்கும் பிச்சையை நாம் கேட்கவில்லை.
நாங்கள் கேட்பது என்னவென்றால் தலித் மக்களுக்கு எவ்வாறு ரிஸர்வ் (தனி) தொகுதி முறை உள்ளதோ, அதுபோல் முஸ்லிம்களுக்கும் வழங்க வேண்டும் என்பது தான் இதன் பொருள் என்பது தான் நாம் அளித்து வரும் விளக்கம். இந்தியாவில் 540 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் 20 சதவிகிதம் என்பது 108 தொகுதிகள். 108 தொகுதிகளை முஸ்லிம் ரிசர்வ் தொகுதிகள் என்று அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவித்தால் அந்தத் தொகுதிகளில் முஸ்லிம்களைத் தவிர வேறு எவரும் போட்டியிட முடி யாது. எந்தக் கட்சியானாலும், சுயேச்சையானாலும் அங்கே முஸ்லிம் தான் போட்டியிட முடியும்.
எனவே ஒவ்வொரு பாராளுமன்றத்திலும் 108 முஸ்லிம் எம்.பி. க்கள் கட்டாயம் இடம் பெறுவார்கள். இதைத் தான் நாம் கேட்டு வந்தோம். இவ்வாறு கேட்டு வந்ததால் தான் நாங்கள் தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூற முடிந்தது. இதன் காரணமாகத் தான் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையும், போட்டியிட மாட்டோம் என்ற முழக்கமும் முரண்பட்டது அல்ல என்று மக்கள் விளங்கினார்கள்.


எனவே அரசியல் அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பதை ஒன்பது ஆண்டுகளாக எந்தக் கருத்தில் நாம் கூறினோமோ அந்தக் கருத்தில் நாம் நிலைத்திருக்கிறோம். புதிய நிலைபாடு நோக்கி நாம் சென்று விடவில்லை.தேர்தலில் போட்டியிடுவதற்காகத் தான் ஒரு அமைப்பு தேவை என்றால் ஏற்கனவே முஸ்லிம் லீக், தேசிய லீக் என்று இரண்டு கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதைக் கொள்கையாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. அதில் வெற்றிடம் ஏதும் இருக்கவில்லை. அதைச் செய்வதற்காக நாம் இயக்கம் ஆரம்பிக்க எந்த அவசியமும் இல்லை. களத்தில் இறங்கிப் போராடுதல் என்பது தான் வெற்றிடமாக இருந்தது. அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்குத் தான் இயக்கம் தேவைப்பட்டது.
எனவே அந்த ஆசை உள்ளவர்கள் முஸ்லிம் லீக்கிலோ, தேசிய லீக்கிலோ தங்களை இணைத்துக் கொண்டு தேர்தலில் போட்டியிட்டுக் கொள்ளட்டும்! தேர்தலில் போட்டியிடுவதாக வைத்துக் கொள்வோம். வெற்றி பெறுவதற்காகத் தான் போட்டியிடப் போகிறோம். தேர்தலில் போட்டியிட்டு எவ்வாறு வெற்றி பெற நாம் என்ன செய்ய வேண்டும்? தமிழகத்தில் எந்த ஒரு தொகுதியிலும் நாம் 50 சதவிகிதம் இல்லை. ஏராளமான தொகுதிகளில் நமது சதவிகிதம் மூன்று முதல் நான்கு தான். மிகச்சில தொகுதிகளில் தான் எட்டு முதல் பத்து சதவிகிதம் இருக்கிறோம். அதை விடவும் குறைவான விரல் விட்டு எண்ணக்கூடிய தொகுதிகளில் தான் 25 முதல் 30 சதவிகிதம் இருக்கிறோம்.
நாம் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெறுவது கிடக்கட்டும்! ஒட்டு மொத்த முஸ்லிம்களும் நமக்கு வாக்களித்தால் கூட ஐந்து தொகுதிகளில் தான் டெபாசிட்கூட பெற முடியும். மீதமுள்ள தொகுதிகளில் டெபாசிட்டை இழந்து படுதோல்வியைச் சந்திக்கும் அவமானம் ஏற்படும். ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் நம் பின்னே திரண்டால் தான் இந்த நிலை. ஆனால் இன்று வரை 10 சதவிகிதம் முஸ்லிம்களைக் கூட நம்மால் வென்று எடுக்க முடியவில்லை என்பது தான் உண்மை. எல்லோரும் இணைந்திருந்த போதே இது தான் நிலை. தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது தான் நோக்கம் எனும் போது தனித்துப் போட்டியிடும் முடிவை நாம் எடுக்க மாட்டோம். வெற்றி பெறுவதற்கு ஏற்ற முடிவைத் தான் நாம் எடுக்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படுவோம்.
அதாவது பெரிய கட்சிகளிடம் பேரம் பேசி கூட்டணி ஏற்படுத்திக் கொள்ளும் நிலைமையைத் தான் தேர்வு செய்வோம். அவர்கள் நமக்கு ஒதுக்குகின்ற ஐந்து அல்லது மூன்று தொகுதிகளில் வெற்றி பெற வேண்டுமே? அதற்கு என்ன செய்வது? நமது சமுதாயம் மட்டும் ஓட்டு போட்டால் நம்மால் ஜெயிக்க முடியாது. திமுக வினர், அல்லது அதிமுகவினர், அல்லது காங்கிரசார் நமக்கு வாக்களித்தால் தான் வாங்கிய தொகுதிகளில் வெற்றி பெற முடியும். எனவே அந்தக் கட்சியினரைக் கவர்வதற்காக கருணாநிதியை அல்லது ஜெயலலிதாவை அல்லது சோனியா காந்தியைப் புகழ்ந்து பாட வேண்டும். இந்தத் தலைவர்கள் கடந்த காலத்தில் செய்த எந்தத் தவறையும் சுட்டிக்காட்டக் கூடாது. இவரை விட்டால் வேறு கதி இல்லை என்ற தோரணையில் தான் வாக்கு கேட்க வேண்டும். தப்பித் தவறி இவர்களின் கடந்த காலத் தவறுகளையும் சுட்டிக்காட்டி, நெருக்கடிக்காகத்தான் கூட்டு சேர்ந்துள்ளோம் என்று உண்மையை உடைத்தால் நம்மவர்களுக்கு அது திருப்தியளிக்கும்.
ஆனால் நாம் கூட்டுச் சேர்ந்துள்ள பெரிய பங்காளிகள் குழி பறிப்பு வேலையில் இறங்கி ஒரேயடியாகக் கவிழ்த்து விடுவார்கள். வேலூர் நாடாளுமன்றத் தேர்தலின் போது மேடையில் ஒரே ஒரு இருக்கை போட்டு ஜெயலலிதா அமர்ந்திருக்க... கடைசி வரை முஸ்லிம் லீக் தலைவர் ஓரமாக நின்று கும்பிட்டுக் கொண்டிருந்தார் என்று ஒன்பது வருடமாக நாம் செய்த விமர்சனத்தை நமக்கு எதிராக மற்றவர்கள் செய்வார்கள். இப்படித் தான் உரிமையை வென்று எடுக்க வேண்டுமா? அது மட்டுமில்லை. தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் தான் உரிமையை வென்றெடுக்க முடியும் என்பதால் வெல்வதற்கு என்ன வழிமுறைகள் நாட்டில் உள்ளதோ அதைத் தான் நாமும் செய்தாக வேண்டும்.


* இரு கைகளையும் கூப்பி கும்பிட வேண்டும்.



* கூட்டம் கூட்டுவதற்காக கூத்து கும்மாளம் போடும் போது அதைப் பார்த்து சகித்துக் கொண்டிருக்க வேண்டும்.


* இந்துக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளுக்குச் சென்றால் கோவிலுக்குச் செல்ல வேண்டும். பூஜையும் செய்ய வேண்டும். பிரசாதம் எடுக்க வேண்டும் நெற்றியில் திலகம் அல்லது நாமம் இடு வார்கள். அதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். பரிவட்டம் கட்டுவார்கள் தலையை நீட்ட வேண்டும்.


* கிறிஸ்தவர்கள் அதிகமாக உள்ள பகுதிகளுக்குச் சென்றால் அவர்களுக்கு ஏற்ப நடக்க வேண்டும்.


அனைத்தையும் செய்யாவிட்டாலும் இவற்றில் எதையுமே செய்ய மாட்டோம் என்று நிச்சயம் கூற முடியாது. தனக்கு கும்பிடு போடாதவருக்கு நாம் ஏன் வாக்களிக்க வேண்டும் என்று பிற சமயத் தவர் எண்ணி விடக்கூடாது என்பதற்காக இதைச் செய்யும் நிலை ஏற்படும். இப்படியெல்லாம் எங்களை நரக படுகுழியில் தள்ளிவிட்டு உரிமைகளை வென்றெடுக்கச் சொல்கிறீர்களா? உரிமைகளை வென்றெடுக்க இதுதான் வழியா? தேர்தலில் போட்டியிட நமக்கு ஒரு சின்னம் தேவைப்படும். நமக்கு என்று ஒரு சின்னம் கிடைப்பதாக இருந்தால் குறிப்பிட்ட அளவு ஓட்டு வாங்கிக் காட்ட வேண்டும். அப்போது தான் நமக்கு என ஒரு சின்னம் கிடைக்கும். இல்லாவிட்டால் ஒரு தேர்தலில் மோதிரம் சின்னம் தருவார்கள். மறு தேர்தலில் ஏணி தருவார்கள். இன்னொரு தேர்தலில் விளக்குமாறு கூட கிடைக்கலாம். ஐம்பது ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடும் முஸ்லிம் லீக் கட்சிக்கே சின்னம் கிடையாது. எனவே வெற்றி பெறுவதற்காக திமுக வின் சூரியன், அதிமுக வின் இரு இலை (இரட்டை இலை என்பது தவறு) காங்கிரசின் கை ஆகிய சின்னங்களில் நின்று போட்டியிட வேண்டும். அப்போது தான் ஜெயிக்க முடியும்.
தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள காதர் முஹைதீன் அவர்கள் வேலூரில் சூரியன் சின்னத்தில் தான் போட்டியிட்டு வென்றார். இதன் பொருள் என்ன என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். உங்களுக்கு தேர்தல் ஆணையம் சூரியன் சின்னத்தைத் தர வேண்டுமானால் திமுக தலைமை 'அவர் எங்கள் கட்சிக்காரர், இவருக்கு எங்கள் சின்னத்தை ஒதுக்குங்கள் என்று கடிதம் தர வேண்டும். அக்கட்சியின் உறுப்பினர் அட்டையைப் பெற்றிருக்க வேண்டும். காதர் முஹைதீன் தி.மு.க. உறுப்பினர் அட்டை பெற்றுள்ளார். அதாவது நீங்கள் வேண்டுமானால் உங்களை முஸ்லிம் லீக் என்றோ தேசிய லீக் என்றோ கூறிக் கொள்ளலாம். சட்டப்படி நீங்கள் திமுக உறுப்பினர் தான். திமுகவின் கொறாடாவுடைய கட்டளைக்கு மாற்றமாக நீங்கள் நாடாளுமன்றத்திலோ சட்டமன்றத்திலோ வாக்களிக்க முடியாது. வாக்களித்தால் கட்சித் தாவல் சட்டப்படி நீங்கள் பதவியை இழப்பீர்கள். சட்ட மன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் நீங்கள் திமுக தான். உதாரணத்துக்குத் தான் திமுகவை குறிப்பிடுகிறோம். எந்தக் கட்சியின் சின்னத்தை நீங்கள் பெற்றாலும் நிலைமை இதுதான். சட்டமன்றத்தில் திமுகவுக்கு என்று நேரம் ஒதுக்கும் போது அதில் அவர்கள் தான் பேசுவார்களே தவிர உங்களுக்கு விட்டுத் தரப் போவதில்லை. கட்சி அடிப்படையில் இல்லாமல் தனி உறுப்பினர் என்ற முறையில் கிடைக்கும் வாய்ப்பு மட்டுமே கிடைக்கும். அப்போது கூட இரு இலைச் சின்னத்தில் நீங்கள் வெற்றி பெற்றவராக இருந்தால் அதிமுகவுக்கு எதிராக பேச முடியாது. இதன் காரணமாகத்தான் திருமாவளவன் சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற பதவியை ராஜினாமா செய்தார். திமுகவின் உறுப்பினராகத் தான் அவர் செயல்படும் நிலைக்குத் தள்ளப்பட்டார். இது தான் உரிமையை வென்றெடுக்கும் இலட்சணமா?
அதாவது தேர்தல் நேரத்துடன் மட்டுமல்ல. மறு தேர்தல் வரை நம்மை பெரிய கட்சியில் அடகு வைக்காமல் வெற்றி பெற இயலாது. இல்லாவிட்டால் ஏரோப்ளேன் சின்னத்தில் போட்டியிட்டு டெபாசிட் இழக்க வேண்டும். முஸ்லிம் இயக்கங்கள் எதுவும் தேர்தலில் போட்டியிடும் நிலைமையே இல்லாமல் இருந்தால் கூட உங்கள் வாதத்தில் மயங்கலாம். ஏற்கனவே ஐம்பது ஆண்டுகளாக முஸ்லிம் லீக் தேர்தலில் போட்டியிட்டது. ஆனாலும் ஒரு உரிமையையும் வென்றெடுக்கவில்லை என்று ஒன்பது வருடமாக நாம் ஏன் விமர்சனம் செய்தோம். அவர்களை விட இவர்கள் போனால் சரியாகச் செய்வார்கள் என்ற பித்தலாட்டமான வாதமும் முன் வைக்கப்படுகிறது. நாம் மேலே சுட்டிக் காட்டியதைச் சிந்தித்தால் இதன் போலித்தனத்தைப் புரிந்து கொள்ளலாம். தேர்தலில் போட்டியிடாத போதே மேடைகளில் பல தவறுகளில் சமரசம் செய்து கொண்டவர்கள், அதை நியாயப்படுத்தியவர்களையும், காதர் முஹைதீனையும் வேறுபடுத்திப் பார்க்க முடியாது. நம்மோடு நூறு பேர் இருக்கும் போது திமுகவுடன் கூட்டு வைப்போம். வெற்றி பெறுவதற்காக கருணாநிதியைத் துதி பாடுவோம். மறு தேர்தலில் ஜெயலலிதாவுடன் கூட்டுச் சேரும் போது பத்துப் பேர் கருணாநிதியுடன் தங்கி விடுவார்கள். மீண்டும் வேறு கட்சியில் கூட்டுச் சேரும் போது என்பது பேருடன் தான் போய்ச் சேர வேண்டும். கடைசியில் லட்டர் பேட் தான் மிஞ்சும். தமிழக சட்டன்றத்தில் பிரதான எதிர்க் கட்சியாக இருந்த முஸ்லிம் லீக்குக்கு இன்று சட்டமன்றத்தில் ஒரு இடமும் இல்லை. இந்த நிலைக்கு எங்களை தள்ளப் போகிறீர்களா? சில கனவான்கள்(?) தங்களின் சுயநலனுக்கு பயன்படுத்திக் கொள்ளலாமே என்று தூபம் போடுவார்கள். அதில் சில பேர் மயங்கி விட்டார்கள் அவ்வளவுதான். மருத்துவர் ராமதாஸ்தான் இத்தகையோரின் கண்களை உறுத்துகிறார். சாதிக் கட்சியாக ஆரம்பித்து இன்று மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது போல நாமும் ஏன் ஆக முடியாது என்று நினைக்கிறார்கள்.
ராமதாஸ் வன்னிய சமுதாயத்தைக் குறிவைத்து அரசியல் நடத்துகிறார். அந்தச் சமுதாயம் எண்ணிக்கையில் முஸ்லிம்களை விட அதிகம். வன்னியர்கள் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் திரண்டு வசிக்கின்றனர். மெஜாரிட்டியாக உள்ளனர். எனவே வன்னியர் ஓட்டுக்களைப் பிரித்தெடுத்தால் மற்ற கட்சிகளுக்குப் பெரிய பின்னடைவு ஏற்படும். எனவே அவரால் பேரம் பேசி அதிக இடங்களைப் பெற முடிகிறது. முஸ்லிம்கள் எந்த மாவட்டத்திலும் திரண்டிருக்கவில்லை. எனவே நாம் பிரிக்கும் ஓட்டுக்கள் இரண்டு மூன்று சதவிகிதம் என்பதால் பேரம் படிவது கிடையாது. கேரளாவில் முஸ்லிம் லீக் வெற்றி பெறுகிறது என்றால் சில மாவட்டங்களில் முஸ்லிம்கள் மெஜாரிட்டியாக உள்ளது தான் காரணம். புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதையாக மற்றொரு ராமதாஸாக ஆகலாம் என்று கனவு காண்கிறார்கள். மற்றொரு லத்தீஃபாகக் கூட இவர்கள் ஆக முடியாது என்பது தான் உண்மை. மக்கள் எதனால் நம் பின்னே திரண்டார்கள்? தேர்தலில் போட்டியிடப் போகிறோம் என்ற பிரச்சாரத்தைக் கேட்டா? நிச்சயமாக இல்லை. தங்களுக்காக இவர்கள் எதையும் கேட்க மாட்டார்கள் என்ற நாணயமான முழக்கம் தான் அவர்களை ஈர்த்தது. கடைசி வரை மக்களுக்காக உழைப்பவர்கள் என்ற நம்பிக்கையைப் பாழாக்கினால் உடனடியாக மக்களின் நம்பிக்கையை இழப்பார்கள். இதைக் கண்கூடாக நாம் காண்கிறோம். எத்தனை மடங்கு சரிவு ஏற்பட்டுள்ளது என்பதை ஒவ்வொரு ஊரிலும் காண்கிறார்கள்.

தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்ற கொள்கையால் மக்களை வென்றெடுத்தோம். எதைச் சொல்லி வென்றெடுத்தோமோ அது தவறு என்று சிலருக்குத் தோன்றுகிறது. தேர்தலில் போட்டியிடுவோம் என்று முஸ்லிம் லீக் கூறி படிப்படியாக அனைத்தையும் இழந்தது. அது சரியான வழி என்று தோன்றுகிறது. அல்லாஹ் சிலரை அப்புறப்படுத்த நாடி விட்டால் இப்படித்தான் மதி கெடுப்பான். எங்களைப் பொறுத்தவரை எந்தப் பதவிக்கும் , வாரியத் தலைவர் பதவி உட்பட ஆசைப்படாமல் கடைசி வரை களத்தில் நின்று சமூகப் போராளிகளாகவே மரணத்தைத் தழுவ வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். அல்லாஹ்வின் மீது ஒன்பது வருடங்கள் தொடர்ந்து செய்து வந்த சத்தியத்தை முறிக்க மாட்டோம். எனவே இதை விரும்பக் கூடியவர்கள் மட்டும் நமக்குப் போதும். தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற கொள்கையுள்ளவர்களுக்கு நமது தவ்ஹீத் ஜமாஅத் தகுதியான இயக்கம் இல்லை. ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்கிறோம். தேர்தலில் போட்டியிடுவது தான் சரி என்று நினைக்கின்றவர்கள் யாராக இருந்தாலும் ஏற்கனவே உள்ள இரண்டு கட்சிகளில் ஒன்றைத் தேர்வு செய்து அதில் சங்கமமாவது தான் அந்த விஷயத்திற்கு பலம் சேர்க்கும். தேர்தலில் போட்டியிடுவதற்காகவே புதிதாக முளைக்கும் இயக்கங்களை நிராகரிக்க வேண்டும்.
Thanks...Unarvu Weekly.

10 Comments:

At 11:31 AM, Anonymous Anonymous said...

தேர்தலில் போட்டியிடுவதற்க்கு முன்பே ஒரு இயக்கம் நன்றி சொல்கிறோம் என்ற பெயரில் இயக்கவளர்ச்சிக்கு பாடுபட்டவர்கள் ஓரங்கட்டப்பட்டு பணமுதலைகளை மேடையேற்றியது. இவர்கள் இன்னும் தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏ, எம்பி ஆகிவிட்டால் இந்த சமுதாயத்தையே மறந்து விடுவார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

நபீல்.
nabil4go@hotmail.com

 
At 11:37 AM, Anonymous Anonymous said...

//தேர்தலில் போட்டியிடுவது தான் சரி என்று நினைக்கின்றவர்கள் யாராக இருந்தாலும் ஏற்கனவே உள்ள இரண்டு கட்சிகளில் ஒன்றைத் தேர்வு செய்து அதில் சங்கமமாவது தான் அந்த விஷயத்திற்கு பலம் சேர்க்கும். தேர்தலில் போட்டியிடுவதற்காகவே புதிதாக முளைக்கும் இயக்கங்களை நிராகரிக்க வேண்டும்//

இரண்டு முஸ்லிம் கட்சிகளும் ஒரே தொகுதியில் போட்டியிடும் பொழுது முஸ்லிம்கள் என்னதான் செய்வது??
By..NASSIR.

 
At 3:46 PM, Anonymous Anonymous said...

உங்கள மாதரி கோடம்பாக்கத்து முன்னாள் விலைமகளை நீங்கள் ஜெயிக்கவைக்க இந்நாள் விலைமகள்களுடன் ஆட்டம் போட்டதெல்லாம் மறந்து விட்டதா சகாக்களே... மக்கள் மறக்கவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

 
At 11:42 PM, Anonymous Anonymous said...

அரசியலிலும் நிற்கமாட்டோம் என்கிறீர்கள், முஸ்லிம்களுக்கு அரசியலில் இடஒதுக்கீடு வேண்டுமென்றும் போராடுகின்றீர்கள்.முரண்பாடாக தெரிகிறதே! இதற்கு விளக்கம் தர முடியுமா?

 
At 12:13 AM, Anonymous Anonymous said...

ஏப்பு என்னதான் சொல்ல வரீங்க;அந்த இயக்கம் தேர்தல்ல நிக்கப்போறதா அறிவிச்சதுலேர்ந்து தூக்கம் வரலயாக்கும்;
இட ஒதுக்கீடு தந்த முதல்வருக்கு,நடத்திய பாராட்டு விழா வேறு உங்க தூக்கத்த மட்டுமல்ல,சோறு தண்ணியும் இரங்காம செய்துட்டது போல.......!
விடுங்க......நம்ம சின்னத்திரை நாயகனும், 'ரியல் எஸ்டேட் கிங்'கும் ஏதாவது செய்து அவங்கல ஒரு புடி, புடிக்காமலா உட்றுவாங்க?
அபு ஜாவிது

 
At 9:00 AM, Anonymous Anonymous said...

இடஒதுக்கீடு ஆணையத்தை புதுப்பித்து அதில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு என்று புதிதாக சேர்த்ததற்காக ஆதிமுகவை ததஜ ஆதரித்தது. அதே போல் ததஜவின் தொடர் வீரியமிக்க போராடடத்தால் கிடைத்த இடஒதுக்கீடுக்கு எந்த வாரிய பதவியும், எந்த எம்.எல் ஏ, எம்.பி பதவியும் விலை பேசாமல் வருகின்ற தேர்தலில் திமுக ஆதரவு என்று அறிவித்த ததஜவை எந்த வகையிலும் பதவிவெறிபிடித்த சுயநலவாத தலைவர்கள் நிறைந்த தமுமுகவோடு ஒப்பிடமுடியாது.

Basheer.

 
At 9:09 AM, Anonymous Anonymous said...

//உங்கள மாதரி கோடம்பாக்கத்து முன்னாள் விலைமகளை நீங்கள் ஜெயிக்கவைக்க இந்நாள் விலைமகள்களுடன் ஆட்டம் போட்டதெல்லாம் மறந்து விட்டதா சகாக்களே//
தேர்தலில் ஓட்டு கேட்டு வாடி பொட்ட புள்ள பாட்டு பாட பலபேருடன் குத்தாட்டம் போட்ட வாரியதலைவரை வைத்து கொண்டு இப்படி எழுதுவது சரியா...தலைவா....நீங்கள் குறிப்பிட்ட விலைமாதுவை தமுமுக தலைவர்கள் பல முறை போயஸ்தோட்டத்தில் சந்தித்தது உங்களுக்கு மறந்து விட்டதா? . கடந்த கால தேர்தல்களில் அதிமுகவை தமுமுக ஆதரிதததும் மறந்து விட்டதா?.மேடை தோறும் அல்லாஹ்வின் மீது செய்த சத்தியத்தை மீறிய தமுமுக தலைவர்களை சத்தியவான்கள் என்று கூறுவது சரியா...தலைவா....உங்களின் இயக்க வெறியே இதற்க்கு காரணம்...நிதானமாக சிந்தியுங்கள்.

நபீல்.

 
At 9:25 AM, Anonymous Anonymous said...

திமுக ஆட்சி அமைந்த பிறகு இடஒதுக்கீடுக்காக ஒரு துரும்பையும் அசைக்காத தமுமுக. திமுக கொடுத்த இடஒதுக்கீடுக்கு சொந்தம் கொண்டாடுவது முறையில்லை. மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்று கூறி டெல்லியில் பேரணி நடத்திய தமுமுக தற்போது கிடைத்த இடஒதுக்கீடுக்கு சொந்தம் கொண்டாடலாமா?. யாராவது பாராட்ட கூப்பிட்டால் உடனே ஒத்துக்கொண்டு போய் அமரும் திமுக தலைவர் தமுமுக மாநாட்டிற்க்கு வந்தiதை வைத்து இடஒமுக்கீடுக்கு தமுமுக பாடுபட்டது என்று சொல்வது பித்தலாட்டம். ததஜ அல்ல எந்த லட்டர் பேட் இயக்கம் அவரை பாராட்ட அலரழைத்தாலம் கலைஞர் நிச்சயம் கலந்து கொள்வார்.ஒரு மாநில அளவில் தமுமுவால் ஏற்பாடு செய்யபட்ட மாநாட்டில் அரங்கத்திற்க்கு உள்ளே பத்தாயிரம், வெளியே ஜந்தாயிரம் என்று மக்கள் ஆதரவு இல்லாமல் போனது ஏன?. தஞ்சையில் நான்கு லட்ச மக்களை கூட்டிய தமுமுகவால் தற்போது அரை லட்சத்தை கூட கூட்ட முடியவில்லையே. இதை வைத்து பார்க்கும் பொழுது பதவி வெறிபிடித்த தமுமுகவை மக்கள் ஓரங்கட்டஆரம்பித்து விட்டார்கள் என்று தெரியவில்லையா. இதற்க்கு மற்றொரு உதாரணம் தற்போதைய டிசம்பர் ஆறு போராட்டம்.

nabil.

 
At 11:56 AM, Anonymous Anonymous said...

//உங்கள மாதரி கோடம்பாக்கத்து முன்னாள் விலைமகளை நீங்கள் ஜெயிக்கவைக்க இந்நாள் விலைமகள்களுடன் ஆட்டம் போட்டதெல்லாம் மறந்து விட்டதா சகாக்களே//
தேர்தலில் ஓட்டு கேட்டு வாடி பொட்ட புள்ள பாட்டு பாட பலபேருடன் குத்தாட்டம் போட்ட வாரியதலைவரை வைத்து கொண்டு இப்படி எழுதுவது சரியா...தலைவா....நீங்கள் குறிப்பிட்ட விலைமாதுவை தமுமுக தலைவர்கள் பல முறை போயஸ்தோட்டத்தில் சந்தித்தது உங்களுக்கு மறந்து விட்டதா? . கடந்த கால தேர்தல்களில் அதிமுகவை தமுமுக ஆதரிதததும் மறந்து விட்டதா?.மேடை தோறும் அல்லாஹ்வின் மீது செய்த சத்தியத்தை மீறிய தமுமுக தலைவர்களை சத்தியவான்கள் என்று கூறுவது சரியா...தலைவா....உங்களின் இயக்க வெறியே இதற்க்கு காரணம்...நிதானமாக சிந்தியுங்கள்.//

ரதி - மீனா சொகுசு பேருந்து பயணம் மறந்து விட்டதா அல்லது மரத்து விட்டதா..?

 
At 5:13 PM, Blogger Mujibur Rahman said...

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்புள்ள கமெண்ட்ஸ் கொடுத்த அனைத்து சகோதரர்களுக்கும்.குறிப்பாக நபிலுக்குக்கும் தெரிவிப்பது என்னவென்றால்
யார் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று இறைவனுக்கு தெரியும் அதன் பலனை இம்மையிலும் அனுபவிப்பார்கள் நாளை மறுமையிலும் அன்பவிப்பார்கள், நீங்கள் அறிவுடையவர்களாக இருந்தால் சற்று சிந்தித்துபாருங்கள் இறைவன் யாருக்கு தொடர்ந்து வெற்றியை கொடுக்கின்றான் யாருக்கு தொடர்ந்து தோல்வியை தருகின்றான் என்று அதிலிருந்து புறியும் யார் நேரான வழியில் மக்களை அழைத்து செல்கிறார்கள் என்று.
வஸ்ஸலாம்
tmmkmujib@yahoo.com

 

Post a Comment

<< Home